10.நெயிரிச்சியின் முழுவல் நீ

1.9K 89 40
                                    

போன் காலை முடித்துவிட்டு திரும்பி பார்த்த ஜெகன் அங்கே நிலா இல்லாததால் சிறிது பதட்டம் அடைந்து அவன் அறைக்கு பக்கத்தில் எங்கேனும் இருக்கிறாளா என்று தேட ஆரம்பித்தான்..

அவள் எங்கே தேடியும் கிடைக்காததால் நேராக அவர்களது சீனியர் மேனேஜர் இருக்கும் அறைக்கு சென்று பார்க்க முடிவெடுத்து அங்கே ஜெகன் விரைந்து செல்ல அலன் யூகித்தது போல் நிலா அங்கே நிலா இருந்தாள்   ..

நிலாவின் முகத்தை ஆறாய்ந்தவனுக்கு பெரும் வியப்பே ஏற்பட்டது.. ஏனெனில் நிர்மலமான முகத்துடன் கண்களில் கணலும் உதட்டில் ஏளன புன்னகையும் உடலில் நலினமோ, இருக்கமோ இன்றி சாதாரணமாக நின்று இருந்தாள்..

அவர்களது மேனஜர் முகத்தில் தான் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டு இருந்தது.. ஜெகன் அறை கதவை கூட தட்டாமல் உள்ளே நுழைந்தத்தில் மிகவும் கடுப்பாகி " கொஞ்சம் கூட மேன்னேர்ஸ் இல்ல.. கதவை தட்டிட்டு வர தெரியாதா ??"

கதவுக்கு பதிலா உங்கள தான் ரெண்டு தட்டு தட்ட வந்தேன் ஆனா இங்க சீனி மாறி போச்சு... என்று இவன் சிரிக்காமல் சீரியஸாக தமிழில் சொல்ல பக்கத்தில் நின்றிருந்த நிலா அவன் கூறியதில் ஏளனச் சிரிப்பை விடுத்து உதட்டில் குறுநகை பூக்க.. கண்களில் ஜெகனை பார்த்து சிரித்துவிட்டு திரும்பி மேனேஜரை பார்க்க...

பாவம் தமிழ் தெரியாத அவரும் அவனை என்ன கூறினாய் என்று ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டு இருந்தார்..  அதற்கு ஜெகன் "ஒரு முக்கியமான கால்  நிலாவுக்கு வந்தது அதான் கூப்பிட வந்தேன் " என்று கூறிவிட்டு அவளை கையோடு அழைத்து கொண்டு சென்று விட .. மேனேஜருக்கு தான்  சிறிது அவமானமாக போனது.

ஜெகன் பேச வாயை திறக்க.. நிலாவோ "உங்க வாட்ச் மென் வேலை முடிஞ்சதுனா கிளம்பலாமா ?? " என்று அவனிடம் நக்கலாக கேட்க..

அவளது நக்கல் கலந்த  குரலில் அவள் மீது இருந்த வியப்பு போய் கடுப்பு குடியேறியது ஜெகனுக்கு..

லூஸா நீ.. அப்போ அந்த மேனேஜர் பத்தி கரெக்ட்டா தானா ஜட்ஜ் பண்ணி இருக்க.. அப்புறம் ஏன் இந்த ப்ராஜெக்ட்ல வர்க் பன்னுவேன்னு அடம் பிடிச்ச ??

நெயிர்ச்சியின் முழுவல் நீWhere stories live. Discover now