அவள் தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் என்பதே அவனுக்கு மகிழ்ச்சியை தர, "நீ எனக்காக wait பண்ணியா? ஃப்ராடு. நான் அன்னைக்கு அவ்ளோ feelings ஓட பாடுறேன். நீ என்னாடானா எங்கையோ பார்த்துட்டு நல்லார்க்குனு ஓடிட்ட. ரொம்ப வருஷம் கழிச்சு மனசு விட்டு பாடுறேன். அதுவும் பிடிச்ச ஒருத்தருக்காக. ஆனா நீ அது ஒண்ணுமே இல்லங்கற மாதிரி போய்ட்ட. சரியா பாடலேனாவது atleast சொல்லிர்க்கலாம்ல" என்றான் உண்மையான வருத்தத்தோடு.
அப்போதே அவனது உணர்வுகளை புரிந்து கொண்டவள் அவன் அருகே வந்து அவன் கன்னத்தில் கை வைத்தாள். அவளது தொடுதலை உணர்ந்ததும் உணர்வுகள் போர் புரிய அவள் விழிகளை உற்று நோக்கினான்.
"சாரி ஜீவா. அன்னைக்கு நீ பாடுனதக் கேட்டதும் எனக்கு ரொம்ப differentஆ இருந்தது. உன் குரலோட tone அப்றம் அந்த வரிகள்... அதெல்லாம் ஒரு தனி உணர்வு. அத எப்படி express பண்றதுனு புரில. தோ இப்ப நீ stun ஆகி இருக்கேல அப்டி தான் நானும் இருந்தேன்" என்றாள்.
அவள் வார்த்தைகளிலும் முக பாவங்களிலும் லயித்தவன் அவள் இறுதியாக கூறியதில் அவள் கையை விலக்கி வீராப்பாக, "நான் சாதாரணமா தான இருக்கேன்" என்றான் மறுபுறம் திரும்பி.
அவனது உணர்வுகளை உணர்ந்தவள் அதை சீண்ட எண்ணி மேலும் நெருங்கி, "நிஜமாவா?" என்று கேட்டாள்.
அவளது செய்கையை புரிந்து கொண்டவன், "ஜனனி நீ ஃபர்ஸ்ட் தள்ளி நில்லு. பஸ் க்கு லேட் ஆச்சு உனக்கு" என்று விலகி நின்றான்.
ஆனால் அவளோ, "நீ ட்ராப் பண்ணிடு அப்போ. பஸ் கிளம்பட்டும்" என்று நெருங்கினாள்.
அவள் அவ்வாறு கூறியதும் தன் பைக்கை அடகு வைத்தது அவனுக்கு நினைவு வர முகம் சுருங்கினான். அதை கண்டவள் விளையாட்டை விட்டுவிட்டு அவனிடம் கரிசனத்தோடு விசாரித்தாள். அவளிடம் ஏனோ எதையும் மறைக்க வேண்டும் என்ற அவனுக்கு தோன்றவில்லை எனவே நடந்த அத்தனையும் விவரித்தான். அவன் கூறியதை கேட்டு அவள் உள்ளம் அவனுக்காக வருந்தியது.
அதை மாற்ற எண்ணி அவள் அவனை அழைத்துக்கொண்டு அறிவிப்பு பலகை அருகே சென்று அதை சுட்டிக் காட்டினாள். அதை பார்த்தவன் அவளிடம், "ம்ம் நான் பார்த்தேன். ஆனா நான் பெருசா மியூசிக் கத்துக்கல. அங்க போய் தேவையில்லாம அசிங்கப்பட வேண்டாம்னு விட்டுட்டேன். So நான் participate பண்ண போறது இல்ல" என்றான்.
உடனே அவனை முறைத்தவள், "அதெல்லாம் இல்ல. உன்கிட்ட ஒரு அழகான மீயூசிக் ஒளிஞ்சிருக்கு. அத நீ தான் வெளிய கொண்டு வரனும். எவ்ளோ கஷ்டப்பட்டு நம்ம H.O.D கிட்ட ஃபர்மிஷன் வாங்கினேன் தெரியுமா? ப்ளிஸ் ஜீவா" என்றாள்.
அவன் புரியாமல் கேட்க அவள் தன் முயற்சிகளை மேலோட்டமாக கூறினாள். அதைக் கேட்டவன் கண்கள் முதன்முறையாக பனித்தது. தன் தாய் கூட விரும்பி பாராட்டாத தன் குரலில் வரும் இசையை குறுகிய காலமே அறிந்த அவள் கொண்டாட துடிப்பதை எண்ணி அவன் மனம் பூரித்தது. தனக்காக இல்லை என்றாலும் அவளுக்காக இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்தான்.
"சரி. உனக்காக ட்ரை பண்றேன்" என்றான்.
அவன் சம்மதித்ததும் அவள் மகிழ்ச்சியோடு அவனிடம் பேசிக்கொண்டிருக்க அவன் நண்பர்கள் வந்தனர்.
__________________________________________
வணக்கம் மக்களே ❤️,
இந்த அத்தியாயம் பிடிச்சிருந்தா மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க..
YOU ARE READING
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
Teen Fictionகாதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.