7. பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்?

468 17 0
                                    

இப்படியாக அவள் வகுப்பிற்குள் நுழையப் போக அவள் இடது கரத்தை பிடித்தவன் உண்மையான வருத்தத்துடன், "சரி நான் இப்போ என்ன செய்யனும் சொல்லு ப்ளிஸ்?" என்றான்.

அவனைத் திரும்பிப் பார்த்தவள் பெருமூச்சை விட்டு, "அப்போ போய் பைக் ஸ்டார்ட் பண்ணு. நான் வந்துடுறேன்" என்றாள்.

அவளது பிடிவாதத்தை உணர்ந்தவன் வேறுவழியின்றி தன் வண்டியருகே சென்றான். அவனது இந்த செயல் அவளுக்கு ஏனோ பிடித்திருந்தது. அவன் மீது கோபம் இருந்ததாலும் தனக்காக அவன் இத்தனைத் தூரம் இறங்கி வந்தது பிடித்திருந்தது. வகுப்பிற்குள் நுழைந்து தன் நண்பர்களிடம் கூறியவள் அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் விரைந்தாள்.

தீவிரமான முகபாவனையோடு தன் வண்டியில் அமர்ந்திருந்தவன் அவள் வந்ததை உணர்ந்தும் அதை மறைக்க முயற்சிக்கவில்லை. அவன் பின்னால் ஏறியவள் அவள் தோளில் லேசாக தட்டி தான் உடன் இருப்பதாக உணர்த்தினாள். அதில் சற்று இலகுவானவன் தலைக் கவசத்தை அணிந்து வண்டியை உயிர்ப்பித்தான். முதன்முதலாக அவள் தன் வண்டியில் ஏறியபோது தோன்றாத உணர்வு இப்போது அவள் மீது கொண்ட ஈர்ப்பால் அதிகரித்தது. எப்போதும் கவலை என்றால் பைக்கில் பறப்பவன் இன்று தன்னவள் உடன் இருப்பதை உணர்ந்து மனம் இலகுவாக ஓட்டினான். கண்ணாடி வழியே அவள் முகத்தைக் காண அவளோ சுற்றியுள்ளவற்றை ரசித்துக் கொண்டிருந்தாள். இப்படியே சில நிமிடங்கள் கரைய கண்கள் சொருகி அவன் தோள் மீதே தூக்கத்தில் சரிந்தாள் ஜனனி. அது மேலும் அவனை இம்சித்தது. தீடிரென வண்டியை ஜீவா நிறுத்த அதிர்ந்து முழித்தவள் அவனைக் கேள்வியோடு நோக்கினாள்.

"நீ மொதோ தூங்காம வா. விழுந்துட்டேனா உன் parentsக்கு யார் பதில் சொல்றது?" என்றான் சற்று திணறியபடி.

அவனை விநோதமாக பார்த்தவள், "சரி நீ கிளம்பு. லேட் ஆச்சு" என்றாள்.

இப்படியாக அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து விசாரித்து இருவரும் அவர் அறைக்குச் சென்றனர். அறையின் வாசல் வரை வந்த ஜீவா யோசனையுடன் நிற்க அவன் கையைப் பிடித்து இழுத்து உள்ளே அழைத்துச் சென்றாள் ஜனனி. அங்கே உடல் வற்றி ருக்மணி மெத்தையில் அமர்ந்திருந்தார். அவர் கண்கள் ஜீவாவைக் கண்டதும் பிரகாசமானது. அவனோ மனம் கனத்தாலும் பார்வையை வேறுபுறம் திருப்பினான்.

ஏன் ஜீவா அவரை தன் வாழ்வை விட்டு ஒதுக்குகிறான்?
___________________________________________
வணக்கம் மக்களே 💞,

இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன் 😊

பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்Tempat cerita menjadi hidup. Temukan sekarang