3.நெயிர்ச்சியின் முழுவல் நீ

1.8K 109 50
                                    

வாழ்க்கை தான் எவ்வளவு விசித்தரங்களை கொண்டுள்ளது... என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை வெண்ணிலாவால்...
படுக்கையில் படுத்து இருந்தவள் அவளுக்கு விவரம் தெரிந்ததில் இருந்து அவள் கடந்து வந்த பாதையை வரிசையாக நினைத்து பார்த்தாள் ... இன்று காலை முதல் நடந்ததை நினைத்து பார்த்தவளின் மனதில் தோன்றியது ஒன்று தான்.. மற்றவர்கள் கூறியதை போல் பெண்களை மதிக்க தெரியாதவனல்ல ஜெகன்.. அவள் கற்று இருந்த வாழ்க்கை பாடம் அவளுக்கு இதை தெளிவாக உணர்த்தியது..

இருந்தும் ஏன் அவனை எல்லாரும் அப்படி கூறுகிறார்கள் என்று அவளுக்கு புரியவில்லை.. ஒரு வேளை அதிகமாக கோபப்படுவானோ?? இருக்கலாம்.. யார் கண்டார்?? ஒரே நாளில் ஒரு மனிதனின் குணத்தை நாம் புரிந்துகொள்ள முடியாதல்லவா.. அப்பொழுதுதான் அவள் மனசாட்சி அவளிடம் " அவனை புரிந்துகொண்டு நீ என்ன செய்ய போகிறாய்?? " என்ற அதிமுக்கிய கேள்வியை அவளிடம் எழுப்ப...

ஆம் அவரை பற்றி எதற்கு நான் வீண் ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறேன்?? என்னுடைய வேலையை சரியாக நான் செய்யும் வரை எனக்கு என்ன பிரச்சனை வரபோகிறது? அப்படி இருக்க யார் எப்படி இருந்தால் எனக்கு என்ன?? என்று எண்ணிக்கொண்டு தன் தந்தையை அழைத்தால்..

ஹலோ.. அப்பா .. என்ன பண்றீங்க??

வெளில வேலையா வந்து இருந்தேன் மா.. இப்போ வீட்டுக்கு போய்டு இருக்கேன்... உனக்கு முதல் நாள் வேலை எப்படி போச்சு?? ஒன்னும் பிரச்சனையில்லையே??

இல்ல பா.. நல்ல போனது.. ஒரு பிரச்சனையும் இல்ல.. எங்க டீம் ஹெட் கூட தமிழ் தான் பா..

அப்போ அவ்ளோவா உனக்கு கஷ்டம் இருக்காதுல??

இல்ல பா..

சரிமா சாப்டியா??

ஆச்சு பா...

சரி தூங்கு டா.. காலைல பேசறேன்..

"ம்ம் சரி பா... " என்று கூறி போனை வைத்துவிட்டு கண் அயர்ந்தால்.

அடுத்த நாள் காலை வெண்ணிலா சற்று சீக்கிரமாக தயாராகி ஆபீஸ் கிளம்பினால்... ஆபீஸ் வந்து அடைந்தவள் நேற்று விட்டு சென்று இருந்த வேலையை தொடர்ந்தாள்..

நெயிர்ச்சியின் முழுவல் நீWhere stories live. Discover now