14. பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்

366 12 0
                                    

அவரிடம் விடைபெற்று வந்தவள் உள்ளம் துள்ளிக் குதித்தது. ஜீவாவைத் தேடியவள் அவனைக் காணாமல் அந்த இன்ப அதிர்ச்சியை நாளை கூறிக்கொள்ளலாம் என எண்ணினாள். அந்த போட்டி குறித்து நண்பர்களிடம் கூறியதும் அனைவருக்கும் மகிழ்ச்சி உண்டானது. முக்கியமாக சிவாவிற்கு இது மிகுந்த மகிழ்ச்சி உண்டானது.

ஜனனி இந்த  முயற்சியை மேற்கொண்டது தன் திறனை அறிந்தே என்று ஆனந்தம் கொண்டான். மீண்டும் பல நாட்களுக்கு பின்  பேருந்தில் அவள் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தான் சிவா. அவனைக் கண்டதும் அவனது ஒதுக்குதல் நினைவுக்கு வர அவன் கைகளில் தொடர்ந்து குத்தினாள் ஜனனி.

வலியில் கத்தியவனிடம், "இப்ப மட்டும் ஏன்டா பக்கத்துல வந்து உட்கார்ந்த. ஓடிடு. என்னவோ என்கிட்ட மட்டும் மௌன விரதம் மாறி சீன் போட்ட" என்று மீண்டும் குத்தினாள்.

"ஆ‌...சாரி சாரி. அது நீ என்ன கவனிக்கிறியா இல்லையான்னு சும்மா செக் பண்ணேன்" என்று சிரித்தான் சிவா.

அவளிடம் பேசியதும் தான் அவனால் இயல்பாகவே இருக்க முடிந்தது.
"மண்ணாங்கட்டி. லூசு லூசு. சரி competition பத்தி எப்படியும் ஒரு ஒரு வாரத்தில announce பண்ணிடுவாங்க. ஒழுங்கா practice பண்ணிக்கோ" என்றவள் பின்னருந்த வைஷ்ணவியிடம் பேச துவங்கினாள்.

அவளை ரசித்தவன், "தேங்க்ஸ்" என்றான் முகம் மலர.

அதைக் கேட்டு திரும்பியவள், "எதுக்கு தேங்க்ஸ்?" என்று புரியாமல் கேட்டாள்.

அவள் அறிந்தும் அறியாதது போல கேட்கிறாள் என்று நினைத்தவன், "சும்மா தான்" என்றான்.

அவனை விநோதமாக பார்த்தவள் மீண்டும் திரும்பி பேசத் துவங்கினாள். அவளது பேச்சை ரசித்துக்கொண்டே இருந்தவன் கனவில் மூழ்கினான்.

அதில் முகம் நிறைந்த புன்னகையுடன் இளநீள நிற சுடிதாரில் ஜனனி வந்தாள். அவள் கையில் வண்ண வண்ண மலர்கள் நிறைந்த பூங்கொத்து இருந்தது. அதை அவள் சிவாவிடம் தர அதை அவன் ஆவலாக பெற நெருங்குவதற்குள் மற்றொரு கரம் அந்த பூங்கொத்தை பறித்தது. சிவா அதிர்ச்சியுடன் திரும்ப அங்கே ஜீவா நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் கண்கள் விரிந்தன ஜனனி அவனது விரல்களோடு விரல் கோர்த்து சிவாவை விட்டு அவனுடன் செல்கிறாள்.

பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்Dove le storie prendono vita. Scoprilo ora