ஒரு இளைஞனின் இனிமையான பயணமே கனவே கலையாதே...
இந்த உலகில் எத்தனை பெண்களை கண்டாலும் நம் கனவில் தோன்றும் மங்கையின்
சாயல் எங்கு உள்ளது என்பதையே நம் மனம் தேடும்...
கனவில் தோன்றும் அனைத்தும் நடக்காது,ஆனால் நம்பிக்கை உள்ளவை சாத்தியமாகும்...
நாயகன் திடீரென கண் விழித்தான் கடிகாரத்தில் 3.30மணி அதிகாலை ,நாயகன் வயது 19.
எழுந்த நாயகன் தனது அறையை விட்டு வெளியே சென்றான்...
வானத்தை நோக்கியவனாய் பாட
ஆரம்பித்தான்..அழகிய கால்களில் கொலுசினை கொண்டு ஒரு பெண்ணின் உருவம் கடந்து செல்வதை கண்டான்.
அவளைப் பார்த்ததும் மூச்சு திகைத்தது,பாடல் நின்றது இசையில் நனைந்தவனாய் இமைக்காமல் இளங்கொடியை கண்டான்...
அவளின் கூந்தல் காற்றில் இவன் மீது மோத காணமல் போனது அவனின் மனது...
அவளின் இமையைக் கண்டு இதயத்தை தொலைத்தான் காதலை உணர்ந்தான்,அவளது கண்ணில் மூழ்கினான்,அவள் பேச ஆரம்பிக்கும் முன் ஒரு குரல்
டேவிட் எழுந்திரு மணி ஆகுது காலேஜ் இருக்கு இன்னும் தூங்கிட்டு இருக்க என்று, நாயகன் தாயின் குரல் அது,..
கனவினை எண்ணியவனாய் கல்லூரி சென்றான்..கனவினைப் பற்றி தோழர்களிடம் சொன்னான் ஆனால் அவர்கள் இதனை அலட்சியமாக வெறும் கனவு தான் இது என்றனர்....
ஆனால் டேவிட் அதனை வெறும் கனவு என ஏற்றுக் கொள்ள முடியவில்லை,கனவில் மனம் தொலைத்த அவன் அதனை தேட நினைத்தான்,இவன் இமைக்கும் ஒவ்வொரு முறையும் அவளின் இமையை கண்டான்,காதலில் முழு அளவில் கரைந்தான்,மறுபடி அவளை காண வேண்டும் என்று உறங்கிக் கொண்டே இருந்தான்.
கனவில் கூட காதலி காதலனை ஏங்க வைக்கிறாள்,அவளின் முகம் மறுபடி கனவில் காணத அவன் ,அவனுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்க மறந்தான்,ஆம் தேவதாஸ் ஆக மாறியது அவன் தோற்றம்,நண்பர்கள் எவ்வளவு கூறியும் அதனை ஏற்க மறுத்தான்,தேவதையை காண்பேன் என கூறி விலகிச் சென்று விடுகிறான்.,
கனவில் காதலை தேடி காலத்தை கழிக்கிறான்,வருடங்கள் பல சென்றது,படிப்பினை முடித்து நல்ல கம்பெனியில் பணிபுரிந்து வந்தான்..
அந்த கனவு மறுபடி தோன்றியது
டேவிட் அவன் பணிபுரிந்து கொண்டிருந்த கம்பெனியில் அவன் கனவில் வந்த தேவதையை கண்டான்,,ஆச்சர்யம் அவனைத் தாக்க அவளிடம் பேச ஆரம்பிக்கும் முன் அவள் அருகில் ஒரு குழந்தை இருப்பதை கண்ட அவன் ,குழந்தை இடையூறாக இருக்கும் நான் அறையில் விட்டு விடுகிறேன் என்றான்,அதனை கேட்ட அவள் கோபம் கொண்ட நிலையில் குழந்தை என்னுடையது என்றாள்,கேட்டு இடிந்த நாயகன் கனவுதான் என எண்ண ஒரு குரல் ,ஹலோ உங்க வேலையை மட்டும் பாருங்கன்னு.
ஆம் அவன் இன்று அவளை கனவில் காண வில்லை ...
இடிந்து போன டேவிட் தன் காதலிக்கு திருமணம் ஆனதை கனவு என கொண்டு ,அவள் என்றும் என் காதலி என்ற பொய்யை உண்மை என எண்ணி கனவிலே வாழ்கிறான்...
காதல் உணர்வு பூர்வமான ஒன்று உண்மையான ஒன்று ,காதல் அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் மாறுபடுமே தவிர கற்பனை அல்ல காதல்..
டேவிட் காதல் உண்மையான ஒன்று..அது தான் கனவில் தோன்றிய காதலை நிஜத்தில் காட்டியது...
சூழ்நிலையால் அவனுடைய காதலி வேறொருவரின் மனைவி,ஆனால் என்றும் அவள் டேவிட் காதலி ஆவாள்..
கனவு உள்ள வரை காதல் தொடரும்..அன்புடன்,
டேவிட்
YOU ARE READING
கனவே கலையாதே
Romanceகாதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவ...