கொஞ்ச நேரம் நடக்கலாம் வா..
போடா கஷ்டமா இருக்கு....
கொஞ்சம் நேரம் தாண் மித்ரா... என் கையை பிடிச்சுக்கோ.. வா பதினஞ்சு நிமிஷம் தான் ... குட்டி வாக் தான் மித்து....
ப்ளீஸ் ஜந்து இன்னைக்கு ஒரு நாள் மட்டும்...என்னோட செல்ல ஜந்துல...
இல்ல... அர்ஜுன் வந்தா என்ன தாண்டி திட்டுவான்... அவனா இருந்தா இந்நேரம் அமைதியா கூட போய் இருப்ப... அவன்கிட்ட ஏம்மாத்த முடியாதனால அவனை மீட்டிங் துரத்தி விட்டுட்டு என்னை பிடிச்சு வெச்சு இருக்க நீ... இரு நான் அவனுக்கே கால் பன்றேன்... நீ நான் சொன்ன கேட்க மாட்ட...
இல்ல இல்ல... நான் வரேன் வா.. அர்ஜுன் திட்டுவாறு... என்று சினுங்கியவள் மெதுவாக அண்ண நடை நடந்தாள், தனது 9 மாத மகவை வயிற்றில் சுமந்துகொண்டு .
மித்ராவின் கையை பிடித்து கொண்ட ஜெகன் , அவள் நடைக்கு ஏற்ப அவளை தாங்கிக்கொண்டு அவளுடன் நடக்க ஆரம்பித்தான்...
இருவரும் பேசியப்படியே ஐந்து நிமிடம் நடந்து இருப்பார்கள்...
ஜெகன் ..... ரொம்ப வலிக்குது... எங்கே நடப்பதற்காக பொய் கூறுகிறாளோ என்று அவள் முகத்தை ஆராய்ந்தவன், அவள் முகம் கடும் வலியில் சுருங்க...மித்ரா... என்ன பண்ணுது ?? ரொம்ப முடியலயா ?? மூஞ்சி எல்லாம் இப்படி வேர்குது....
ம்ம்ம்.. ரொம்ப வலிக்குது டா...
அப்போ ஹாஸ்பிட்டல் போயிடலாம்.. ஒரு நிமிஷம் பொறுத்துக்கோ டீ... என்று அவளிடம் கூறியவன், ஒரே ஓட்டமாக சென்று காரை எடுத்து வந்து அவளை அதில் ஏற்றி ஹாஸ்பிட்டல் அழைத்து சென்றான்...
நேரம் கூட கூட அவளுக்கு வலி அதிகரிக்க ஆரம்பிக்க.. அர்ஜுனுக்கு அவன் கால் செய்ய.. ரிங் போய்க்கொண்டே இருந்தது.. அவன் எடுக்கவில்லை.. மீட்டிங்கில் இருப்பான் என்று இவன் சக்திக்கு அழைக்க போக.. ஜெகன் ஹாஸ்பிட்டல் போய் பாத்துட்டு சொல்லிக்கலாம்... என்று மித்ரா முனக..
இல்ல நிலா உனக்கு வலி ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு பாரு.. சோ அர்ஜுனை ஹாஸ்பிட்டல் வர சொல்லிடலாம் .. என்று அவன் மீண்டும் முயற்சிக்க.. மித்ராவால் வலியை தாங்க முடியாமல் அழுக.. கால் செய்வதை விடுத்து அவளின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு காரை செலுத்தினான்...
அவளை ஹாஸ்பிட்டல் அழைத்து வந்து உள்ளே சேர்ப்பதற்குள் மித்ராவின் வலி பன்மடங்காக பெருகியது... அவளை சோதித்த டாக்டர் பிரசவ வலி தான் என்று கூறி.. அவளை அட்மிட் செய்தனர்...
உடனே மீண்டும் அர்ஜுனிற்கு தொடர்பு கொள்ள, அப்பொழுதும் அவன் எடுக்காமல் போக.. சக்திக்கு அழைத்து விஷயத்தை கூறி விரைவாக வர சொன்னான்..
அவனே மித்ராவின் பெற்றோருக்கும் , அர்ஜுனின் அப்பாவிற்கும் விஷயத்தை சொல்ல.. அனைவரும் விரைவில் வருவதாக கூறி வைத்தனர்...
அர்ஜுன் ஜெகனை நோக்கி வேக எட்டுக்களுடன் நெருங்கும் பொழுது நர்ஸ் குழந்தையை வெளியில் கொண்டு வந்து ஜெகனின் கைகளில் தருவதற்கும் நேரம் சரியாக இருந்தது...
நர்ஸை பார்த்த அர்ஜுன் மித்ராவை விசாரிக்க, மித்ரா நலமாக இருப்பதாக கூறினார்...
மித்ராவின் நலம் அறிந்த பின்னே அர்ஜுனின் கவனம் ஜெகனின் கைகளில் இருந்த குழந்தையிடம் சென்றது..
அதற்குள் சக்தியும் காரை பார்க் பண்ணிவிட்டு அவர்களிடம் வந்து சேர்ந்தான்..
குழந்தைக்கு பட்டும் படாமல் ஒரு குட்டி முத்தம் தந்தவன்... "ரொம்ப பயந்துட்டேன் பட்டு குட்டி.. " என்று கூறி அவன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தான்...
![](https://img.wattpad.com/cover/221305079-288-k501127.jpg)