அங்கே கேன்டீனில் வாங்கிய பப்ஸை ரசித்து உண்டு கொண்டிருந்தான் சிவா. அவனது உணர்வுகளை பாடல் மூலம் வெளிப்படுத்தியதில் அவன் உள்ளம் மகிழ்ச்சி அடைந்திருந்தது. தான் வாங்கிய ப்ரெட் ஆம்லேட்டை உண்ணாமல் சிவாவை விநோதமாக பார்த்து கொண்டிருந்தாள் ஆர்த்தி.
அவளது பார்வையை சிறிது நேரம் கழித்தே உணர்ந்தவன், "என்னடி? பசிக்குது கேன்டீன் போலாம்னு என்ன இழுத்துட்டு வந்துட்டு சாப்டாம என்னையே பார்த்துட்டு இருக்க. இப்படியே வச்சிட்ருந்த அப்பறம் நான் எடுத்து சாப்டுறுவேன். சீக்ரெட் போனும். எல்லார்கிட்டயும் நான் பாடுனது எப்படின்னு கேக்கனும்" என்று சொன்னவன் ஜனனியை நினைத்து சிரித்து கொண்டான்.
அவனை உற்று பார்த்தவள், "எல்லார்கிட்டயுமா இல்ல ஜனனி கிட்ட மட்டும் கேக்கனுமா?" என்று கேட்டாள்.
அவள் கேள்வியில் உண்டு கொண்டிருந்தது தொண்டையில் சிக்கி பொறையேர இருமலோடு விழுங்கினான். அவன் தலையில் தட்டி தண்ணீர் கொடுத்தவள் அவன் அதை குடித்ததும் கேள்வி விலகாமல் பார்த்தாள்.
"பதில் சொல்லு?" என்று மீண்டும் கேட்டாள்.
"அது எதுக்கு உனக்கு?" என்றவன் அவள் பார்வையை வேண்டுமென்றே தவிர்த்தான்.
அதில் சந்தேகம் உறுதியாக, "டே அவ நம்ம ஃபரண்டு டா" என்றாள்.
உடனே அவள் புறம் திரும்பியவன், "ஆமா. அதனால என்ன? அவ என் ஃபரண்டு தான். ஆனா அதுக்காக அவ மேல எனக்கு ஃபீலிங்க்ஸ் வரக்கூடாதுனு கட்டாயம் இல்லை" என்றான்.
அதில் கோபமானவள், "பைத்தியக்காரத்தனம் மாதிரி பேசாத. அவளுக்கு ஜீவாவ பிடிச்சிருக்கு. ஜீவாக்கும் அவள தான் பிடிச்சிருக்கு. இதுக்கு நடுல நீ வந்து தேவையில்லாம குழப்பம் பண்ணாத" என்றாள்.
"நான் தேவ இல்லாம பண்றேனா? ஜனனிக்கு அவன எப்போ இருந்து தெரியும். ஒரு ஆறு மாசம் இருக்குமா. எனக்கு அவள பல வருஷமா தெரியும். சின்ன வயசுலருந்து எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிட்டவ கூட என் லைஃப ஷேர் பண்ணனும்னு நினைக்கிறேன். அது தப்பா? நான் மனசு விட்டு அழுததும் அவகிட்ட தான். ரொம்ப சந்தோஷமா சிரிச்சதும் அவ கூட தான். அப்படி பட்டவள விட்டுக் கொடுக்க என்னால முடியாது. ஜீவா ஒரு பாஸிங் க்லௌட். நான் அவள எவ்ளோ நேசிக்கிறேனு ஜனனிக்கு தெரிஞ்சா நிச்சயமா என் அன்ப அவ புரிஞ்சு ஏத்துப்பா. அவளுக்கு நான் தான் ஃபெஸ்ட் ஃபண்ட். ஒரு நல்ல பார்ட்னராவும் அவளுக்கு நான் இருப்பேன்" என்றான் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி.
அவனது அன்பை புரிந்து கொண்ட ஆர்த்தி மனம் வேதனையாக இருந்தது.
"உனக்கு ஏன்டா புரிய மாட்டேங்குது? இட்ஸ் டூ லேட். நீ ஹர்ட் ஆக கூடாதுனு தான் நான் இவ்வளவு தூரம் பேசுறேன். நீ உருகி உருகி பாடுனியே அது கூட அவளால கேட்க முடியல. கரெக்டா அந்த நேரம் அவளுக்கு கால் வந்துடுச்சு. உன் பாட்டே அவகிட்ட போய் சேர முடியாதப்போ உன் காதல் மட்டும் சேர்ந்திடும்னு எந்த நம்பிக்கைல சொல்ற?" என்று கேட்டாள்.
அவள் கேள்வியும் வார்த்தைகளும் அவனை உலுக்கியது. அவன் மெனக்கெட்டு பாடிய பாடல் அவளை சேரவில்லை என்பது அவனுக்கு மனதில் வலியை உண்டாக்கியது. இருப்பினும் தன் எண்ணத்தில் நேசத்தில் இருந்து அவனால் பின்வாங்க முடியவில்லை. எனவே அவ்விடத்தை விட்டு வெளியேறினான். நண்பர்கள் ஏற்கனவே அமர்ந்திருந்த இடத்திற்கு செல்ல அப்போது மீண்டும் மேடைக்கு செல்ல எத்தனித்த ஜனனி அவனைக் கண்டாள்.
அவனைக் கண்டதும் புன்னகையுடன் அருகே வந்தவள் அவனிடம் கை நீட்டினாள். அதை அவன் பற்றியதும் கை குலுக்கியவள், "அட்ரா சக்க. சூப்பரா பாடுனியாமே. இந்த பாட்டி அந்த நேரம் பார்த்து கால் பண்ணி என்ன கேட்க விடாம பண்ணிடுச்சு. ஆனால் நீ என் சிஷயனாச்சே. நல்லா தான் பாடிருப்ப. ஆன்கரிங்கு திரும்ப கூப்டுறாங்க. போய்ட்டு வர்றேன். நீ அடுத்த ரவுண்டுக்கு ப்ராக்டிஸ் பண்ணு. என்ன மனசுல வச்சுக்கிட்டு நாடு. அப்ப தான் லைஃப்ல ப்ரைட்டா வருவா" என்று எப்போதும் போல அவனிடம் பேசிவிட்டு சென்றாள்.
அவனோ, 'உன்ன மனுசுல வச்சிட்டு தான் பாடினேன். நீ தான் கேக்கல' என்று தன்னிடமே ஏமாற்றத்தோடு முணுமுணுத்துக் கொண்டான்.
__________________________________________
வணக்கம் மக்களே,
இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். மறக்காம என்ன நினைக்கிறீங்கனு சொல்லுங்க.
![](https://img.wattpad.com/cover/291405898-288-k303861.jpg)
ESTÁS LEYENDO
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
Novela Juvenilகாதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.