9. பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்

430 18 0
                                    

ஒருவன் தன் வாழ்வின் மிக முக்கிய பருவமான குழந்தை பருவத்தையே இழந்து விட்டான். பிறகும் அவன் இத்தனை சரியாக இருப்பதை உணர்ந்து அவள் மனம் உருகியது. அதே நேரம் இந்த பெண்மணியின் வலியையும் அவளால் உணர முடிந்தது. அவரது தோளில் தட்டி கொடுத்தவள் அவரிடம் தன் எண்ணைக் கொடுத்து மீண்டும் வருவதாக வாக்குக் கொடுத்தாள். அனைத்தும் சரியாகிவிடும் என உறுதி அளித்து விட்டு ஜீவாவைத் தேடி கேன்டீன் வந்தாள்.

அங்கே தான் வாங்கி வைத்திருந்த தேநீரை கூட குடிக்காமல் வெறித்த பார்த்து கொண்டிருந்த ஜீவாவை கண்டு கொண்டாள். ஏனோ அந்த நொடி அவள் பார்வைக்கு அவன் சிறுபிள்ளையாய் தன் அன்னைக்காக சண்டை போட்டது கற்பனையாக தோன்றியது.

அவன் அருகே சென்று அமர்ந்தவள் அந்த  தேநீர் கோப்பையை தொட்டுப் பார்த்து விட்டு அவனிடம், "அச்சச்சோ ஆறிப் போச்சே. இப்படியா டீய waste பண்ணுவ. சரி போ. எனக்கும் சேர்த்து ஒன்று வாங்கிட்டு வா. அப்படியே கொஞ்சம் பிஸ்கெட்ஸ் உம் வேணும். எந்திரிச்சு போ ஜீவா" என்றாள்.

அவளை முறைத்தவன் எழுந்து அவளுக்கும் சேர்த்து இரண்டு தேநீர் கோப்பைகளை வாங்கி வந்து அமர்ந்தான். அதில் ஒன்றை எடுத்து பருகியவள் விழிகள் அவனை விட்டு விலக மறுத்தது. அவனது காந்தக் கண்கள் துவங்கி அவன் கன்னங்களில் தீட்டிய தாடி வரை அனைத்தையும் ரசித்தாள். அவளது பார்வை உணர்ந்தவனுக்கு அதை எப்படி எதிர்கொள்வது என்று புரியவில்லை. அவளைத் தவிர்த்து பிற இடங்களைப் பார்த்தவாறே தேநீரைக் குடித்தாலும் உடலெங்கும் ஒரு வித குறுகுறுப்பு உண்டானது அவனுக்குள்.

ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் அவள் புறம் திரும்பி, "என்னாச்சு உனக்கு?" என்று கேட்டான்.

அவன் கேள்வியில் தடுமாறினாலும் ஒரு கேலிப் புன்னகையோடு எதுவும் அறியாதது போல, "என்ன என்னாச்சு?" என்று கேட்டாள்.

"நீ சரியே இல்ல. வா போலாம்" என்று எழுந்தான் உடனே‌.

"என்ன ஜீவா? என்ன சரி இல்ல? நான் என்ன பண்ணேன்?" என்றாள் வேண்டுமென்றே.

"என்ன பண்ணியா..அது..ஏன் என்ன அப்டி...ஒன்னு இல்ல. வா போலாம் நேரமாச்சு" என்று வேகமாக வெளியேறி தன் பைக்கில் ஏறினான்.

அவனது செயலைக் கண்டு சிரித்தவள் மனதில், 'ஓஹோ வீராப்பான ஒனக்குள்ள இப்டி ஒரு side ஆ. விடக் கூடாதே. ஜீவா இன்னைக்கு நீ காலி" என்று எண்ணியவாறே அவன் பின் அமர்ந்தாள்.

அவள் மனதில் அவன் நங்கூரமாக நிலைத்து விட்டதை உணர்ந்தவள் இதயம் சிறகடிக்க ஆரம்பித்தது. அவனுக்கு நிகழ்ந்தவற்றை அறிந்த பின் அவை அனைத்தும் மறையும் அளவு அவன் வாழ்வில் மகிழ்ச்சி கொண்டுவர முடிவு செய்தாள்.

அவன் வண்டியை உயிர்ப்பித்து சாலையில் செலுத்தியதும் அவன் அருகே நெருங்கி அமர்ந்தாள். அவளது மூச்சுக்காற்று அவன் காதுகளில் படர உடல் முழுவதும் வியர்த்தது ஜீவாவிற்கு. வண்டியை ஓரமாக நிறுத்தி, "பின்னாடி கொஞ்சம் தள்ளி உட்காரு" என்றான்.

அவளும் உடனே நகர்ந்து அமருவது போல பாவனை செய்ய மீண்டும் வண்டியை ஓட்டினான். சில நிமிடங்கள் பின்னர் மேலும் நெருங்கி, "பஸ் போகுது. பார்த்து ஓட்டு" என்றாள் அவன் இதயம் படபடக்க.

உடனே ஒரு ஓரம் நிறுத்தியவன் அவளை இறங்கச் செய்தான். வந்த ஒரு ஆட்டோவில் அவளை ஏறுமாறு கூர, "இதெல்லாம் ரொம்ப ஓவர். இப்டி என்ன விட்டுட்டு போறீயே உனக்கு நியாயமா?" என்றாள் உண்மையான எரிச்சலோடு.

"நீ பண்ணதுக்கு சரியாப் போச்சு" என்றவன் அவளை விடாப்பிடியாக ஏற்றிவிட்டான்.

அவள் சென்றதும் மீண்டும் வண்டியை உயிர்ப்பித்தவன் இதழில் புன்னகை மலர்ந்தது. அவன் முயற்சித்தும் அந்த மலர்ச்சி நீங்கவில்லை.
_______________________________________
வணக்கம் மக்களே 💞,

இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன் 😊

பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்Tempat cerita menjadi hidup. Temukan sekarang