ஹாஸ்டல் வந்தவள் ரெபிரேஷ் ஆகிவிட்டு அவளது இரவு உணவையும் முடித்துவிட்டு கிருஷ்ணாவிற்கு அழைத்தால்..
"ஹலோ சொல்லு வெண்ணிலா..." என்று அவன் அவளை ஒருமையில் அழைக்க அதை கவனித்தவள் அதை அலட்சியப்படுத்தி தான் பேச வந்ததை பேச ஆரம்பித்தாள்..
"நீங்க இப்போ ஃப்ரீ தானே?? ஒரு பத்து நிமிஷம் பேச டைம் இருக்கும்ல??"
ஃப்ரீ தான் வெண்ணிலா என்ன பேசணும்?? இல்ல என்ன கேட்கணும்னு சொல்லுங்க??
"உங்க வீட்ல கல்யாணத்துக்கு கேட்டு இருக்காங்கல்ல அத பத்தி தான்." என்று கூறிவிட்டு அவள் சிறிது தயங்க..
"எதுவாக இருந்தாலும் சொல்லுங்க வெண்ணிலா.." என்று கிருஷ்ணா இவளை மேலும் சொல்லுமாறு ஊக்குவிக்க.. அதில் தன்னை சமன் செய்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.. "எனக்கு இந்த மேரேஜ் செட் ஆகும்னு தோணல.."
ஏன் அப்படி சொல்றீங்க??
"
இல்ல நம்ம ரெண்டு பேர் குடும்பமும் சந்திச்சது நார்மலா இருந்தா பரவால்ல.. ஆனா அப்பா உதவி கேட்டு அதைப் பத்தி பேசி, அப்புறம் தான் மத்தது எல்லாம் நடந்தது.. சோ ... " என்று அவள் இழுக்க..
வெண்ணிலா பிசினஸ் வேற.. பேமிலி வேற.. நீங்க ஏன் ரெண்டையும் போட்டு கன்பியூஸ் பண்ணிக்கறீங்க ??
அத வெறும் பிசினஸ் டீலா மட்டும் பாருங்க.. இத பேமிலி ப்ரொபோசல்லா பாருங்க...
நான் கூட நீங்க பேசணும்னு சொன்ன உடனே ஏதோ லவ் விஷயமா இருக்கும்னு யோசிச்சேன்...
லவ்வா ?? என்று அவள் வாய் தானாக முனுமுனுக்க அப்பொழுது அவளது நினைவில் ஜெகனின் நெருக்கமும் அவன் தந்த முத்தமுமே நியாபகம் வந்தது.. சிரமப்பட்டு அதை ஒதுக்கியவள் கிருஷ்னாவின் பேச்சை கவனிக்க ஆரம்பிக்க அவன் இவளிடம் தான் ஏதோ கேட்டுவிட்டு அவளது விடைக்காக காத்து கொண்டு இருந்தான்..