6. பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்?

585 18 0
                                    

அடுத்து வந்த நாட்கள் இருவருக்கும் இனிமையாகவே சென்றது. ஜீவா ஜனனியை ரகசியமாக ரசிக்க துவங்கியிருந்தான். ஜனனி அவன் பார்வைகளை உணர்ந்து ரசித்தாலும் அதைக் கண்டு கொள்ளாதது போல காட்டிக்கொண்டாள். இருப்பினும் அவை அனைத்தையும் நண்பர்களிடம் எப்போதும் போல பகிர்ந்து கொண்டாள். அவர்களுக்கு இந்த நிகழ்வுகள் ஆச்சரியம் அளித்தாலும் ஜீவாவிடம் கவனமாக இருக்குமாறு எச்சரித்தனர். இப்படியாக மீண்டும் கல்லூரி சென்ற பின்னர் இந்த பார்வை பரிமாற்றங்கள் தொடர்ந்தன.

ஒரு நாள் ஜனனி தன் நண்பர்களுடன் வகுப்பில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது ஆசிரியரில் ஒருவர் வந்து ஜீவாவின் அம்மா உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக தகவல் கூறினர். அதை அவனிடம் கூறுமாறு இவர்களிடம் கூற பதறியபடி ஜனனி அவன் எப்போதும் நண்பர்களுடன் இருக்கும் மரத்தடிக்கு சென்றாள். ஆனால் அவன் அங்கு இல்லை. அவன் நண்பர்களிடம் விவரம் கூற முஸ்தபா, "என்ன ஜனனி சொல்ற? இதோட மூணாவது தடவ இப்டி தகவல் வருது.ம்ச். எப்படி இருந்தாலும் அவன் போக மாட்டான். நீ விடு" என்றான்.

அவள் குழப்பத்தோடு, "ஏன் போக மாட்டான்?" என்று கேட்டாள்.

உடனே மாதவன், "ஏன்டா நீ வாய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா? அவன் நம்ம கிட்டயே எதுவும் சொல்றதில்ல. இப்போ ஜனனிக்கு தெரியும்னு தெரிஞ்சா அவ்ளோ தான். நம்ம மேல தான் கோபப்படுவான்" என்று முஸ்தபாவைத் திட்டினான்.

ரூபனும் அதை ஆமோதித்தான். அவர்களைப் பார்த்த ஜனனி, "ஏன இவ்ளோ built up தர்றீங்க? ஜீவா என்ன உங்கள கொன்னு புதைச்சிடுவானா? உங்க ஃபிரண்ட்க்கு பிரச்சனனா நீங்க தான அது என்னனு தெரிஞ்சு help பண்ணனும். ப்ளிஸ் என்ன நடக்குதுனு இப்பவாச்சும் சொல்லுங்க" என்றாள்.

அவள் கூறியதன் உண்மையை உணர்ந்தவர்கள் சில நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் அறிந்ததைப் பற்றி அவளிடம் கூறினர். அவர்களிடம் நன்றி உரைத்துவிட்டு அவனைத் தேடிச் சென்றாள். வழியில் ஒரு வகுப்பில் இருந்து வந்து கொண்டிருந்த ஜீவா ஜனனியைக் கண்டதும் முகம் பிரகாசமாக அவளருகே வந்தான்.

வேறு யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவளிடம் பேசினான்.

"என்ன இந்த பக்கம் சுத்திட்டு இருக்க? கூட உன்னோட விநோத ஃபிரண்ட்ஸ வேற காணோம்" என்று புன்னகைத்தான்.

அதற்கு பதிலாக முதல் முறையாக புன்னகைக்காத அவளை கேள்வியோடு பார்த்தான்‌.

"ஜீவா நம்ம அனிதா மேம் வந்து சொன்னாங்க. உன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம hospitalஆ இருக்காங்களாம்" என்றாள்.

அதைக் கேட்டதும் முகம் கறுத்து புருவத்தை விரல்களால் அழுத்தியவன் ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டு அவளிடம், "சரி நீ போ" என்றான்.

அது அவளை மேலும் எரிச்சல்படுத்தியது.

"லூசா நீ? எவ்ளோ பெரிய விஷயம் சொல்றேன். அசால்டா போங்குற. மொதோ நீ கிளம்பு" என்று அவன் கைகளைப் பிடித்து இழுக்க முயற்சித்தாள்.

உடனே தன் கைகளை அவளிடம் இருந்து விலக்கியவன், "ஸ்டாப் ஜனனி. நான் என்ன பண்ணனும்னு நீ எனக்கு lecture எடுக்காத" என்று கத்தினான்.

அது அவள் மனதை பெரிதும் காயப்படுத்தியது. அவனது இந்த கோபத்தால் அவள் கண்களில் நீர் கோர்க்க அதைக் கடினப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டாள். அவனும் தான் நடந்து கொண்டதை எண்ணி வருந்தி அவள் பக்கம் திரும்பினான்.

அவன் பார்வையை உணர்ந்தவள் முகத்தை திருப்பிக் கொண்டு தன் வகுப்பை நோக்கி நடந்தாள்.

"ஹே ஜானு..இங்க பாரு..நான் வேணும்னு செய்யல. சாரி சரியா. அட நில்லு ப்ளீஸ்..ஜானு" என்று கெஞ்சிக்கொண்டே அவளைத் தொடர்ந்தான். சுற்றி இருந்த பலரும் அவனைப் ஒயுவிதமாக பார்க்க அதை உணர்ந்தும் அதைவிட அவள் கோபம் அவனை பெரிதும் வருத்தியது.

__________________________________________

வணக்கம் மக்களே ❤️,

இந்த அத்தியாயம் எப்படி இருந்ததுனு மறக்காம சொல்லுங்க 👍

பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்Donde viven las historias. Descúbrelo ahora