பேருந்து செல்லும் போதே கண்கள் சொருகியவள் சரிந்து கண்ணாடியில் மூடிக்கொண்டாள். தலையைத் தேய்த்துக் கொண்டே மீண்டும் அதில் சாய்ந்தவள் அப்படியே உறங்கிப் போனாள். பேருந்து ஏற்ற இறக்கங்களில் இறங்கி செல்ல கண்ணாடியில் அவள் தலை அதிர்வோடு இருந்தது. பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு அவள் தலையை தன் தோளில் சாய்த்துக் கொண்டான் சிவா. ஏனோ அந்த நிமிடம் அவள் தன்னுடனேயே பயணித்த மாட்டாளோ என்ற ஏக்கம் அவனுள் தோன்றியது. இருப்பினும் அந்த நிமிடங்கள் தந்த களிப்பில் உள்ளம் பரவசமானமானான்.
அதே நொடி அவளது நிறுத்தத்தில் பேருந்து திடீரென நிற்க அந்த அதிர்வில் பதறி எழுந்தவள் சன்னல் வழியே பார்த்துவிட்டு தன் பையோடு எழுந்தாள்.
கண்களைத் தேய்த்துக் கொண்டே, "பைத்தியம். ஸ்டாப்பிங்க் வந்ததும் எழுப்பியிருக்கலாம்ல. உன்ன நாளைக்கு பார்த்துக்கிறேன்" என்று ஓடியவள் ஓட்டுநரிடம், "அண்ணா நான் இன்னும் இறங்கல" என்றாள்.
உடனே மீண்டும் நிறுத்தியவரைப் பார்த்து புன்னகையோடு கையாட்டியவள், "தேங்க்ஸ் னா" என்று இறங்கினாள்.
அடுத்த வந்த நாட்கள் சிவா அவளிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டான். முதலில் அதை உணராதவள் நாட்கள் செல்ல செல்ல அவனிடம் இருக்கும் ஒதுக்குதலை கண்டு கொண்டாள். இத்தனை வருடங்களாக தன்னில் ஒரு அங்கம் போல இருந்த நண்பன் தன்னை விலக்குவது அவளுக்கு வருத்தமளித்தது. அதுகுறித்து அவனிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்தாள். அதேநேரம் ஜீவாவின் குறும்பு பார்வைகளும் அவனது தித்திக்கும் செயல்களும் அவள் கவனத்தை திசை திருப்பியது.
எப்போதும் போல புத்தகங்களை அவள் மேசையில் குப்பையாக போட்டு நண்பர்களுடன் கேன்டீன் செல்ல திரும்பி வந்து பார்த்தால் அது அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் வீட்டில் இருந்து அவள் தண்ணீர் பாட்டிலை மறந்துவிட்டு வர ஒரு புதிய பாட்டிலை வாங்கி போகிற போக்கில் வைத்துவிட்டு சென்றான் ஜீவா. அவள் டேபிளில் இருந்த சிறு ஆணி அவள் கையில் லேசாக ஒரு நாள் கீறியது. மறுநாள் அவள் மேசையில் ஆணிகளே தெரியாதளவு சுத்தியல் வைத்து அடித்திருந்தான். இப்படி அவனது சிறு செயல்கள் கூட அவளை முழுதும் ஈர்த்தது. முகத்தில் மறைத்தும் மலர்ச்சி பொங்கியது. அவ்வப்போது அவன் அன்னையையும் சென்று பார்த்து வந்தவள் அவர் மூலம் அவனுக்கு பிடித்தவைகளை கேட்டு தெரிந்து கொண்டாள். அதில் ஒன்று அவளை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது.
"நிஜாமாவா சொல்றீங்க ஆன்டி? ஜீவா பாடுவானா?" என்று ஆச்சர்யம் விலகாமல் கேட்டாள்.
"ஆமாடா. அவனுக்கு ம்யூசிக் னா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல என்ன பாட்டுக் க்ளாஸ் சேர்த்துவிட சொல்லி கேட்டான். ஆனா நா இருந்த நிலமைல அப்போ என்னால எதுவுமே செய்ய முடியல. பாவம் என் மகன். அப்றம் ஆசப்படுறதையே நிப்பாட்டிடான். இப்பவும் அவனுக்கு பாடுறதுல ஆச இருக்கும்னு எனக்கு தோணுது. அந்த கடவுள் அவனுக்கு நல்ல வழி காட்டனும்" என்று இறைவனிடம் வேண்டினார்.
அங்கிருந்து வந்தது முதல் ஜனனியின் மனது அதிலேயே உழன்றது. அவனது குரலில் ஒரு பாடல் கேட்க வேண்டும் போல ஆவல் எழுந்தது. அன்றைய நாளுக்கு பின் இருவரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. இன்று அந்த மொத்த உணர்வுகளும் ஒருசேர தோன்ற அவனைத் தேடி சென்றாள்.
_____________________________________________________
வணக்கம் மக்களே ❤️
இந்த அத்தியாயம் பிடிச்சிருந்தா மறக்காம உங்க ஆதரவ கொடுங்க. உங்க கருத்துக்களை இனிதே வரவேற்கிறேன்.
BẠN ĐANG ĐỌC
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
Teen Fictionகாதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.