அடுத்த நாள் அவள் நினைத்தது போல் அல்லாமல் கல்லூரிக்கு சிவா வரவில்லை. அதை அறிந்த ஜீவாவின் மனம் ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம் ஜனனியின் முகத்தை கண்டு உணர்வு மாறியது. அந்த வகுப்பிற்கான யாரும் வராததால் அவளருகே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவன் அவன் அன்னையின் ஆசையை பற்றி கூறினான். அதைக் கேட்டவளுக்கு ஆர்வம் அதிகரித்தது.
"ஹே.. இந்த ட்ரஸ் நல்லாருக்கா ஜீவா? ஏன்டா முன்னாடியே சொல்லிர்ந்தா ஒரு நல்ல சுடிய போட்டுட்டு வந்திருப்பேன். பாரு..இன்னைக்குனு பார்த்து ஜீன்ஸும் டிஷெர்டும் போட்ருக்கேன். லூசு" என்று குறை கூறினாள்.
அவள் கூறியதைக் கேட்டதும் அவளை மேலும் ஒருமுறை பார்வையால் அளந்தான். அந்த நீலநிற டீஷெர்டிலும் கருநிற ஜீன்ஸிலும் பார்ப்பதற்கு மிக ரசனை நிறைந்தவாறு தான் அவன் கண்களுக்கு ஜனனி தெரிந்தாள். அதில் எந்தவித சங்கடப்படும் உணர்வும் அவனுக்கு தோன்றவில்லை. தோள் வரை வெட்டப்பட்ட விரிந்த கூந்தலும் வசீகரிக்கும் அவள் கண்களும் மென்மையான அவ்விதழ்களில் பூக்கும் புன்னகையும் மொத்தமாக அவள் அழகுக்கு ஈடெதுவும் இல்லை என்றே அவனுக்கு தோன்றியது.
தன்னையும் மறந்து ரசித்துக் கொண்டிருந்தவன் முன் சொடுக்கிட்டு ஜனனி அவனை நிகழ்வுக்கு அழைத்து வர தலையை லேசாக அசைத்து அசட்டு புன்னகையுடன் பேசினான்.
"நீ எப்படி இருக்கியோ அப்படியே இரு. இதுதான் என் ஜனனி. யாருக்காகவும் ஏன் எனக்காகவோ இல்ல என் அம்மாக்காகவோ கூட உன்ன நான் மாத்திக்க வேணாம்" என்றான் மனதில் தோற்றியதை மறைக்காமல்.
அவனது வார்த்தைகள் அவளை சில நிமிடங்கள் தன்வசம் இழக்க செய்தது. தன்னை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நேசிக்கும் அவனது உள்ளத்தை என்றுமே இழந்துவிட கூடாது என்று உறுதி கொண்டாள்.
"நீ இருக்கியே.." என்று கூறியவள் அவன் விரலோடு விரல் கோர்த்து முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். சிவந்த தன் கன்னங்களை அவள் மறைக்க அவள் கையை மேலும் இறுக பிடித்தவன் தானும் சிறு வெட்கத்துடன் வேறுபுறம் திரும்பினான்.
![](https://img.wattpad.com/cover/291405898-288-k303861.jpg)
YOU ARE READING
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
Teen Fictionகாதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.