22. மனதில் எப்படி நுழைந்தாய்?

290 14 0
                                    

அவனை நெருங்கியவள் அவன் காதருகே சென்று, "ம்ம்.. நல்லா தான் பாடுற" என்று கூறி சிரித்துவிட்டு விலகி ஓடினாள்.

அவளது செயலில் சிலையானவன் பின் அவளை துரத்தினான். அவன் பிடிப்பதற்குள்  நண்பர்களோடு இணைந்தவள் தன் நாற்காலியில் அமர்ந்து அவனுக்கு பலிப்பு காட்டினாள். அதைக் கண்டவன் குறுநகையுடன் அவளைத் தொடர்ந்து அவளருகே காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

பின் அவன் காதை அவன் திருக, "ஆ...சரி சரி விடு. ஜீவா. மி பாவம்" என்று பாவமாக முகத்தை மாற்றினாள்.

"நீயா? சரியான கேடி" என்றவன் பார்வையை மேடைக்கு திருப்பினான்.

நண்பர்கள் அனைவரும் சிவாவின் பாடலுக்காக காத்திருந்தனர். அவனுக்கு பாடல் பாடுவதன் மீதுள்ள ஆர்வத்தை அறிந்ததால் ஜனனியும் அதற்காக காத்திருந்தாள்.

"உனக்கு ஹெவி காம்பெடிஷன் கொடுப்பான் பாரு என் ஃபரண்ட்" என்றாள் ஜனனி விளையாட்டாக.

அவனும் கேலியோடு, "அதையும் ஒரு கை பார்த்துடலாம்" என்றான் ஜீவா.

சிவாவின் பெயர் ஒலித்ததும் மேடைக்கு வந்தவன் பார்வையை ஜனனி மீதே வைத்தான். அவளும் அவனை உற்சாகப்படுத்தி பாடுமாறு சமிக்ஞை செய்தாள். அதேநேரம் ஜனனியின் கைப்பேசி ஒலித்தது. அவள் அன்னை அழைத்திருந்ததும் அதை ஏற்றாள்.

"என்னமா இந்த டைம்ல கூப்டிருக்கீங்க?" என்று கேட்டாள்.

"ஆமா. அவசரம். அதான். உன் பாட்டி கண்ணாடி காணோம். நீதான் கடசியா எடுத்தியாமே. வீடு முழுக்க தேடிட்டோம்" என்றார்.

"அவ்ளோ தானா? நான் எவ்ளோ முக்கியமா ஒரு கேட்டுட்ருக்கேன். இப்போ இந்த பாட்டிக்கு இதான் முக்யமா? நேத்து என்ன டிவி பார்க்க விடாம சீரியல் பார்த்துட்டுருந்துச்சுல. அதான் அப்படி பண்ணேன்" என்றாள்.

"அடிப்பாவி. அத்த உங்க பேத்தி தான் ஒலிச்சு வச்சிருக்காளாம்" என்றதும் அவரும் வந்து பேசினார்.

இப்படியே ஒருவழியாக இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சிவாவும் அவளைப் பார்த்தே பாடத் துவங்கினான். அவனது பார்வையில் மாற்றத்தை உணர்ந்த ஜீவா அதை உற்று கவனிக்க தொடங்கினான்.

"ஒருதுளி நீர் வேண்டி நின்றேன்
அடைமழை தந்து என்னை மிதக்கவிட்டாய்
சிலுவைகள் நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்"

விழிகள் ஓரம் நீர்த்துளியை
மகிழ்ச்சி தந்து உலர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்ளை கண்ணருகில் காட்டினாய்"

என்று அவன் பாடுவதில் ஒரு துடிப்பு இருந்தது. அதில் ஒரு ஏக்கம் கலந்த வலி தெரிந்தது. அதைக் கண்ட ஜீவாவின் உள்ளம் துணுக்குற்றது. ஜனனியோ தன் கைபேசியில் மும்முரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

"கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரம் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்தின் தேவதையே
வண்ணங்களை தந்துவிட்டு
என் அருகில் வந்து நில்லு
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே.."

என்று அவன் பாடி முடிக்கும் போது சிவாவின் காதல் ஜீவாவகற்கு புரிந்தது.

அவன் ஜனனியை அழைத்து சிவாவை காட்ட பாடல் முடிந்ததை அப்போதே உணர்ந்தவள் பிறகு பேசுவதாக கூறி அழைப்பை துண்டித்தாள். எழுந்து அவனுக்காக கைத்தட்டியவள் அவன் பாடியது அருமை என்பது போல கைக் காட்டினாள். அவள் அதை கேட்கவில்லை என அறிந்தால் அவன் கலங்குவான் என்று அவன் மனம் வாடும் என்று தன் நண்பனை உற்சாகப்படுத்த முயன்றாள்.

___________________________________________

வணக்கம் மக்களே,

இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க...

பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்Where stories live. Discover now