அந்த மரத்தின் அருகே போய்ட்டு இருந்த பென்ச்சில் அமர்ந்த போது அவள் மனதில் ஜீவா முதல் முறை பாடியது தோன்றியது. அந்த நினைவில் அவள் இதழ்கள் தானாக விரிய இன்று அவன் அருகாமை இல்லாமல் இருப்பதை உணர்ந்து கண்கள் குளமானது. அதற்கு மேல் முடியாமல் அவள் விரைந்து எழ அங்கிருந்து ஏதோ என்று அவள் கைபட்டு தடுமாறி கீழே விழுந்தது.
அதை எடுத்து பார்க்க கை முட்டி அளவிலான பெட்டி இருந்தது. கிஃப்ட் ரேப் செய்யப்பட்டு இருந்த அதன் முன் 'என் ஜானுவிற்கு' என்று எழுதப்பட்டு இருந்தது. இதயம் வேகமாக துடிக்க அதைப் பிரித்தவள் அதில் இருந்த புதிய பென்ட்ரைவ் மற்றும் அதைக் கைபேசியுடன் இணைக்கும் கருவியும் இருந்ததைக் கண்டு குழம்பினாள். பின், அதை தன் கைப்பேசியில் அவள் பொறுத்தி பார்க்க, அதில் ஒரு காணொளி இருப்பதை பார்த்து அதைத் திறந்தாள்.
ஸ்டூடியோ போன்ற ஒன்றின் ஓரம் இருந்த ஜீவா ஒருவித படபடப்புடன் பேசத் துவங்கினான்.
"ஓம் ஜானு...இது கிடைக்கிறப்போ கண்டிப்பா நம்ம ஃபேர்வெல் வந்திருக்கும். ஓகே. என்மேல பயங்கரமா கோவமா இருப்பேன்னு தெரியும்... அத விட... அதிகமா என்ன மிஸ் பண்ணுவனும் தெரியும். ஆனா..இப்ப நான்...அதவிட அதிகமா உன்ன மிஸ் பண்றேன். ப்ளா ப்ளானு எதாச்சும் எப்பவும் பேசிட்டே இருந்த குரல் திடீர்னு காணாப் போன மாறி இருக்கு. ஓகே. நீ கால் பண்ண. நான் தான் எடுக்கல...அப்ப தான இது சர்ப்ரைஸா இருக்கும்... உன்கிட்ட சொல்லனும்னு துடிச்சிட்டு இருந்த ஒன்ன இது மூலமா சொல்லப் போறேன். அது.. அதுக்கு முன்னாடி என்னோட ஆல்பம் சாங்க் அ ஸ்பெஷலா உனக்கு காப்பி போட்டு வச்சிருக்கேன். அதைக் கேளு. லிரிஸிஸ்ட கரெக்ட் பண்ணிட்டேன். அதனால என்னோட வரிகளும் அதுல இருக்கு. ரிஸ்க் தான். ஆனா.. உனக்காக பண்ணலாம். பை த வே, உன்ன மாறியே நானும் ரொம்ப பேச ஆரம்பிச்சுட்டேன்ல. ஓகே ஓகே. ஃபர்ஸ்ட் சாங்க்" என்று அவன் கூறி முடித்ததும் ஸ்டூடியோவில் அவன் பாடத் துவங்கி இருந்தான்.
"இருளான என் வாழ்வில்
ஒலி தருவே வந்தாயேபோலியில் சிறைப்பட்ட என்மனதை
மெய் தீட்டி விடுவித்தாயே
YOU ARE READING
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
Teen Fictionகாதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.