அடுத்த நாள் பல சுற்றுலா தளங்களுக்கு சென்றனர். ஆனால் பொருட்கள் வாங்க யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. அதனால் ஜனனியும் அவளது பட்டாளமும் சேர்ந்து கொண்டு ஆசிரியர்களுக்கு தெரியாமல் ஒரு சந்தைக்குள் புகுந்தனர். இதனைக் கவனித்த ஜீவா அவளை பின்தொடர்ந்தான். முற்றிலும் புதுமையான அனுபவமாக இருந்தது அவனுக்கு. அங்கு உள்ள ஒரு கடையைக் கூட விடாமல் அனைவரையும் இழுத்துச் சென்று கொண்டிருந்தாள் ஜனனி.
மற்றவர்கள் யாவரும் ஒரு கட்டத்தில் வர மறுத்து கிளம்ப எத்தனிக்க ஜனனி மட்டும் சில கடைகளுக்கு சென்றே தீர வேண்டுமென தனியாக சென்றாள். வேறு வழியின்றி அவள் நண்பர்களும் அருகேயுள்ள உணவகத்தில் காத்திருப்பதாக கூறி சென்றனர். ஜீவா மட்டும் அவளது செய்கைகளை ரசித்தவாறே பின் தொடர்ந்தான். அவள் சிறிது நேரத்திற்கு பின்னர் ஒரு சிறிய கடைக்குள் நுழைவதைப் பார்த்தவனின் கைபேசிக்கு நண்பர்கள் அழைத்துக் கொண்டே இருந்தனர். வேறு வழியின்றி ஒரு ஆட்டோ பிடித்து அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்றான். இரவு வெகு நேரம் ஆகியும் அவர்கள் வராமல் இருக்க குழப்பத்தோடு மீண்டும் அவ்விடம் சென்றான். அங்கே நால்வரும் ஜனனியைத் தேடிக் கொண்டிருக்க பதட்டத்துடன் அவர்களிடம் விசாரித்தான். ஜீவாவை அவ்விடத்தில் எதிர்ப்பார்க்காதவர்கள் முதலில் அதிர்ந்தாலும் பின்னர் ஜனனி இன்னும் வராமலிருப்பதைப் பற்றி கூறினர். ஜீவாவின் மனதில் அவள் கடைசியாக சென்ற கடை நினைவுக்கு வர அங்கே விரைந்தான்.
அக்கடையை சுற்றி அமைதி நிலவ யோசனையோடு அந்த கதவை நெருங்கி காதுகளை தீட்டினான். மிக மெல்லிய சத்தமாக அவள் கத்துவது அவனுக்கு கேட்டது. உடனே அருகேயிருந்த கல் கொண்டு அதன் முன்னால் இருந்த பூட்டை உடைத்தான். கதவைத் திறந்ததும் இருட்டு மட்டுமே தெரிய சில நொடிகளில் ஒர் உருவம் வருவது தெரிந்தது. பயந்து போயிருக்கும் அவள் எப்படி சமாதானம் செய்வது என்று அவன் யோசிக்க கண்களில் அனல் பறக்க வெளியே வந்தவள், "இவ்வளோ நேரமா என்ன கண்டுபிடிக்க..நல்லா.." என்று பேசிக்கொண்ட வந்தவள் அவன் கண்டதும் கண்கள் விரிய வாயைத் திறந்து திறந்து மூடினாள்.
அவளது செய்கை சிரிப்பை மூட்டினாலும் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு, " இங்க என்ன பண்ணிட்டு இருக்க? இது எவ்ளோ unsafe தெரியுமா?" என்று திட்டினான்.
முகத்தை பாவமாக வைத்துக்கொண்டவள், "நான் ஷாப்பிங் வந்தேன் இந்த கடைக்காரர் ஒரு சரியான ஞாபக மறதி கேஸ். கூட்டத்தில ஒருத்தி உள்ள போனாளே.. இன்னும் வரலையேனு கொஞ்சம் கூட ஞாபகம் இல்லை. அப்படியே பூட்டிட்டு போய்ட்டாரு. What can I do?" என்றாள்.
அதை ரசித்தவன் கிளம்ப எத்தனிக்க உடனே, "ஒரு நிமிஷம்" என்று உள்ளே ஓடினாள். மீண்டும் வந்தவளின் கையில் ஒரு பெரிய பை இருந்தது.
அவன் என்னவென கேள்வியோடு பார்க்க அசடு வழிய, "போறோம்னு முடிவு பண்ணியாச்சு. அதான் கொஞ்சம் things extra வா எடுத்துக்கிட்டேன். சீக்கிரம் வா ஜீவா. சிக்கிட போறோம்" என்று அவனையும் இழுத்துச் சென்றாள்.
அவள் தன் வலது கரத்தை இழுத்துச் செல்வது அவனுக்கு பிடித்திருந்தது. நண்பர்களைப் பார்த்ததும் அவனது கையை விட்டு ஓடினாள். சராமாரியாக திட்டுகளை அவர்களிடம் பெற்றவள் அனைவரையும் பேசி சமாளித்து விட்டு அவர்களோடு கிளம்பினாள். சிறிது தூரம் சென்றவள் நின்று மீண்டும் ஜீவாவிடம் வந்தாள்.
"தேங்க்ஸ் ஜீவா" என்று கூறி புன்னகையோடு மீண்டும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாள்.
____________________________________________________
வணக்கம் மக்களே ❤️,
இந்த அத்தியாயம் எப்படி இருந்ததுனு மறக்காம சொல்லுங்க 👍
KAMU SEDANG MEMBACA
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
Fiksi Remajaகாதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.