38. பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்?

276 12 0
                                    

அதேநேரம் அங்கு வந்த ஜனனியின் கையில் அந்த ஆல்பத்தில் இணைவதற்கான ஒப்பந்தத்தின் நகல் இருந்தது. அவர்களைக் கண்டதும் அருகில் வந்தவள், "ஓகே. ஓகே. உங்க ஃபரண்ட்ஸ பட சீன் முடிஞ்சது. இப்ப மை டைம்" என்றாள்.

அதற்கே அனைவரும் புன்னகைத்து விலக ஜீவாவால் அவள் மீதிருந்து பார்வையை விலக்க முடியவில்லை. அவனிடம் அந்த ஒப்பந்தத்தை நீட்டினாள். அவன் குழம்பி என்னவென்று கேட்பான் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க, அவன் மிகுந்த ஆர்வத்துடன் அதை ஆராய்வதைக் கண்டதும் அவள் புரிந்து கொண்டாள்.

"நினைச்சேன். இந்த முஸ்தபா தலையை ஆவேசமா ஆட்டும் போதே சொல்லிடுவானு நினைச்சேன். சரியான ஓட்டவாய்" என்று அவனை பொரிந்து எடுத்தாள்.

அதற்கு மறுப்பாக தலையசைத்த முஸ்தபா, "நான் எதுவும் சொல்லல. அவன் ரீயாக்ஷனே அவ்ளோ தான்" என்று சமாளிக்க முயன்றான்.

அதற்கு அவள் பதில் பேசி சண்டையிட தொடங்கும் முன்னர் அவள் கைகளைப் பிடித்த ஜீவா, "ஜானு. இட்ஸ் ஓகே. நான் இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கேனா அதுக்கு ரீஸன் நீ தான். தேங்க் யூ ஜோ மச்" அவளை இறுக கட்டிக் கொண்டான்.

அவன் செய்கையில் முதலில் விழி விரித்தவள் பின் தானும் அவனை அரவணைத்து கொண்டாள். உடல் பேசும் மொழியையும் தாண்டி இரவருள்ளும் பல உணர்ச்சிள் தளும்பின. தொடர்ந்து சில தினங்கள் வேறுபாடுகளோடு சென்றதால் அவளை நீங்கி விடுவோமோ என்ற அச்சம் அவனை நீங்கி அமைதி பிறந்தது. இந்த இணக்கம் தொடர வேண்டும் என்று பரிதவிப்பும் இந்த அணைப்பில் இருந்தது. ஜீவாவை தவறாக இருமுறை எண்ணி விட்டோமே என்ற வருத்தங்களும் இதுபோல இனி ஒரு தினமும் அவனை நீங்கி இருந்திட கூடாது என்ற ஆசையும் அவளது அணைப்பில் தெரிந்தது. இவர்கள் இருவரும் நினைவுகளில் தனி உலகத்திற்கு சென்றுவிட சுற்றி இருந்த மற்றவர்களுக்கு என்ன செய்வதென புரியவில்லை. அந்த அணைப்பு தொடர்ந்து கொண்டே இருந்ததால் மூவரும் இணைந்து தொண்டையை செறுமிக் கொண்டனர். அதில் சுற்றம் உணர்ந்து இருவரும் விலகினர்.

பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்Kde žijí příběhy. Začni objevovat