ஜீ.... ஜீ..... ஜீஜீ.....
ஏன் டா இப்படி கத்துறீங்க ??
ஜீ... ஒரு டான்ஸ்.....
ஜெகன் அவர்களை விளையாட்டாக முறைக்க....
ஜீ... நீங்க என்ன முறைச்சாலும் நாங்க பயப்பட மாட்டோம்.. நீங்க கண்டிப்பா இப்போ ஆடி தான் ஆகணும்...
"
நீங்க மட்டும் இப்போ ஆடலேனா" என்று ஒருவன் சொல்லி முடிப்பதற்குள்..
ஜெகன் "ஆடலேனா???" என்று எதிர் கேள்வி கேட்க..
நாங்க ஆடுவோம்...
அடேய்... படுத்தாதீங்க டா...
ஜெகன் அருகில் அமர்ந்து இருந்த ஹரிஷ் "தயவு செஞ்சு ஆடிருங்க ஜீ.. இவனுங்க ஆடுறது எல்லாம் கண் கொண்டு பாக்க முடியாது... "
நீங்க வேற ஏன் ஹரீஷ் ?? என்று ஜெகன் மறுத்துக்கொண்டு இருக்கும் பொழுதே.. ஆடுவதாக மிரட்டிய ஒருவன் நிஜமாகவே எழுந்து ஆட ஆரம்பிக்க... அவன் ஆடுவதை கண் கொண்டு பார்க்க முடியாமல் அவனை இழுத்து அமர வைப்பதற்குள் அனைவருக்கும் போதும் போதும் என்று ஆனது...
தான் ஆடாமல் இவர்கள் அடங்க மாட்டார்கள் என்று நினைத்த ஜெகன் எழுந்து நிற்க... அந்த வேன் முழுவதும் விசில் சத்தம் காதை பிளந்தது...
ஜெகன் ஆட தயார் என்று அறிந்தவுடன் அவனுக்கு என ஏற்கனவே தயார் செய்து வைத்து இருந்த பிளே லிஸ்ட்டை ஒலிக்க விட.. முதல் பாடலாக " ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் " பாடல் ஒலிக்க ஜெகன் சிரித்துக்கொண்டே இருபக்கமும் தலையை ஆட்டியவன் மெதுவாக பாடலுடன் ஐக்கியமாகி ஆட ஆரம்பிக்க....
ஹரிஷ் , ஜெகனை சந்தித்த நாள் முதல் நடந்த நிகழ்வுகளை அசை போட்டவன் ஜெகனின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று புரியாமல் யோசித்து கொண்டு இருந்தான்...
அப்பொழுது அவனுக்கு ஒரு அழைப்பு வர அவனது மொபைலை எடுத்து பார்த்தவன் அழைப்பது வெண்ணிலா என்று அறிந்தவுடன் அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான்...