அனைவரும் ஆட்டமும் , பாட்டமும் சந்தோஷமாக திருமண மண்டபம் வந்து சேர்ந்தனர்...
இவர்கள் பேருந்து ஈரோடிற்குள் நுழைந்த உடனே ஹரிஷ் போன் செய்து நிலாவிடம் கூறிவிட... அவர்களுக்கு தாங்கள் தங்கி இருக்கும் மண்டபத்தின் இடத்தை ஷார் செய்தாள்..
இவர்கள் பேருந்து மண்டபத்தில் முன் வந்து நிற்கும் பொழுது மணி மாலை 6 ஆகி இருந்தது.. அனைவரும் இறங்கி உள்ளே செல்ல.. வெண்மதி தான் அனைவருக்கும் பன்னீர் தெளித்து வரவேற்று கொண்டு இருந்தாள்..
இவர்கள் நுழைவதை கண்டவுடன் , பக்கத்தில் இருந்த பெண்ணிடம் ஏதோ காதில் கூறியவள் , விஷமமாக சிரித்துக்கொண்டு இருந்தாள்..
முதலில் ஹரிஷும் , ஜெகனும் நுழைய ஹரிஷை விடுத்து ஜெகனின் மேல் பண்ணீர் மழை பொழிந்தது.. அவன் சுதாரிப்பதற்குள் அவன் கண்ணத்தில் சந்தனத்தை தன் இரு கைகள் கொண்டும் அப்பி இருந்தாள் வெண்மதி...
அவனுடன் வந்தவர்களும் , அங்கே இருந்தவர்களும் சற்று அதிர்ச்சியாக ஜெகனோ , " கொஞ்சம் மொக்க பிளான் தான் இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன் .. உன் மனசு சங்கட பட கூடாதுன்னு தான் வென்ஸ்.. அடுத்த பிளாணாவது கொஞ்சம் இன்ட்ரெஸ்ட்டா யோசி டா தத்தி.. " என்று கூறியவன் .. அவர்கள் குடிக்க வைத்து இருந்த தண்ணீரை எடுத்து முகம் கழுவி இருந்தான்...
அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு அங்கே வந்த நிலாவின் அப்பா வெண்மதி செய்ததற்காக தான் மன்னிப்பு வேண்டினார்..
என்ன அப்பா நீங்க?? அவ சின்ன பொண்ணு.. சும்மா செஞ்சா.. அதுக்காக என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்கணுமா ?? நீங்க போய் கல்யாண வேலையை பாருங்க என்று கூறி அவரை சமாதானம் படுத்தி அனுப்பி வைத்தான்.. அப்பொழுது தான் அங்கே இருந்தவர்களுக்கு இவள் வெண்ணிலாவின் தங்கை என தெரிந்தது..
அதன் பின் உள்ளே நுழைந்தவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டு தனி தனி குழுவாக அமர்ந்து இருந்தனர்..
மணி மாலை 7.30 ஆகி இருக்க , நிச்சியதார்தத்திற்காக மாப்பிள்ளையை அழைத்து வந்தனர்...
அடுத்து பொன்னையும் சிறிது நேரத்தில் அழைத்து வர.. அங்கே வந்த நிலாவின் கண்கள் முதலில் தேடியது தனது அலுவலக ஆட்கள் எங்கே அமர்ந்து இருக்கின்றார்கள் என்று தான்.. அவர்களை பார்த்து சிறு புன்னைகையுடன் தலை அசைத்தவள் அங்கே அவளுக்கு உரிய இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்...