19. பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்?

296 12 0
                                    

சிவாவிற்கு இந்த காட்சி ரணத்தை தர முயன்று கண்களை மூடி உறங்க முயற்சித்தான்.

அவளது பார்வையையும் அமைதியையும் உணரந்த ஜீவா, "ஏன் சைலண்டா இருக்க? எப்பவும் எதாவது பேசிட்டே இருப்ப?" என்று மெல்லிய குரலில் கேட்டான்.

அதுவே அவளை மேலும் இம்சித்தது. அதைத் திசைத் திருப்பும் பொருட்டு, "ஒண்ணு இல்ல. எதாச்சும் பாட்டு கேட்கலாம்" என்றவள் தன் கைபேசியில் ஹெட்ஃபோனை மாற்றி ஒன்றைத் தன் காதில் வைத்து மற்றொன்றை அவனிடம் தந்தாள். அதை அவன் காதில் போட்டுக் கொண்டதும் அவள் பாடலைத் தேர்வு செய்ய முயல அவளைத் தடுத்தவன் தானே ஒரு பாடலை தேடி தேர்வு செய்தான்‌.

அவளைத் தடுப்பதற்காக கையைப் பிடித்தவன் அதன் பின்னரும் விடாமல் இருக்க கேள்வியோடு அவனை நோக்கினாள். அவன் பார்வை பல அர்த்தங்களை ஏந்தி நிற்க அதில் தன்னைத் தொலைத்து அவன் முகத்தில் அவள் பார்வை நிலைத்த நொடி பாடல் இருவர் காதுகளிலும் ஒலித்தது.

"உயிரே உன் உயிரென
நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

இதமாய் உன் இதயத்தில்
காத்திருப்பேன் கனவே
கனவாய் உன் விழிகளைப் பார்த்திருப்பேன் தினமே
மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்
விழுந்தாய் ஓர் விதையென நான் எழுந்தேன்"

அந்தப் பாடல்களின் வரிகள் ஒலிப்பதோடு அவனும் இணைந்து மெல்லிய குரலில் பாட அவள் முகம் பிரகாசமானது. அவனது கண்கள் வழியே அவனது நேசத்தை உணர்ந்தவள் அதைப் பெறுவதற்கு பெருமை அடைந்தாள்.

"விரலுக்கும் இதழுக்கும்
பிறந்திடும் இசையென
இருவரும் இருப்போம்
இடம் பொருள் மறப்போம்
உனக்கென எனக்கென முதலெது முடிவெது
எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம்"

என்று அவன் அவள் விரலோடு விரல் கோர்த்த போது உண்மையில் அவள் உலகத்தையும் மறந்தாள். அதே நேரம் அஞ்சலி அவள் தோளைத் தட்ட அதிர்ந்து திரும்பினாள் ஜனனி. அப்போது தான் அனைவரின் பார்வையும் தன் மேல் இருப்பதை உணர்ந்தவள் திருதிருவென விழித்தாள்.

"ஹே லூசு. உன் ஸ்டோப் வந்திடுச்சு. உனக்கு மட்டும் தினமும் அனொன்ஸ் பண்ணனுமா?" என்று திட்டினாள்.

அதைக் கேட்டு ஜீவா சிரித்துவிட அவனை முறைத்தவள் தன் கைப் பேசியை ஹெட்ஃபோனோடு பையில் போட்டு மூடிவிட்டு எழுந்தாள். வேண்டுமென்றே செல்லும் போது அவன் காலை மிதித்து விட்டு ஓடினாள்.

அவள் இறங்கும் போது ஓட்டுநர், "இதே மாதிரி இன்னொரு வாட்டி லேட் பண்ண.
அப்றம் நிறுத்தாம போய்டுவேன் ஜனனி" என்று எச்சரித்தார்.  தன் காதுகளில் இரு கைகளையும் வைத்துக் கொண்டவள் 'மாட்டேன்' என்று தலையாட்டியதும் சிரிப்போடு வண்டியை இயக்கினார் ஓட்டுநர்.

___________________________________________

வணக்கம் மக்களே ❤️,

இந்த அத்தியாயம் பிடிச்சிருந்தா மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க‌....

பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்Where stories live. Discover now