37. பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்?

287 11 5
                                    

கல்லூரிக்கு சென்ற ஜீவாவின் மனம் குற்ற உணர்வில் தவித்தது. 'அவளிடம் சொல்லாமல் இருந்தது தவறோ' என்று சிந்திக்க துவங்கியது. கல்லூரிக்கு ஜனனி வராமல் இருந்ததற்கு தன் மேல் இருந்த கோவமே காரணம் என்று ஜீவா நினைத்து கொண்டிருந்தான். என்ன தான் முயற்சித்தாலும் அவன் கண்கள் அவள் இருக்கையையே சுற்றிவர ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான். ஆனால், அது ஏற்கப்படாமலேயே இருந்தது. மனம் சோர்வாக அன்றைய நாளை கடத்தியவன் கல்லூரி முடிந்ததும் பேருந்தில் உடனே ஏறி வீட்டிற்கு பயணித்தான். அங்கும் அவளுடனான பொழுதுகள் நினைவில் தோன்ற அவன் மனம் அவளை அதிகம் தேடியது. வீட்டிற்கு வந்ததும் கதவைத் திறக்க முயல அது பூட்டியிருந்ததைக் கண்டு குழம்பினான்.

'எப்போதும் இது போல தன் அன்னை பூட்டி வைப்பதில்லையே' என்ற சிந்தனையுடன் அழைப்பு மணியை அழுத்தினான். சில நிமிடங்களுக்கு பிறகு தாள் திறக்கப்படும் கேட்டதும் கதவு திறந்து விடும் என எதிர்பார்த்தான். அப்போதும் திறக்காமல் இருக்க, அவனாகவே கதவைத் திறந்த போது உள்ளே அலங்கரிக்கப்பட்ட விளக்குகளுடன் வண்ணக் காகிதங்கள் துகள்களாக வெடித்து சிதற தன் ஊதா நிற டி ஷேர்ட் மற்றும் ஜீன்ஸில் நின்றிருந்த ஜனனி, "சர்ப்ரைஸ்" என்று கத்தினாள். அவளுடன் அவனது அன்னையும் அவனது நண்பர்களும் இருந்தனர்.

நடுவே ஒரு சிறிய மேசையில் அழகுப்படுத்தப்பட்ட சாக்லேட் கேக் இருந்தது. அவன் அன்னையின் முகத்திலும் நிறைந்த புன்னகை குடிகொண்டு இருந்தது.   காலையில் இருந்து அவளைக் காணாது தவித்தேன் இப்போது அவளைக் கண்டதும் சில நொடிகள் அவனால் பார்வையை விலக்கிக் கொள்ள இயலவில்லை. இருப்பினும் அவள் பார்வையால் அவனது நண்பர்களை சுட்டிக் காட்ட அவர்கள் புறம் தன் பார்வையை திருப்பினான். அவர்கள் இங்கு வந்தது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்ததால், "நீங்க இங்க என்ன பண்றீங்க? என்ன ஜானு இது?" என்று புன்னகையுடன் கேட்டான்.

அவனருகே வந்து கையைப் பிடித்து மேசை அருகே அழைத்து வந்த ஜனனி, "உனக்கு ஒரு பெரிய குட் நியூஸ் வச்சிருக்கேன். அதுக்கு முன்னாடி பல மாசமா உன் மாசமா உன் மேல செம கோவமா இருந்த உன் ஃபரண்ட்ஸ கஷ்டப்பட்டு கன்வின்ஸ் பண்ணி கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். ஜோ, அவங்க கிட்ட மொக்க போடு. ஒரு முக்கியமான வேலையா போய்ட்டு வர்றேன்" என்று வெளியே கிளம்பினாள். அவளுடன் மீண்டும் நேரம் கழிப்பதில் மகிழ்ச்சி அடைந்தவன் அவள் விலகி செல்லவும் மனம் வருந்தினான். இருந்தாலும் தனக்காக தன் நண்பர்களிடன் அவள் பேசி சமாதானம் செய்ததை நினைத்து அவள் மீதான அன்பும் அவன் மனதில் அதிகரித்தது.

பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ