இவர்களுக்கிடையே இருந்த இறுக்கமான சூழலை மாற்ற எண்ணிய ஜனனி அவர் அருகேயுள்ள இருக்கையில் அமர்ந்தாள்.
"ஹாய் ஆன்டி. என்ன ஆச்சு திடீர்னு? டாக்டர் வந்து check பண்ணிட்டாங்களா?" என்று கரிசனமாக கேட்டாள்.
அப்போது தான் அவளின் இருப்பை உணர்ந்தவர் என்றைக்கும் இல்லாமல் தன் மகன் தன்னைக் காண வந்ததன் காரணத்தை யூகித்தார்.
"உன் பேர் என்னடா?" என்று ஆர்வமுடன் கேட்டார்.
"என் பேர் ஜனனி. அடுத்து என்ன கேட்கப் போறீங்கனு தெரியும். நான் ஜீவாவோட ஃபரண்ட். வீடு அண்ணா நகர். அப்பா ஸ்டீல் பிஸ்னஸ். அம்மா ப்ரைவேட் ஸ்கூல்ல டீச்சர். பாட்டி பத்தி சொல்ல ஒன்னும் இல்ல. ஓல்ட் லேடி. வேற எதாவது டீடெயில்ஸ் வேணுமா ஆன்டி?" என்றாள்.
அவளது பேச்சு அவர் முகத்தில் பல வருடங்களுக்கு பின்னர் சிரிப்பை கொண்டுவர அவள் தலையை மெல்ல வருடினார்.
"ரொம்ப அழகா பேசறடா.. எனக்கு கூட ஒன்னமாறி ஒரு பொண்ணு இருக்கும்னு ரொம்ப ஆசை. ஆனா இருந்தா அத நல்லபடியா பார்த்துக்க முடியுமானு தெரியல.." என்றவாறு ஜீவாவை ஏக்கத்துடன் பார்த்தார்.
அவரது புன்னகையைக் கண்டவன் தன்னையும் மறந்து அதை பார்த்து கொண்டிருக்க அவர் பார்வை திரும்பியதும் முகம் இறுக்கமானான். அவர் பார்வை பல விரும்பத்தகாத நினைவுகளை நினைவூட்ட கண்களை மூடித் திறந்தவன், "நான் கேன்டீன்ல இருக்கேன். நீ பேசிட்டு வா" என்று அந்த அறையை விட்டு வெளியேறினான்.
அவன் சென்றதும் வலியில் வாடிய அவர் முகத்தைக் கண்ட ஜனனி, "இவனுக்கு என்ன தான் ஆகுமோ? சரியான moody fellow. நீ கஷ்டப்படாதீங்க ஆன்டி. நான் என்னனு பேசிடுறேன்" என்றாள்.
அவளை ஏறிட்டவர், "அவன் ஒன்னும் சொல்லாதடா. தப்பு என் மேல தான். அவனுக்கு...ரொம்ப இலகிய மனசு" என்றார்.
அதை ஒத்துக்கொள்ளாத பார்வை பார்த்தவளின் கையைப் பற்றிவர், "ஜனனி உன்ன மாதிரி அழகா வளர்ந்திருப்பான் என் பையன். ஆனா விதி எங்க வாழ்க்கைய மாத்திடுச்சு. ரொம்ப வருஷம் கழிச்சு என் மனசுல உள்ள பாரத்தை இறக்கி வைக்கணும்னு தோணுது. ஜீவா அப்பாவும் நானும் கல்யாணம் பண்ணதுக்கப்றோம் சந்தோஷமா தான் வாழ்ந்தோம். சொந்தமா ட்ராவல்ஸ் ஏஜன்ஸி வச்சிருந்தோம். நல்லபடியா வருமானம் வந்தது. சரியா ஜீவா ரெண்டாவது வயசு இருக்கப்போ அவங்க அப்பா புதுசா தொழில் ரீதியா சில பேரோட பழக ஆரம்பிச்சாரு. ரியல் எஸ்டேட் பண்ணப் போறேன்னு ஒத்துக் கால்ல நின்னாரு. நான் தடுத்தேன். சரியா விசாரிக்காம எதுலையும் இறங்கிடாதீங்கனு போராடினேன். ஆனா அவர் கேக்கல. அப்பவே அவருக்கு குடிப்பழக்கமும் பழகி இருந்தது. கடைசில நான் பயந்த மாதிரி பெரிய நஷ்டத்த சந்திச்சோம்.
வீடு, நகை, தொழில் னு எல்லாத்தையும் இழந்தோம். அப்போ ஜீவாக்கு ஐஞ்சு வயசு. அப்போ இருந்தே இந்த இழப்புக்கெல்லாம் நான் தான் காரணம்னு அவர் மனசுல வன்மம் வளரந்திருச்சு. அதனால குடிச்சுட்டு வந்து..என்னை அடிக்க ஆரம்பிச்சாரு. என்னால சண்ட போட முடியல. ஜீவாவ சரியா பார்த்துக்கவும் முடியல. எட்டு வயசுலயே அவன ஹாஸ்டல்ல சேர்த்தேன். வருமானத்துக்கான ஆட்டோ ஓட்டப் பழகினேன். அதில அவங்க அப்பாக்கு இன்னும் கோவம். வீட்டுக்கு மாசம் ஒருமுறை அவன் வர்றப்போ கூட அவர் பழக்கம் மாறல. அவனுக்கு ஒரு பன்னெண்டு வயசு இருக்கும். கோவத்ல அவங்க அப்பாவ அடிச்சிட்டான். நான் எனக்காக சரியா போராடல சண்ட போடலனு அப்போவே என் மேல் அவனுக்கு கோவம் இருந்தது. ஆனா அது புரியாம எங்க அவங்க அப்பா அவனையும் அடிச்சு துன்புறுத்திடுவாறோன்ற பயத்ல அவன் பயங்கரமா திட்டி அடிச்சிட்டேன். அன்னைலருந்து அவன் என்ன முழுசாவே வெறுத்துட்டான். நானும் இத சரிபண்ணிடலாம்னு நினைச்சேன். ஆனா முடியல. அவன் என்ன விட்டு ரொம்ப தூரம் போய்ட்டான். பதினைஞ்சு வயசுலயே சின்ன சின்னதா வேலைப் பார்த்து காசு சேர்த்துவச்சு முழுசாவே என்னைவிட்டு விலகிட்டான். தண்ணி அடிச்சு அடிச்சு உடம்பு முடியாம ஒருநாள் அவங்க அப்பாவும் தவறிட்டாரு. அப்போ தான் நான் அவன கடைசியா பார்த்தேன். அதுக்கப்றோம் அப்பப்ப பணம் அனுப்புவான். என் பையன் இன்னும் கூட என்மேல பாசம் வச்சிருக்கான். ஆனா... நான்...என்" என்று அவள் தோள் மீதே சாய்ந்து அழுது தீர்த்தார்.
அவர் கூறியவைகளை கிரகித்துக் கொள்ளவே அவளுக்கு சில நிமிடங்கள் பிடித்தது.
___________________________________
வணக்கம் மக்களே 💞,
இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன் 😊 மறக்காம உங்க ஆதரவ கொடுங்க..
ВЫ ЧИТАЕТЕ
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
Подростковая литератураகாதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.