சிவாவை திமிரானவனாக பார்த்தாள், பணம் இருக்கு ஆடுகின்றான் என்று விட்டு விட்டாள். அக்கறையான அப்பாவாக பார்த்தாள், தாயில்லா குழந்தைக்கு அதிக அக்கறை காட்டி குறையை மறைக்க நினைக்கிறான் என்று நினைத்து விட்டு விட்டாள் கடந்த கால கதையில் அன்பானவனும் திடமானவனுமாக பார்த்தாள் அவனும் ஒரு குழந்தை என்று கொஞ்சம் அன்பு காட்ட நினைத்தாள் அதற்குள் வில்லனாக பார்ப்பதை நினைக்கவே முடியாது தவித்தாள் சக்தி "சார் நீங்க பணத்துக்காக இப்டி பன்றது நியாயமே இல்ல சார் அப்டி நீங்க கடத்தினப்போ நானும் சிக்கினேன்ல அந்த மாதிரி எவ்ளோ அப்பாவி பொண்ணுங்க சிக்கி இருப்பாங்க தயவு பன்னி அத விட்றுங்க சார்" என்றாள் அவனுக்கு புரியும் படி
"சக்தி ப்ளீஸ் ஸ்டோப் டோகிங் ரப்பிஷ் " என்று விட்டு குட் நைட் கூறி சென்று விட்டான். அவன் சென்று பல மணி நேரம் கழித்தும் அதை இடத்தில் அமர்ந்திருந்தாள்.
ஆறு மணி அளவில் தாய் ஓடி வந்து "என்ன கண்ணம்மா தூங்காம இப்டி வெளிய உக்காந்து இருக்க என்ன பிரச்சிணை?" என்று கேட்டு கொண்டே அருகில் வந்து அமரவும் தான் தன்னை சுதாகரித்து எழுந்து "அய்யோ இல்லம்மா ஒரூ நான்கு மணிக்குல்லாம் எழூந்துட்டேன் அதான் வந்து உக்காரந்தேன் உட்கார்ந்த படியே தூங்கிட்டேன்"
"ஓஹ் அப்டியா சரி டா ஆமா மாப்பிளை தூங்குறாரா என்ன?"
"ஆமாம்மா அவர் தூங்குறார்" என்று விட்டு வேகமாக அறைக்குள் சென்றாள். அங்கு கட்டிலில் சிவா இல்லை பாத்ரூமில் சத்தம் கேட்கவும் சரி தான் என்று தாராவை எழுப்பி விட்டாள்.
தானும் அடுத்த பாத்ரூம் சென்று முகம் கைகாள் கழுகி வந்து தாயுடன் சென்று காலையுணவு செய்ய ஆரம்பித்தாள்.
சிவாவையும் தாராவையும் தயாராக்கி அனுப்பி விட்டு கொஞ்சம் உறங்கலாம் என்று அறைக்கு சென்று உறங்கினாள். சிவா சாப்பிடும் போதோ தயாராகும் போதோ இல்லை விடை பெறும் போதோ எதிலுமே அவன் முகத்தை கூட பார்க்காது தான் சக்தி நின்றாள் அவள் கவலை எல்லாம்
தமிழ் போன்ற ஒரு கெட்டவனை விட்டு விழகி இன்னொரு கெட்டவனை மணந்தது தான்
ВЫ ЧИТАЕТЕ
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
Художественная прозаகல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே த...
