அடுத்த நாள் போட்டிக்கு விருப்பமுள்ள மாணவர்களின் பட்டியலை எடுத்தனர். பலரும் ஆர்வமுடன் அதில் தங்கள் பெயர்களை இணைத்து கொண்டனர். ஜீவாவின் எண்ணைப் பெற்ற பின்னரும் ஜனனி அதற்கு அழைக்க முயற்சிக்கவில்லை. அவனிடம் பல ஆயிரம் விடயங்கள் பேச வேண்டும் என தோன்றினாலும் போட்டி முடியும் வரை அவன் கவனம் திசை மாறிட கூடாது என்று நினைத்திருந்தாள். அவன் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதில் அவனை விட அவள் திண்ணமாக இருந்தாள்.
அடுத்த நாள் வகுப்புகள் முடிந்ததும் மாலை அனைவரும் கிளம்பும் போது ஜனனி ஜீவாவைத் தன்னோடு அழைத்துச் சென்றாள். அவளையே பார்த்துக் கொண்டிருத்தவன் எந்தவித ஆச்சர்யமும் இன்றி அவளோடு இணைந்து கொண்டான்.
"ஜீவா, இன்னைக்கு உனக்கு வேற ஏதாவது வேலை இருக்கா?" என்று கேட்டாள்.
அவனை இன்று அந்த இசை வகுப்புக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணியிருந்தாள் ஜனனி. ஆனால அவனோ செலவுகளை கையாள திரையரங்கத்தில் பகுதி நேர வேலைக்கு சேர்ந்திருந்தான். அதை அவளிடம் கூறி அவளை வருத்தப்பட வைக்க அவன் விரும்பவில்லை. எனவே அவளிடம் போலியான ஒரு காரணத்தை கூறினான்.
"இல்ல..அது..ஒரு 6 மணிக்குமேல அம்மாவ தினமும் check up கூட்டிட்டு போறேன்." என்றான்.
அவனது தடுமாற்றத்தை அவள் பெரிதாக கவனிக்கவில்லை. அதனால் ஏமாற்றத்துடன், "அப்டியா? நான் இன்னைக்கு எனக்கு தெரிஞ்ச ஒரு ம்யூசிக் க்ளாஸ்க்கு உன்ன கூட்டிட்டு போலானு நினச்சேன். சரி விடு. அப்போ ஒன்னு செய்றேன். வீக்யென்ட்ல அவங்கள போய் பாரு. முடிஞ்சவரை ஃபுல் டே போ. காம்பெடிஷன் வேற வருதுல. அந்த க்ளாஸ் உனக்கு ஃப்ரி தான். என் க்ளோஸ் ரிலேடிவ் அவங்க. அதனால இந்த சலுகை." என்று சிரித்தாள்.
உண்மையில் அதற்கான பணத்தை அவள் ஏற்கனவே செலுத்தியிருந்தாள். ஆனால் அதைக் கூறினால் அவன் நிச்சயம் சம்மதிக்க மாட்டான் என்பதால் அதை மறைத்து பொய் கூறினாள். இப்படி ஒருவருக்காக ஒருவர் கூறும் பொய்களே அவர்களிடையே ஒரு பெரிய சண்டைக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் இருவரும் அறியவில்லை.
"அதெல்லாம் எதுக்கு? ஆனாலும் நீ ரொம்ப தான் எனக்காக யோசிக்ற." என்று அவன் கூறினாலும் அவனது உள்ளம் அவளது செய்கையில் துள்ளிக் குதித்தது. இதழில் புன்னகையோடு அவன் விரலோடு விரல் கோர்த்து நடந்தான். அவனது இந்த செய்கையால் அதிர்ந்தவள் பின் வேறு புறம் திரும்பி புன்னகையோடு முகம் சிவக்க நடந்தாள்.
இப்படியே பேருந்தில் ஏறி அருகருகே அமர்ந்தனர். எப்போதும் பேசிக் கொண்டே வருபவள் இன்று மௌனமாக இருந்தாள். அவன் அருகே இப்படி அமர்ந்திருப்பது அவளுக்கு ஒருவித உணர்வைக் கொடுக்க, அதன் தாக்கத்தால் வார்த்தை வராமல் தவித்தாள்.
____________________________________________
வணக்கம் மக்களே,
இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க..

VOUS LISEZ
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
Roman pour Adolescentsகாதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.