அனைவரும் கிளம்புவதற்காக காத்துக் கொண்டிருந்த ஜெகன் மணி 7 ஆகிய பின் ஒவ்வொருவராக கிளம்ப இவனும் நிலாவிடம் பேச முயன்றான் .. ஆனால் அவளோ அவனுக்கு பிடி கொடுக்காமல் தனது வேலையை எப்படியாவது விரைவாக முடித்து அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று விடாமல் கணினியின் உள் அவளது தலையை விட்டுக்கொண்டு இருந்தாள்..
ஜெகனின் குழுவில் இருந்த அனைவரும் கிளம்ப எஞ்சி இருந்தது ஜெகனும் நிலாவும் மட்டுமே அவள் அருகில் தனது நாற்காலியில் நகர்த்தி போட்டு அமர்ந்தவன் , அவளிடம் பேச ஆரம்பித்தான்..
" நிலா ..... நிலா.... " என்று அவன் அவளை அழைக்க, அவன் யாரையோ அழைப்பது போல் அவள் வேலையை பார்த்துக்கொண்டே இருக்க அதில் கடுப்பான ஜெகன் அவள் சிஸ்டத்தின் பிளக்கை உருவி கையில் எடுக்க சிஸ்டம் தானாக ஷட் டவுன் ஆகியது..
அதில் எரிச்சலடைந்த நிலா அவனை திரும்பி முறைக்க " நான் எவ்ளோ நேரமா கூப்பிட்டுட்டு இருந்தேன்.. நீ அப்பவே ஒழுங்கா நான் பேசறது கேட்டு இருந்தேன்னா இப்படி பண்ணி இருக்க மாட்டேன்.. சோ இது உன்னோட தப்புதான் .. " என்று ஜெகன் கூற..
அவனிடம் வாயாடாமல், அவள் அவளது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்க அவளை பிடித்து மீண்டும் இருக்கையிலேயே அமர்த்தினான்..
"ஒரு அஞ்சு நிமிஷம் நான் சொல்றதை அமைதியா கேளு நிலா ப்ளீஸ்.. "என்ற ஜெகன் அவளை பார்த்து கெஞ்சலாக கேட்க அவள் அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் அமர்ந்தவாறு அமைதியாக இருந்தாள்.. அதுவே அவள் சம்மதமாக எடுத்துக் கொண்டவன் அவளிடம் பேச ஆரம்பித்தான்..
"அன்னைக்கு நான் அப்படி நடந்துகிட்டதுக்கு என்ன காரணம் சொன்னாலும் அது சரியா இருக்காது... நான் செஞ்சது தப்புதான் அது எனக்கே தெரியும் தப்பு செஞ்சா தண்டனை உண்டுன்னும் தெரியும்.. ஆனா அதுக்காக நீ இப்படி பேசாம இருக்கிறது கொஞ்சம் கூட சரி இல்ல இதுக்கு நீ என்ன அப்பவே 2 அடி கூட அடிச்சு இருந்திருக்கலாம்... நான் அன்னைக்கு கொஞ்சம் கூட நிதானத்துல இல்ல நிலா.. புரிஞ்சுக்கோ .. அன்னைக்கு சில தேவையில்லாத கசப்பான நினைவுகள் எல்லாம் என்ன ரொம்ப போட்டு அழுத்திட்டு இருந்தது.. அதனால தான் நான் எவ்ளோ குடிச்சேன்னு கூட எனக்கு தெரியல.. என்னோட எல்லையை மீறி போனதுனால தான் அந்த தப்பு நடந்தது.. அதுக்காக நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஓகே தான் ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ அப்பவே சொன்ன மாதிரி .. ஆனா இப்படி வேண்டாதவங்க மாதிரி பக்கத்திலேயே இருந்த பேசாம மூஞ்ச திருப்புறது கொஞ்சம் கூட நல்லா இல்லை நிலா..