ஜீவாவின் நண்பர்கள் அவன் என்னவென்று நச்சரிக்க எதையோ கூறி சமாளித்து அமரந்தான். கொடைக்கானலில் இறங்கியவர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த ஹோட்டலில் மகிழ்ச்சியாக அவரவர் அறைகளுக்குள் புகுந்தனர். இருவருக்கு ஒரு அறை என்று பதிவு செய்யப்பட்டு இருந்தது.
ஹோட்டலில் காஃபி வாங்கலாம் என்று ஒரு குடுவையோடு(flask) வெளியே வந்த ஜனனி அப்படியே நோட்டமிட்டாள். அவர்கள் அறையில் இருந்த அலைபேசியில் அழைத்திருந்தால் அறைக்கே வந்து கொடுத்திருப்பர். ஆனால் அறையில் அடைந்து கிடக்க பிடிக்காமல் வெளியே வரவே இப்படி யோசித்தாள் ஜனனி. இதழில் பாடலை முணுமுணுத்து கொண்டே கைகளை ஆட்டியவாறே நடந்து வந்தவளின் கரத்தை ஒரு கரம் தன் வசமாக இழுத்தது. இதயம் படபடக்க அவள் பார்க்க ஜீவா என்றதும் நிம்மதி பெருமூச்சு வந்தது.
தன் இதயத்தில் மற்றொரு கையை வைத்து ஆசுவாசப்படுத்தியவளிடம், "உனக்கு எப்படி தெரியும்? இங்க பாரு ஓவர கற்பனை பண்ணிக்காத. நான் வெறும் லிஃப்ட் தான் கொடுத்தேன். யார்ட்டயாச்சும் எதாச்சும் சொன்ன அப்பறம் நல்லா இருக்காது பார்த்துக்கோ" என்று எச்சரித்தான்.
அவனைப் பார்த்து சிரித்தவள், "நான் என்ன நினைக்க போறேன். யெல்லோ சுடிதார்ல இவ்ளோ நெருக்கமா உட்கார்ந்து போய்ட்டிருந்தீங்க. எனக்கு என்ன தோணும் சொல்லு" என்றாள்.
அவள் கூறியது எரிச்சல் மூட்டினாலும் மீண்டும் தன் கண்களை மூடி தன் வண்டியில் ஏறிய பெண்ணின் உருவத்தை யோசித்து பார்த்தான். கண்கள் திறக்க அதே கண்கள் மட்டும் உடையோடு தன் முன் நின்றிருந்தவளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவன் தான் பற்றியிருந்த கரத்தை விட்டான்.
"யூ..நீ தான அது" என்றான் உணர்ந்து கொண்டு.
அவன் தன்னை கண்டுபிடித்ததை உணர்ந்து கண்கள் விரிந்து அவன் மீது சரிந்து விழுந்தாள். அவளை தாங்கியவன் கண்ணஙகளில் தட்டி எழுப்ப முயல அவளிடம் அசைவில்லை. பதட்டத்தோடு அருகே போடப்பட்டிருந்த சோஃபாவில் அவளை கிடத்தியவன் நடந்து சென்று அங்குள்ள ஒருவரிடம் தண்ணீர் பாட்டில் வாங்கினான். அதைக் கொண்டு வரும் முன்னரே கண்களை மெல்லத் திறந்தவள் இதுதான் சமயமென ஓடினாள்.அவள் ஔடுவதைக் கண்டவன், "ஏய்" என்று குரல் கொடுக்க ஓடியவாறே அவன் புறம் திரும்பி, "சாரி ஜீவா. அது நானே" என்று தன் அறைக்குள் மறைந்தாள்.
அவள் சென்றதைப் பார்த்தவனின் இதழில் புன்னகை மலர்ந்தது. அவளது குறும்புகளை நினைத்து ரசித்தவனின் மனதில் ஜனனி புகுந்திருந்தாள்.
_________________________________________________ஹலோ மக்களே 😍,
இந்த அத்தியாயம் எப்படி இருந்ததுனு மறக்காம சொல்லுங்க...
![](https://img.wattpad.com/cover/291405898-288-k303861.jpg)
YOU ARE READING
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
Teen Fictionகாதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.