அர்ஜுனிடமிருந்து உயிர் தப்பித்த ராஜா மண்டபத்தில் இருந்து வெளியியே நடக்க முடியாமல் நடந்து வர, அவனை அப்படியே அலேக்காக தூக்கியது நால்வர் அடங்கிய குழு...
அந்த நாலு பேரும் ராஜாவை அர்ஜுனின் ஆணைப்படி அவன் கூறிய இடத்தில் அடைத்து வைத்தனர்...
மண்டபத்தின் உள்ளே அர்ஜுன் அங்கே இருந்த அனைவருக்கும் ராஜாவுக்கு நிலாவை எப்படி தெரியும் என விளக்க ஆரம்பித்தான் .. நிலா ஒரு இன்டர்ன்ஷிப்காக அவள் காலேஜில் இருந்து அர்ஜுனின் கீழ் வேலை செய்யும் பொழுது ராஜா அர்ஜுனின் கம்பெனியில் தான் வேலை செய்து கொண்டு இருந்தான் .. ராஜாவை அந்த இன்டர்ன் ப்ரொஜெக்ட்கு அர்ஜுன் பொறுப்பு எடுத்து கொள்ள கூறி இருந்தான்..
அவளை பார்த்த நாள் முதலே ராஜாவின் கண் நிலாவின் மேல் விழுந்தது... ஒரு வாரம் சென்று இருக்க, நிலாவிடம் அவனுக்கு அவள் மேல் உள்ள ஆசையை உரைத்தவன் , அவளிடம் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி கொண்டு இருக்க... ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத நிலா அர்ஜுனிடம் சென்ற புகார் செய்தாள்..
நிலாவின் புகாரை உறுதிசெய்த அர்ஜுன் ராஜாவை கூப்பிட்டு வார்ன் செய்து அனுப்ப அந்த கோபத்தில் ராஜா நிலாவை கொஞ்சம் மோசமாக மிரட்ட ஆரம்பிக்க... ராஜாவின் மேல் தன் கவனத்தை வைத்து இருந்த அர்ஜூனின் கண்களில் இது தப்பாமல் சிக்கியது.. அன்றே அவனை போட்டு போலந்து கட்டியவன் அவனை வேலையை விட்டு தூக்கி இருந்தான்.. இனி நிலாவின் பக்கம் அவன் தலை வைத்து படுக்க கூடாது என்ற உத்தரவுடன்...
அனைத்தையும் கேட்டவர்களுக்கு நிலாவின் மேல் சிறிதும் தவறு இருப்பதாக தோன்றவில்லை ஆகையால் கிருஷ்ணாவின் பெற்றோர் இருவரையும் மணமேடையில் மீண்டும் அமர சொல்ல.. நிலா அவரை மறுத்து பேச ஆரம்பித்தாள் ..
அவள் தந்தையிடம் சென்றவள் "எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லப்பா .. " என்று கூற அவரோ "என்னமா சொல்ற?? அதான் எல்லாம் குழப்பமும் தீர்ந்ததே ?? " என்று அவளை சிறு பதட்டத்துடன் பார்க்க..