13. பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்

424 15 0
                                    

அங்கிருந்து சென்று நண்பர்களிடம் வந்தவள் அவர்கள் பேசுவதை எதையும் கேட்காமல் தன் உலகில் மூழ்கியிருந்தாள். தன்னிடத்தில் வந்து அமர்ந்தவள் அப்படியே மேஜையில் சாய்ந்து கண்களை மூடினாள். மூடிய விழிகளுக்குள் அவன் பாடியது தோன்ற இதழ்கள் தானாக விரிந்தது அவளுக்கு. தன்னில் உள்ள பெண்மையைத் தூண்டியவனை மனதில் திட்டியவள் பிற வேலைகளில் ஈடுபடுவதில் சிரமம் கொண்டாள்.

அவளைத் தேடி வந்த ஜீவா அவள் கண்களை மூடி உறங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து சலிப்போடு மீண்டும் வெளியே வந்தான். அவளைப் பார்த்து பேசத் தூண்டிய மனதை அடக்கும் வழி புரியாமல் இருந்தவனக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்று அவன் பேச அவனது அன்னைக்கு சில பரிசோதனைகள் செய்யவேண்டும் என்று மருத்துவமனையிலிருந்து அழைத்திருந்தனர். வேறுவழியின்றி தன் வகுப்பு ஆசிரியரிடம் கூறி விடுப்பு பெற்று சென்றான்.

இங்கு இப்படி இருக்க ஜனனியின் மனதோ ஒருபுறம் படபடத்தாலும் மறுபுறம் அவன் வரவை எதிர்பார்த்திருந்தது. அதனால் வகுப்பிற்கான மணி அடித்ததைக் கேட்டதும் அவன் வருகையை எதிர்நோக்கி கண்களை வாசலிலேயே பதித்தாள். ஆனால் அவன் வகுப்பு முடியும்வரை வரவில்லை. அது அவளுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும் அவனது திறமையைக் வெளிக்காட்டுவதற்கான இசைப் போட்டி குறித்து இணையத்தை அலசினாள். அப்போதுதான் மாநில அளவில் கல்லூரிகளுக்கான இசைப் போட்டி குறித்து வெளிவந்த அறிவிப்பை பார்த்தாள். விருப்பம் உள்ள கல்லூரிகள் இதில் பங்கேற்கலாம் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான முதற்கட்ட தேர்வு நடக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். அடுத்த கட்டம் முக்கிய நகரங்களான சென்னை கோயம்புத்தூர் திருச்சி மதுரை போன்ற நான்கில் மட்டும் நடப்பதாக அறிவித்திருந்தனர். இறுதி கட்டத்திற்கான தேர்வு சென்னையில் நடக்கும் என்று கூறியிருந்தனர். முதல் பரிசு 50 ஆயிரம் ரூபாய்; இரண்டாவது பரிசு 25 ஆயிரம்; ரூபாய் மூன்றாவது பரிசு 10,000 ரூபாய் என்று அறிவித்திருந்தனர். இதைத்தாண்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக தேர்வாகும் 3 பேருக்கு தலா 500 ரூபாய் பரிசு எனவும் கூறி இருந்தனர்.

பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்Onde histórias criam vida. Descubra agora