10. பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்

452 14 0
                                    

புன்னகையோடு கல்லூரி வந்து சேர்ந்தவன், ஜனனியின் வருகைக்காக காத்திருந்தான். சில நிமிடங்களில் ஆட்டோவிலிருந்து இறங்கியவள் தன் கையிலிருந்த காசை கொடுத்துவிட்டு அவன் அருகே வந்தாள். அவனை அவள் முறைக்க அதற்குமேல் முடியாமல் ஜீவா சிரித்தான். அவனது சிரிப்பொலி கேட்டு அவளது இதயத்தில் ஒரு வித இதம் பரவியது. கண்கள் விரிய அவள் மகிழ்ச்சியைக் கண்டவள் முயன்று போலியாக சினத்தை ஏந்தினாள்.

"நல்லா சிரி. உன்ன நம்பி வந்தேன் பாரு. பைத்தியம்" என்று கூறி அவனது கன்னத்தில் நறுக்கென கிள்ளினாள்.

வலியில் அவன் கத்த முகம் பிரகாசமாக அந்த இடத்தை விட்டு ஓடினாள். ஒரு கையில் கன்னத்தை தேய்த்தாலும் மறுபுறம் அவள் செல்வதை ரசித்து கொண்டிருந்தான். இரண்டு மூன்று மாணவர்கள் இவர்களை பார்த்து கிசுகிசுத்துக் கொண்டனர்.

வகுப்பிற்கு சென்றவர் ஜீவாவின் கடந்தகாலத்தை தவிர்த்து பிறவற்றை பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டாள். அதில் இரு கண்கள் மட்டும் அவளது இந்த செயலுக்கு முற்றிலும் எதிராக கூர்மையானது. கல்லூரி முடிந்ததும் கல்லூரி பேருந்தில் எப்போதும் போல ஜனனி ஏறி சன்னல் இருக்கையில் அமர்ந்தாள். அவள் பார்வை ஏனோ ஜீவாவின் நின்றிருந்த பைக்கின் மேல் நிலைத்தது. இன்றைய நாளின் நிகழ்வுகளை மனதில் அசைபோட்டவள் முகம் இளஞ்சிவப்பு நிறம் கொண்டது. அவனது சிரிப்பு கண் முன் தோன்ற தன்னைத் தானே தலையில் கொட்டிக் கொண்டாள்.

'இன்னொரு வாட்டி அவனப்பத்தி நினைக்காத. சரியா?' என்று தன்னிடம் முணுமுணுத்து கொண்டாள்.

உடனே அஞ்சலி அவளைப் பார்த்து, "யாரப்பத்தி ஓ ஜீவா.." என்று முடிப்பதற்குள் அவள் வாயைப் பொத்தினாள்.

"சும்மா இரு. யாராச்சும் கேட்டுடப் போறாங்க" என்றாள் ஜனனி பதட்டமாக.

"யாரு கேட்பாங்கனு சொல்ற? அதோ அந்த பைக்ல உட்கார்ந்துட்டு உன்னையே பார்த்துட்டு நிக்கிறாரே அவரா?" என்று அஞ்சலி கேட்டாள்.

அதைக் கேட்டதும் ஜனனி திரும்பி அவனைத் தேட அங்கு யாரிமில்லாததால் ஏமாற்றம் அடைந்தாள். அருகே அஞ்சலியின் சிரிப்பொலி கேட்க ஜனனிக்கு எரிச்சலானது.

"நீ இன்னைக்கு செத்த என்ட" என்றவள் அஞ்சலியை தன் கையில் இருந்த கனமான புத்தகம் கொண்டு அடிக்க அவளிடம் இருந்து தப்பிக்க அஞ்சலி நண்பர்களின் உதவியை நாடினாள்.

"ஹே சிவா, வைஷூ.. இங்க பாருங்க என்ன அடிக்கிறா. வைஷு நீ முன்னாடி உட்காரு. இவகூட மனுஷன் உட்காருவானா?" என்றாள் முதுகைத் தேய்த்தபடி.

அதற்கு சிரித்த சிவா, "நீ என்ன பண்ணியோ? யாருக்கு தெரியும்" என்றான்.

"அடப்பாவி இப்டி support பண்ற. நீலாம் எனக்கு ஒரு ஃபிரண்டா. வைஷு நீ வாடி செல்லம். முன்னாடி போய் உட்காரு" என்று வைஷுவிடம் கெஞ்சினாள்.

"அஸ்கு புஸ்கு. சன்னல் சீட்ட விட்டு நா வர மாட்டேன். சிவா நீ போயேன். இல்லாடி இந்த லூசு விடாது" என்றாள் வைஷ்ணவி.

"சரி சரி போறேன்" என்று எழுந்து ஜனனி அருகேயுள்ள இருக்கையில் சிவா அமர்ந்தான்.

"தேங்க்யூ சிவா. நீ தான் என் பெஸ்ட் ஃபிரண்ட்" என்று அவன் தோளில் தட்டியவள் பார்வையை மீண்டும் அந்த பைக்கின் மேல் செலுத்தினாள்.

பேருந்து புறப்பட தயாரானதும் ஏமாற்றத்தோடு பார்வையை அகற்றியவளைக் கண்ட சிவாவின் மனம் வருந்தியது. அவளை முதன்முதலாக விழி அகலப் பார்த்தவன் தன் மனதில் சலனத்தை உணர்ந்தான். பள்ளி முதல் தோழியாய் உடன் இருந்தவள் இன்று புது வித கோணத்தில் தெரிந்தாள். அவள் ஜீவாவிடம் செல்ல செல்ல அவள் மீதுள்ள நேசத்தை சிவா உணர்ந்தான். அவள் தன்னை விட்டு விலகி விடுவாளோ என்ற எண்ணமும் அவனை அச்சுறுத்தியது.

இன்று அவள் பார்வையில் வேறொருவன் மீது கொண்ட நேசம் அவன் இதயத்தை கீறியது. அவளை விட்டு விலக முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணிக் கொண்டவன் பார்வையை மட்டும் அவள் மீதிருந்து விலகவே இல்லை.

________________________________________

வணக்கம் மக்களே ❤️,

இன்னொரு அத்தியாயம் உங்களுக்காக. பிடிச்சிருக்கானு சொல்லுங்க. உங்க ஆதரவ கொடுங்க🙏

பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்Donde viven las historias. Descúbrelo ahora