32. பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்?

295 12 0
                                    

"சிவா உன்கிட்ட தனியா பேசணும்" என்றாள் ஜனனி.

அதுவரை இவர்கள் இருவரது உணர்வு பரிமாற்றம் கண்டு உள்ளம் நொந்தவன் அவள் கேள்வியில் புன்னகைத்தான்.

"சொல்லு..அந்த பக்கம் ஒரு சிட்டிங் பென்ச் பார்த்தேன். அங்க போலாமா?" என்று அழைத்தான்.

அதைக் கேட்டதும் மறுப்பாக தலையசைத்தவள், "இங்க வேணாம். வெளில போலாம். இங்கிருந்து கொஞ்ச தூரத்தில ஒரு கஃபே இருக்குல அங்க போகலாம்" என்றாள்.

பல மாதங்கள் கழித்து தனியே பேசக் கிடைத்த வாய்ப்பில் மகிழ்ந்தவன், "சரி வா போலாம். எவ்ளோ நாளாச்சு நம்ம இப்படி தனியா பேசி. கொஞ்சம் வெய்ட் பண்ணு ஆட்டோ பிடிச்சிட்டு வர்றேன்" என்று சென்றான்.

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவள் எழுந்து ஆரத்தியிடம் கூறிவிட்டு புறப்படத் தயாரானாள். அப்போது வைஷ்ணவி, "ஹே..ஜீவா வரட்டும். அப்படி என்ன வேலை உனக்கு? உனக்காக ஸ்பெஷலா பாடியிருக்கான். நீ இல்லாட்டி ரொம்ப டிஸபாயின்ட் ஆகிடுவான். ஸோ, ஒரு 5 நிமிஷம் இரு" என்று புரியாமல் அவளை வற்புறுத்தினாள்.

அதைக் கேட்டு சற்று எரிச்சலான ஜனனி, "ம்ச். நான் அப்பறமா ஜீவா கிட்ட சொல்லிக்கிறேன். இப்ப நான் போயே தீரணும்" என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே,

"என்ன சொல்லப் போற என்கிட்ட?" என்று கேட்டுக் கொண்டே ஜீவா வந்தான்.

அவனைப் பார்த்ததும் அவன் முதலில் குறிய அனைத்தும் நினைவுக்கு வர 'இத்தனை தூரம் இந்த பிரச்சினையை வளர விட்டு விட்டோமே' என்ற குற்றவுணர்ச்சி அவளை வாட்டியது.

அவன் விழியோடு விழி கலந்தவள், "சாரி. நான் அப்பறம் உன்கிட்ட அதைப்பத்தி பேசுறேன்" என்று எழுந்து நடக்கத் துவங்கினாள்.

அவள் கூறியதைக் கேட்டு புரியாமல் விழித்தவன் மனதின் கேள்விகளோடு அவளைப் பின்தொடர்ந்தான். ஆனால், அங்கே ஆட்டோவில் சிவா காத்திருப்பதைக் கண்டதும் கால்கள் செயலிழக்க சிலையாக நின்று விட்டான். அதில் ஜனனி ஏறிச் செல்வதைக் காணும் போது அவன் மனதில் குழப்பங்கள் அதிகரித்தன.

அந்த நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல சிவா அவர்கள் உறவைப் பற்றி அன்று கூறியது அர்த்தமில்லாமல் நினைவில் தோன்ற எங்கே சிவாவிற்காக தங்கள் காதலையும் தியாகம் செய்ய துணிவாளோ என்ற அச்சம் முதன்முதலாக அவனுள் தோன்றி வஞ்சித்தது. அவளது நினைவலைகளில் மூழ்கியவன் ஆர்த்தி அழைப்பதையும் கேளாமல் வீட்டிற்கு சென்றான்.

எப்போதும் போலில்லாமல் முக வாட்டத்துடன் வரும் தன் மகனை கண்ட அந்த தாய் அவன் அருகே சென்று அமர்ந்தார். அவனது தலையில் லேசாக தட்டிக் கொடுத்தவர், "என்னாச்சு?" என்று கேட்டார்.

வெகு காலத்திற்கு அவரை ஒதுக்கி வைத்தே பழகியவன் இன்று அவரிடம் மனம் விட்டு பேச முடியாமல் திணறினான். ஜனனியிடம் படபடவென தன் மனதில் தோன்றியதைக் கூற முடிந்த தன்னால் தன் அன்னையிடம் கூட தன் எண்ணங்களை வெளிப்படுத்த முடியவில்லையே என்பது அவனை மேலும் அச்சுறுத்தியது. அவளது எண்ணிற்கு அழைக்க தூண்டிய மனதைக் கட்டுப்படுத்தி தன் அன்னையிடம் 'எதுவும் இல்லை' என்பது போல தலையசைத்து அறைக்குள் சென்று அடைந்தான்.

_________________________________________

வணக்கம் மக்களே,

இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். மறக்காம நீங்க என்ன நினைக்கிறீங்க சொல்லுங்க.

பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்Donde viven las historias. Descúbrelo ahora