மகளின் குரல் கேட்டு திரும்பியவர் புன்னகைத்து, "குட்மார்னிங்" என்றார்.
"குட்மார்னிங் பா. நீங்க என்ன இந்த டைம்ஸ் வீட்ல இருக்கீங்க?" என்று கேட்டபடியே அருகேயுள்ள இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
"வா வா. உனக்காக நான் வெய்டிங். ஹாஃப் டேய் பெர்மிஷன்ல இருக்கேன். நீ காலேஜ் போகலயா?" என்று கேட்டார்.
"அது..லேட்டா வந்ததுல கொஞ்சம் டையர்டா இருந்தது அப்படியே தூங்கிட்டேன்." என்றாள்.
அதைக் கேட்டு மறுப்பாக தலையசைத்தவர், "பொய். நேத்து தியேட்டர்ல அந்த பையன பார்த்த பின்னாடி வேணும்னே இன்னைக்கு காலேஜ்கு லீவ் போட்ருக்க" என்றார்.
"சே அப்படி இல்லபா..." என்று அவள் சமாளிக்க தொடங்கும் முன்னர் தன் வலது கரத்தை உயர்த்தி தடுத்தவர் மீண்டும் பேசத் துவங்கினார்.
"எனக்கு தெரியும் ஜனனி. அந்த பையன் உன் ஃபரண்டுனு. உன்னோட காலேஜ்ல படிக்கிறான். வேலைக்கு போறத பத்தி உன்கிட்ட சொல்லலேனு கோவமா இருக்க. ரைட்?" என்று கேட்டார்.
அவர் உண்மையை அறிந்து கொண்டதை புரிந்து கொண்டவள் தலையை மேலும் கீழும் ஆமென ஆட்டினாள்.
"அந்த பையன் அங்க வேலைப் பார்க்குறதுக்கு பல காரணங்கள் இருக்கலாம். பட், உன்கிட்ட பொய் சொல்லனும்ற ஐடியால அது பண்ணிருப்பானு எனக்கு தோணல" என்றார்.
அவனுக்கு ஆதரவாக அவர் பேசியது அவள் மறைந்த கோபத்தை தூண்டியது. "என்னமா நீங்களுமா? அவனுக்கு என்கிட்ட சொல்றதுக்கென்ன? அந்த ஆள் திட்னத பார்த்தீங்கள்ல. அப்படி திட்டு வாங்கி அவன் வேலை பார்க்கனுமா? என்கிட்ட சொல்லிர்ந்தா ஃபரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து இத விட பெட்டர் ஆன ஒரு ஜாப் கிடைக்க ஹெல்ப் பண்ணிருப்போம்ல" என்றாள் திரையரங்குகின் மேலாளர் அவனைத் திட்டியதை பொறுக்க முடியாமல்.
அவளது பேச்சின் வழியே அவள் ஆதங்கத்தை உணர்ந்து கொண்ட அவள் தந்தை, "இதனால தான் அவன் சொல்ல தயங்கிருப்பான். அவனுக்கு சரின்னு படும் வேலைய அவன் சென்றான். அதுல என்ன என்ன தப்பு இருக்கு? ரெஸ்பான்ஸிபல் லா வீட்டுக்காக யோசிக்கிறான். அத சப்போர்ட் தான் நீ செய்யனும். ஹெல்ப்க்ற பேர்ல அவன லோவா ஃபீல் பண்ண வச்சிடாத. ரெஸ்பெக்ட் ஹிஸ் டிஸிஷன்" என்று எடுத்துக் கூறினார்.
அவர் கூறியதை சிந்தித்து பார்த்தவள் தன் தவறை உணர்ந்தாள். பின் மனம் வருந்த, "சாரிபா. அவன் ஹெர்ட் ஆகிருப்பான்ல?" என்று கேட்டாள்.
"மே பி. நீ பொறுமையா பேசி புரிய வை. நான் கிளம்புறேன்" என்று அவள் தலையில் தட்டிக் கொடுத்து விட்டு சென்றார்.
அவர் சென்ற பின் அவள் மனதோ அவனை மகிழ்ச்சியாக்குமாறு ஏதேனும் செய்ய வேண்டும் என சிந்திக்க துவங்கியது. அதேநேரம் அவள் கைபேசிக்கு அழைப்பு வர அதை எடுத்து பேசினாள். அதில் அந்த பாடல் போட்டியின் குழுவினரில் ஒருவர் பேசினார். தன்னை எதற்காக அமைத்திருக்கின்றார் என புரியாமல் அவள் பேச ஒரு நற்செய்தியை அவளிடம் கூறினார் மற்றவர். அதைக் கேட்டவுடன் மகிழ்ச்சியில் ஆடிவிட்டு படபடப்புடன் ஏற்பாடுகளை செய்யத் துவங்கினாள் ஜனனி.
___________________________________________
வணக்கம் மக்களே,
இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க..
BẠN ĐANG ĐỌC
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
Teen Fictionகாதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.