2. பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்?

841 17 0
                                    

அடுத்த நாள் ஜீவா தன் நண்பர்களான மாதவன், முஸ்தபா மற்றும் ரூபனுடன் தனித்தனி பைக்குகளில் கல்லூரிக்கு செல்ல திட்டமிட்டான். அதுபோல மற்ற மூவரும் கல்லுக்கு செல்ல, ஜீவா தன் கைபேசிக்கான மின்னூட்டல் (charger) பழுதானதால் புதியது வாங்கி விட்டு வருலாம் என்று வேறு திசையில் சென்றான். சில நிமிடங்களில் ஒரு கடையில் அதை வாங்கிவிட்டு வந்தவனின் வாகனம் எத்தனை முறை உயிர்ப்பிக்க முயன்றும் நகராமல் சண்டித்தனம் செய்தது. வேறு வழியின்றி எரிச்சலோடு வண்டியை இழுத்துக் கொண்டே அருகிலிருந்த மெக்கானிக் கடைக்கு சென்று விசாரித்தான். சரியாக பதினைந்து நிமிடத்தில் சரிசெய்து கொடுத்தனர். தன் கைக்கடிகாரத்தை பார்க்க இன்னும் இருபது நிமிடத்தில் கல்லூரி பேருந்து கிளம்பிவிடும் என்பதை உணர்ந்து விரைந்தான்.

தாமதமாக எழுந்ததால் அவசரம் அவசரமாக கிளம்பிய ஜனனி தன் தந்தையை திட்டிக் கொண்டே உணவை உண்டு முடித்தாள்.

"டேடி இது உனக்கே நல்லாருக்கா? இன்னைக்கு தான் உன் பைக்ல பிரச்சன வர்னுமா? நேத்தே சொன்னேன் இந்த பாட்டிய கூட்டிட்டு போகாதனு, கேட்டியா?" என்றாள்.

"நல்லா இருக்கே கத. கும்பகர்ணி மாறி தூங்கிட்டு என்னைய குறை சொல்றா உன் மவ. அங்கிட்டு போயாச்சும் யார் கிட்டயும் வம்பு வளர்க்காம இரு" என்று தன் பேத்திக்கு அறிவுரை வழங்கினார்.

உடனே ஜனனியின் தந்தை, "நீ வேற ஏன்மா? சாரி டா பாப்பா. டேடி தெரியாம பண்ணிட்டேன். நீ safe ஆ போய்ட்டு வா. எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டியா?" என்று கேட்டார்.

"ஆச்சு ஆச்சு. போச்சு போச்சு டைம் ஆய்டுச்சு. பை ஆல் ஆஃப் யு" என்று உரைத்தவிட்டு தன் பெரிய பையோடு வெளியே ஓடி ஒரு ஆட்டோவில் இடத்தை கூறி ஏறினாள்.

"அண்ணா கொஞ்சம் சீக்கிரம் போங்கனா. வாழ்க்கையிலேயே மொத முறையா என் காலேஜ்ல எங்கள டூருக்கு கூட்டிட்டு போறாங்க‌. ப்ளிஸ் சீக்கிரம்" என்றாள்.

புன்னகைத்த அவர், "அதுசரி நல்ல பொண்ணுமா நீ" என்று விரைந்தார்.

ஆனால் சரியாக ஒரு சிக்னலின் முன்பு வண்டி ஓடாமல் நின்றது. இறங்கியவர் வண்டியை சரிபார்த்து கொண்டிருக்க நேரத்தை தன் கைபேசியில் பார்த்தவாறே இறங்கினாள் ஜனனி.

"இப்டி கவுத்திட்டீங்களேனா. டைம் வேற இல்ல. இந்தாங்கனா தேங்க் யூ" என்று அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள். வழியே ஏதேனும் ஆட்டோ வந்தால் ஏறிக்கொள்ளலாம் என்று அவள் நினைக்க சிக்னலில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தான் அதிகம் இருந்தது. அதில் ஒரு வண்டியில் ஜீவா இருப்பதை கண்டவளின் மனம் யோசிக்க துவங்கியது. இதுவரை அவள் அவனிடம் பேசியதே இல்லை. ஆனால் அதிகம் கேள்வி பட்டிருக்கிறாள். இன்று வேறு வழியில்லாததால் தன் துப்பட்டாவை எடுத்து கண்களைத் தவிர்த்து முகத்தை முற்றிலும் மூடிவிட்டு அவனருகே சென்றாள்.

அருகே ஒரு பெண் வருவதைக் உணர்ந்தவன் எதுவும் பேசும் முன்னர் தன் வயிற்றில் கைவைத்து கத்தியவாறே அவன் வண்டியில் அமர்ந்தாள்.

"ஐயோ வலிக்குதே. பார்க்க ரொம்ப நல்ல விதமா தெரியுரிங்க சார் நீங்க. ப்ளிஸ் கொஞ்சம் சீக்கிரமா அந்த காலேஜ் பக்கத்ல இருக்க ஹாஸ்பிடலுக்கு போங்க. அய்யோ முடிலயே. சீக்கிரம் சார். ஆட்டோ வேற கிடைக்கல" என்று அற்புதமாக நடித்தாள்.

மனம் தடுத்தாலும் அவசர உதவியென்று வண்டியை உயிர்ப்பித்தவன் சிக்னலில் பச்சை விழுந்ததும் வேகமெடுத்தான். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இருப்பினும் அவன் தோள்களில் கைவைத்து போலியாக வலியில் முனகிக்கொண்டே இருந்தாள்.

__________________________________________

வணக்கம் மக்களே 💞,

கதை எப்படி போகுதுன்னு மறக்காம சொல்லுங்க 🙏

பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ