2.நெயிர்ச்சியின் முழுவல் நீ

2.3K 118 65
                                    

காலை 6 மணிக்கு அலாரம் சத்தத்தில் கண் விழித்தவள்.. எழுந்து தன் காலை கடன்களை முடித்துவிட்டு .. ஹாஸ்டலில் இருக்கும் மொட்டை மாடிக்கு சென்று அந்த இளங்காலையை ரசிக்க ஆரம்பித்தவளுக்கு குளிர் உடலை ஊடுருவியது...

தமிழ்நாட்டு வெயிலுக்கு பழக்க பட்டவளுக்கு அந்த குளிர் உடலுக்கு ஏற்புடையதாக இல்லை.. சிறிது நேரம் அமர்ந்து விட்டு குளிக்க சென்றால்.. குளித்து உடை மாற்றி சாப்பிட்டுவிட்டு மதிய வேலைக்கு தேவையான உணவுகளை பேக் செய்துகொண்டு முதல் நாள் வேலைக்கு சென்றால்...

அங்கே அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றவள்.. முதல் நாள் வேலை நல்லபடியாக தொடற வேண்டும் என்ற வேண்டுதலுடன் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி தன் நடையை செலுத்தினால்.. ஹைதெராபாத் ஹைடேக் சிட்டியில் வேலை.. இவள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து அங்கே செல்ல மெட்ரோ ரயில் எரியவளின் மனதிற்குள் சிறு பயம்.. என்னதான் 3 வருட அனுபவம் இருந்தாலும் புது ஊர்.. புது மனிதர்கள்.. தெரிந்தவர் என்று யாரும் இல்லை..

இப்படி பல சிந்தனைகளில் இருந்தவளிடம் மனசாட்சி கேள்வி கேட்டது.. ' இதுவரை யார் உன்னுடன் இருந்தது ?? ' அவளின் உதட்டில் சிறு ஏளன புன்னகை .. அதன்பிறகு அவள் முகத்தில் எந்த வித கலக்கமும் இல்லை.. அவள் இறங்கும் இடத்திற்கான அறிவிப்பு வர இறங்கியவள் .. அவள் ஆபீஸ்க்கு சென்று தான் வந்ததை தெரிவித்தாள்..

புதிதாக சேருவதற்கான அனைத்து பார்மாலிடீசையும் முடித்துவிட்டு அவளையும் அவளுடன் புதிதாக அன்று சேர்ந்த மற்ற 9 பேரையும் ஆபீசில் அறிமுக படுத்த ஹச்.ஆர் அழைத்து சென்றார்..

பொதுவான அறிமுகம் நடக்க .. பின்பு அன்று மதியம் வரை அவர்களுக்கு அந்த ஆபீஸின் ரூல்ஸ் மற்றும் வேலை செய்யும் முறை பற்றி விளக்கினார்.. அதையடுத்து அவர் அவர் வேலை செய்யும் குழுக்களை பற்றி சிறு விளக்கம் கொடுத்தவர். மதிய உணவு முடித்த பிறகு அவர் அவர் குழுவில் அறிமுகப்படுத்துவதாக கூறினார்..

நெயிர்ச்சியின் முழுவல் நீOù les histoires vivent. Découvrez maintenant