இதை அறிந்த ஆர்த்தி வேண்டுமென்றே சிவா மற்ற நண்பர்கள் அனைவரையும் அழைத்ததாக வைஷ்ணவி மற்றும் ப்ரிட்டோவையும் சேர்ந்து அழைத்து சென்றாள். கிளம்பும் போது ஜீவாவிடம் வந்த ஜனனி, "ஜீவா நீ கிளம்பு. சிவாக்கு இன்னைக்கு பர்த்டே. சோ, அந்த ட்ரிட்கு போறேன்" என்றாள்.
சிவாவின் பெயரைக் கேட்டதும் ஜீவாவிற்கு அவனது பாடல் மற்றும் செயல் நினைவுக்கு வர தானும் உடன் வர விரும்புவதாக கூறினான். அவனை விநோதமாக பார்த்தவள் அதுவும் சரியென அவனையும் அழைத்து சிவா காத்திருப்பதாக கூறிய மரத்தடிக்கு சென்றாள். அங்கே ஜனனியை மட்டும் எதிர்பார்த்து அழகிய பூங்கொத்தை வாங்கி வைத்திருந்தவன் அவளுடன் ஜீவாவும் வருவதை அறிந்து அதை தன் பையில் மறைத்தான்.
ஜனனி அவன் எதையோ மறைப்பதை பார்த்தாலும் அது என்னவென்று பார்க்கவில்லை. ஆனால், ஜீவா அதை பார்த்து விட்டு புருவங்களை சுறுக்கினான். ஜீவாவை என்ன காரணம் கூறி இவ்விடத்தை விற்று அகற்றலாம் என்று யோசிப்பதற்குள் ஜனனியும் ஜீவாவும் அவனருகே வந்தனர். அதேநேரம் ஆர்த்தி, ப்ரிட்டோ மற்றும் வைஷ்ணவியும் வர சிவாவின் முகத்தில் ஏமாற்றம் குடியேறியது.
"எங்கள விட்டுட்டு ட்ரிட்டா பர்த்டே பாய்? சேன்ஸே இல்ல" என்று ஆர்த்தி அர்த்தமுள்ள பார்வை பார்த்து சிரித்தாள்.
பின் ஒவ்வொருவரும் அவனுக்கு பரிசு வழங்கினர். ப்ரிட்டோ ஒரு பென்ட்ரைவ்; ஆர்த்தி அழகிய ஒரு கீ செயின். வைஷ்ணவி ஒரு அழகிய பேனா கொடுத்தாள். ஜனனியின் பரிசுக்காக சிவாவின் கண்கள் ஆவலுடன் பார்க்க அவள் ஒரு புல்லாங்குழலை பரிசாக தந்தாள். அவளைப் பார்த்து புன்னகையோடு, "தேங்க்ஸ்" என்றவன் அதனை தன் விரல்களால் ஒருமுறை வருடி பார்த்தான்.
ஜீவாவிற்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. அவனது பார்வை தன்னவள் மீது காதலோடு படிவதைக் காணும் போது அவன் கைமுட்டி தானாக இறுகியது.
"ஓகே. கிளம்பலாம். எங்க போறோம் சொல்லு? அப்பறம் ஜீவாவும் நம்ம கூட வர்றான். உங்க எல்லாருக்கும் ஓகே தான?" என்று கேட்டாள் ஜனனி.
அதற்கு சிவா ஏதும் பதில் பேசும் முன்னர் ஆர்த்தி, "அதுக்கென்ன? நம்ம ஜீவா தானே. சரி வாங்க சீக்கிரம் போலாம்" என்று துரிதப்படுத்தினாள்.
இப்படி ஒருவாறாக அனைவரும் சற்று தொலைவில் உள்ள ஹோட்டலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தனர். ஜீவா, ஜனனி மற்றும் சிவா ஒரு ஆட்டோவில் ஏற மற்ற மூவரும் வேறொரு ஆட்டோவில் ஏறினர்.
ஜனனி இன்று நடந்த வகுப்புகளை பற்றி நகைச்சுவையாக கூறிக்கொண்டிருக்க மற்ற இருவரும் சுவாரஸ்யமாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் உடல் அசதியால் ஜீவா தன்னையும் மறந்து தூங்ககனான். பேசிக்கொண்டே வந்தவள் தன் தோள் மீது ஒரு சின்ன சுமையை உணர்ந்து திரும்பி பார்த்தாள். ஜீவா தூங்குவதை கண்டவள் அதில் நிலைத்த அமைதியை ரசித்தாள். தன் இடது கரம் கொண்டு அவனுக்கு மெல்ல தட்டிக் கொடுத்தாள். அவள் முகத்தில் தெரிந்த உணர்வுகளை கண்டுகொண்ட சிவாவின் மனது கலவையான உணர்வுகளை கொண்டது.
ஒருபுறம் மனதை ஊசி கொண்டு தைக்கும் வலி. மறுபுறம் அவள் தோள்மீது சரிந்த உடல் தன்னுடையதாக இருக்க கூடாதா என்ற ஏக்கம். மனதின் ஒரு ஓரம் அவளது காதலை உணர்ந்து அதுவே அவளுக்கு சரி என்ற எண்ணம். இப்படி பல உணர்வுகளில் அவன் தவிர்த்திருக்க ஆட்டோ அந்த ஹோட்டல் முன் நின்றது.
அதை அறிந்தாலும் அவள் தூக்கத்தை கலைக்க விரும்பாதவள் சில நிமிடங்கள் சிந்தித்தாள். பின் சிவாவிடம், "டேய் பர்த்டே பாய். சாரி சாரி. கொஞ்ச நாளிலே இவன் ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கான். இப்பதான் நிம்மதியா தூங்குறான்னு தோணுது. நீ போய் என்ஜாய் பண்ணு. நான் அவன் வீட்ல விட்டுட்டு வர்றேன்" என்றாள்.
அவன் எதாவது திட்டுவான் என்று அவள் எதிர்பார்க்க அவன் அமைதியாக தலையாட்டி சென்றதும் அவள் மனம் குற்றவுணர்வு கொண்டது. பின் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவள் ஜீவாவின் சட்டைப்பையில் இருந்து அவன் கைப்பேசியை எடுத்தாள். அதில் இருந்த அவனது அன்னையின் எண்ணிற்கு தொடர்பு கொள்ள ஓரே அழைப்பில் அவன் அன்னை அதை ஏற்றார். அவரிடம் மெல்லிய குரலில் பேசி முகவரி பெற்றவள் அங்கு செல்லும் வரை என்ன செய்வதென்று புரியாமல் மீண்டும் அவன் கைப்பேசியை எடுத்தாள். அவன் சட்டைப்பையில் இருந்து உரிமையாக அவன் கைப்பேசியை எடுத்ததே அவளுக்கு ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தியது.
_________________________________________
வணக்கம் மக்களே,
இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க. உங்க ஆதரவுக்கு எப்போதும் என் நன்றிகள்..
BINABASA MO ANG
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
Teen Fictionகாதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.