காலை 3.30 மணி , இருந்தும் அந்த ஜங்க்ஷனில் மனிதர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தனர்..
ஏற்கனவே டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் மெதுவாக படி ஏறி வந்து கொண்டு இருந்தனர்.. ஒரு 55 வயது மதிக்கதக்க ஆணும்.. 25 வயதுடைய பெண்ணும்... அப்பாவும் மகளும் போல..
ரயில் இருக்கும் ப்ளட்பாரம் வந்து அடைந்தவர்கள்.. நின்று இருந்த ரயிலில் அவர்கள் பதிவு செய்த பெட்டியை தேடி சென்று அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளை வைத்தனர்.... வைத்த பெட்டிகளை ஒரு முறை சரி பார்த்துவிட்டு... இருவரும் கீழே இறங்கினர்...
நீங்க கிளம்புங்க அப்பா... வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணுங்க..
இன்னும் 15 நிமிஷம் இருக்கு மா.. ட்ரெயின் எடுக்க.. நீ கிளம்புனா உடனே நான் கிளம்பறேன்...
நான் போய்ப்பேன் பா.. இது வரைக்கும் நான் என்ன தனியா போனது இல்லையா ??
நீ போய்ப தான்... நான் என்ன உன்னோட ஹைதராபாத் வரைக்குமா வரேன்னு சொன்னேன் ?? ட்ரெயின் கிளம்பின உடனே நானும் கிளம்பறேன்... அப்போ தான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கும்...இதுவே உன்னை அங்கே கொண்டு வந்து விட்டுட்டு ஹாஸ்டெல் எல்லாம் எப்படின்னு பார்த்துட்டு. உண்ண அங்கே செட்டில் பண்ணிட்டு வந்து இருந்தா நிம்மதியா இருக்கும்...
இதையே இன்னும் எத்தனை தடவை அப்பா சொல்லுவீங்க ?? எனக்கு காசு ரெடி பண்றதுக்குல்லையே நமக்கு நேத்து ஆயிடுச்சு...
ம்ம்ம் .. என்ன பண்றது மா.. எல்லாம் விதி...
விதின்னு ஒண்ணு இருக்கு அப்பா.. அதுக்காக எல்லாமே விதின்னு சொல்ல முடியாது.... சரி டைம் ஆச்சு நான் போய் உள்ள உட்காருறேன்...
"இரு மா.. சாப்பிட ஏதாவது வாங்கிக்கோ... " என்று கூறிவிட்டு விரைந்து அங்கே இருக்கும் கடைக்கு சென்று 2 குட் டே பிஸ்கேட் பாக்கெட்களும்... 1 தண்ணீர் பாட்டிலும் வாங்கி வந்து அவர் மகளிடம் கொடுத்தார்...