அவருடன் பூ கட்ட முயற்சி செய்து அது வராமல் போக அதைவைத்து நகைத்து அந்த இடத்தையே சிரிப்பொலி திரும்பச் செய்தாள் ஜனனி. பின்னர், ஜீவாவின் அம்மாவிற்கு தையல் மிஷின் வாடகைக்கு வாங்கத் தருவதாகவும் அதை வைத்து பலருக்கு உடைகளை தைத்து கொடுத்தால் அவருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவரை ஊக்கப்படுத்தினாள்.
வீட்டிற்கு ஆட்டோ பிடித்து சென்றவள் பெற்றோரிடம் தன் புதிய நண்பன் பற்றி கூறினாள். மேலும், நன்கு பரிட்சயமான எதிர்வீட்டு பெண்மணியின் பழைய தையல் மிஷினை வாடகைக்கு தருமாறு கேட்டாள். அவளுடன் அவர் அதிக இணக்கமாக இருந்ததால் அவரும் அதற்கு சம்மதித்தார்.
அடுத்தகட்டமாக நடந்த மாநில அளவிலான அப்போட்டியில் பங்கேற்க சிவாவும் ஜீவாவும் சென்றனர். அதில் தங்கள் திறன் மூலம் நடுவர்களால் தேர்ச்சி பெற்ற இருவரும் மகிழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் முதல் முறையாக கைகுலுக்கி கொண்டனர்.
கல்லூரியில் அன்று ஒரு முக்கிய விழா இருந்ததால் மற்ற நண்பர்கள் யாருக்கு விடுப்பு எடுக்க அனுமதிக்கவில்லை. விழா முடிந்த பின்னரே அவர்கள் வருவதற்கான சூழல் அமைந்தது. போட்டி முடிந்ததும் அங்கிருந்த ஃபுட் கோர்ட்டுக்கு சென்ற இருவரும் அவரவருக்கு தேவையான உணவுகளை வாங்கினர். இருவரின் இடையேயும் ஒரு இறுக்கமான மௌனம் நிலவியது. அதைக் கலைக்க விரும்பாமல் உணவை உட்கொண்டனர்.
இந்த வாய்ப்பை தவற விட விரும்பாத ஜீவா தன் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வியை வெளிப்படையாக சிவாவிடம் கேட்டான்.
"நீ ஜனனியை லவ் பண்ணியா?"
அதை சற்றும் எதிர்பாராத சிவா சில நொடிகள் திகைத்தாலும் பின் தன் உணவை உண்டபடி, "அதைப்பத்தி உன்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்றான்.
அது ஜீவாவின் கோபத்தை தூண்ட கைகளை இறுக மூடி அதை கட்டுப்படுத்தியவன், "ஐ லவ் ஹெர். அவளும் என்ன லவ் பண்றா. ஸோ, அதைப்பத்தி கேட்க ஜ ஹேவ் ஆல் ரைட்ஸ். என் பொறுமைய சோதிக்காம பதில் சொல்லு" என்றான்.
அவனது வார்த்தைகளில் இருந்த உண்மை சிவாவின் மனதை காயப்படுத்த அவனும் கோபத்தோடு, "அது எனக்கும் ஜனனிக்கும் நடுவுல இருக்கறது. உன்கிட்ட அதைப்பத்தி பேச எனக்கு விருப்பமில்ல. அப்பறம் இன்னொரு விஷயம். ஜனனி மனசு மாறாதுனு கனவு காணாத. யாருக்கு தெரியும் என் லவ்வ அ அக்ஸெப்ட் பண்ணி என்கூட வாழ சேன்ஸஸ் ஆர் தேர்" என்றான் நக்கலாக.
அதைக் கேட்டதும் தன் நிதானத்தை இழந்த ஜீவா எழுந்து அவன் சட்டைக் காலரை பிடித்தான்.
"உனக்கு அவ்ளோதான் மரியாதை. என்ன ப்ரவோக் பண்ணாத. அப்பறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்" என்று எச்சரித்தான்.
அதற்கு சற்றும் சளைக்காமல், "அப்போ ஸ்டே அவ ஃப்ரம் ஹெர்" என்றான்.
அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கோபத்தோடு சிவாவின் மூக்கை அவன் குத்த சிவாவும் சில நொடிகள் வலியில் துடித்து பின் ஜீவாவின் வயிற்றில் குத்தினான். இப்படியாக இருவரும் சண்டையிட அங்கிருந்தவர்களில் சிலர் அவர்களை விலக்கினர்.
விழா முடிந்ததும் விரைந்து வந்த ஜனனியும் அவள் நண்பர்களும் அந்த காட்சியை கண்டு அதிர்ச்சியாகினர். ஜனனியின் மனதோ அவர்கள் சண்டையைக் கண்டு வேதனை அடைந்தது. சின்ன சின்ன வேறுபாடுகளால் தான் இருவரும் சரியாக பேசாமல் உள்ளனர் என்று நினைத்து அதை சரிசெய்ய எண்ணியவளின் முன் ஆக்ரோஷமாக சண்டையிடுவதை கண்டு அவள் மனம் நிலைகுலைந்து. ஜனனியை அங்கு எதிர்பாராத இருவரும் அதிர்ந்து பார்க்க எப்படி அவளை சமாதானம் செய்தவது என்பது புரியாமல் தலை குனிந்தனர்.
___________________________________________
வணக்கம் மக்களே,
இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க.
YOU ARE READING
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
Teen Fictionகாதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.