ஜெகன் ஏதேனும் விளக்கம் அளிப்பான் என நிலா அவன் பேச காத்திருக்க , ஜெகனோ அவளிடம் எதுவும் கூறாமல் அறைக்குள் நுழைந்து கொள்ள... இவளோ தானே சென்று கேட்கலாம் என்று முடிவு எடுத்து அவர்கள் அறைக்குள் இவளும் நுழைந்தாள்....
உள்ளே நுழைந்தவள் , "எதுக்கு இப்போ சென்னைக்கு போறோம் ??" என்று ஜெகனிடம் கேட்க..
ஏன் ??
என்ன ஏன்??
ஏன் நம்ம சென்னைக்கு போகணும்? இங்கேயே இருக்கலாமே...
அவள் மீண்டும் மீண்டும் விடாமல் கேட்டவுடன் ...
ஏன் நிலா உனக்கு சென்னைக்கு போக பிடிக்கலையா??
பிடிக்குது பிடிக்கலன்னு இல்ல ....ஏன் திடீர்னு போகணும்னு முடிவு எடுத்தீங்கன்னு கேட்டேன்...
சென்னைக்கு போலாம்னு சொன்ன உடனே நீ ரொம்ப சந்தோஷப்படுவன்னு நினைச்சேன்... உனக்கு ஹைதராபாத் அவ்ளோ பிடிச்சு இருக்கா என்ன??
ஜெகன் மீண்டும் பதில் அளிக்காமல் இவ்வாறு அவளை கேட்டவுடன் , அவனை சிறிது நேரம் பார்த்தவள் அவனிடம் "சொல்ல இஷ்டம் இல்லைன்னா ... அதையே நேரா சொல்லலாம்... ஜெகன் சார்... நான் எதுவும் நினைக்க மாட்டேன்.. " என்று கூறிவிட்டு வெளியில் சென்றவள் சமையல் அறைக்குள் நுழைந்து சிறிது தண்ணீர் குடித்து தன்னை சமன் செய்து கொண்டாள்....
நிலா..... நிலா.... ஜெகன் அவளை அழைத்துக்கொண்டே சமையலரை வர... இவளோ "எதுவும் சொல்ல வேணாம்... நான் எதையும் கேட்கறதா இல்லை... "
"அத்தை அவ எதுவும் கேட்கறதா இல்லையாம்.. நீங்க என்கிட்டயே பேசுங்க " என்று ஜெகன் அலைபேசியில் கூற...
அப்பொழுது தான் அவன் மொபைலுடன் இருப்பதை கவனித்தவள், யாரிடம் இவ்வாறு கூறுகிறான் என்று பார்ப்பதற்காக அவன் அருகில் சென்று அவன் காதில் வைத்து இருக்கும் போனை இழுக்க...
"அத்தை என்னையும் உங்கக்கூட பேசக்கூடாதுன்னு சொல்லி போனை பிடுங்கறா. என்னன்னு கேளுங்க அத்தை... " என்று கூறி அவளிடம் போனை தந்தவன் ஒற்றை கண்ணை சிமிட்டி, கீழ் உதட்டை பிதுக்கி சோ சோ என்று அவளை கேலி செய்து சிரித்துக்கொண்டே அங்கே இருந்து அகன்றான்...