செண்பகம் நிலாவை ஜெகனுக்கு கல்யாணம் செய்து தர சம்மதம் கேட்க.. அங்கே இருந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை..
ஆனால் அநியாயத்திற்கு பதறியது என்னவோ நிலா தான்.. நிலாவின் அம்மா அவள் அப்பாவை திரும்பி பார்க்க , அவர் முகத்தில் சிறு தெளிவு தெரிந்தது.. மெதுவாக எழுந்து அவர்கள் அருகில் வந்தவர், "உனக்கு என்னோட பொண்ணை கட்டிக்க சம்மதமா பா ?? " என்று கேட்க..
ஒரு நிமிடம் கண்ணை மூடியவன் , கண்ணை திறந்து பார்த்தது நம் நிலாவை தான்.. அவளை பார்த்துக்கொண்டே நிலாவின் தந்தையிடம் "உங்க பொண்ணு கிட்ட ஒரு 10 நிமிஷம் பேசிட்டு என்னோட முடிவை சொல்றேன் அங்கிள்" என்று கூறியவன் நேரே சென்று நிலாவை மணப்பெண் அறைக்கு அழைத்து சென்றான்...
உள்ளே வந்து 2 நிமிடங்கள் முழுதாக முடிந்தும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை .. ஜெகன் பேச வாய் திறக்க , அவனையே பார்த்து கொண்டு இருந்த நிலா... அவனை பேச விடாமல் கை நீட்டி தடுத்தவள்..
சார்... எனக்கு புரியுது... இது உங்களுக்கு எவ்ளோ அன்கம்போர்ட்டா இருக்கும்னு... நீங்க எதுவும் சொல்ல தேவையில்லை.. நானே வெளில போய் இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிடறேன் .. என்று கூறி அவள் வெளியில் நடக்க, அவள் கையை எட்டி பிடித்தவன்.. " ஆனா எனக்கு இந்த கல்யாணம் நடக்கணுமே ... "
ஜெகன் அவ்வாறு கூறியவுடன் அவனை புரியாமல் பார்த்தவள் , " ஓஹ் எனக்கு பெரிய மனசு பண்ணி வாழ்க்கை கொடுக்கறீங்க... அதாவது நீங்க செஞ்ச தப்பும் சரி ஆனா மாதிரி.. அதே சமயம் கல்யாணம் நின்ன பொண்ண கட்டிக்கிட்டா கொஞ்சம் ஹீரோயிசம் காட்டுன மாதிரி.. ஒரே கல்லுல 2 மாங்காய்... "
ஹ்ம்மம் அப்படியும் சொல்லலாம்.. என்று அவன் நக்கலாக பதில் சொல்ல..
உங்களுக்கு வெக்கமா இல்லை.. இப்படி சொல்ல..
சற்று சீரியஸ்சாக யோசித்தவன் , " இல்லையே ... " என்று கூற.. நிலாவிற்கு பிபி தானாக எற ஆரம்பித்தது... எதுவும் பேசாமல் சற்று நேரம் அவனை பார்த்தவள்.. திரும்பி நடக்க ஆரம்பித்தாள்..