பிருந்தா என் கண்ணழகி-2(மகிழினி)

1.1K 5 0
                                    

இந்த கதையை படிக்கும் முன் என் கதையில் பிருந்தா என் கண்ணழகி என்ற கதையை படித்து முடித்தபின் தொடரவும்..

வாழ்க்கையில ஒருத்தனுக்கு காலரா கூட வரலாம்ங்க ஆனால் காதல் வரக்கூடாது,பிருந்தாவ பார்த்து இருபது நாளாச்சு ,எங்க போயிருப்பாங்கன்னு ஆபிஸ்ல கேட்டும் சொல்லல ,என்னடா பண்றதுன்னு தெரியாம ஊர் ஊரா உணவுபாதுகாப்பு அலுவலகத்தை தேடி அலைந்தேன்,அந்த மாவட்டத்துல இருக்க அனைத்து ஊருக்கும் சென்று விசாரித்தேன் பிருந்தான்னு யாரும் இல்லங்கன்னு சொல்லிட்டாங்க,எதுவும் புரியல ,செலவுக்கு பணமும் இல்ல அடுத்த ஊருக்கு எப்படி போறதுன்னும் தெரியல,இரவு 10 மணி ,பசி தாங்கல என்ன பண்றது பணம் இல்ல அப்படியே ரோட்டோரம் உட்கார்ந்தேன், கண்லா தானாக மூடுகின்றது தூக்கம் இல்ல பசி மயக்கம் மயக்கத்தோட பெரிய ஏக்கம்,எப்படியாவது என் பிருந்தாவ பார்த்துடமாட்டேனா அவ கண்ண பார்த்து வாழ்ந்துடமாட்டேனான்னு ஏக்கம்,கண் அதுவா இருட்டிடுச்சு,மறுநாள் சுடதண்ணிய மூஞ்சுல ஊத்தி எழுப்புனாங்க போலீஸ்,என் பாக்கெட்ல இருந்து 2 கிலோ போதைப்பொருளை எடுத்தாங்க,எனக்கு எதுவுமே புரியல,தலைலயே அடிச்சி இழுத்துட்டு கோர்ட்டுக்கு போனாங்க,இவனுங்க பைல் க்ளோஸ் பண்ண அப்பாவி மேல பழி போட்டு உள்ள தள்ளுவானுங்கன்னு கேள்வி பட்றுக்கேன் ஆனால் எனக்கு நடக்கும்போதுதான் எவ்ளோ கொடுமைன்னு தெரிஞ்சுது,எனக்கு மூன்று மாதம் சிறை...

பிருந்தா அவளோட பார்வையும் அந்த சிரிப்பும் அப்படியே உள்ளுக்குள்ள இருக்க என் இதயத்தை கொடஞ்சி தள்ளுது,பிருந்தாவ பார்க்காம கண்லா இருண்டுப்போச்சு,ஏறத்தாழ ஒரு பயுத்தியமாதிரி திரிஞ்சேன்,ஜெயில்ல எப்பவுமே ஒரு வேலை செய்யணும் சும்மா இருக்கலா விடமாட்டாங்க,எனக்கு சமையல் வேலைங்க,அப்படியே நாட்கள் போச்சு,இரண்டு மாதங்கள் முடிவடைந்தது ...

இன்ஸ்பெக்ஷன் இருக்குன்னும் மேடம் வராங்கன்னும் ஜெயிலர் சொன்னாரு,பயந்துட்டே இருந்தேன் யாராவது என்னை ஹோட்டல்ல பார்த்தவங்களா இரும்பாங்களோன்னு ,மறுநாள் சமையல் செய்ற அறைக்குள்ள யாரோ வந்தாங்க ,நிமிர்ந்துலா பார்க்க கூடாதுங்க அது கூட தப்புதான் ஜெயில்ல நா குனிஞ்சி வெங்காயம் வெட்டிட்டு இருந்தேன்,சத்தமே போடாம அறையில இருந்த எல்லாரும் எப்படி வேலை செய்றோம்னு பார்த்துட்டு இருந்தாங்க,வியர்வை நிக்கல பயத்துல,டேய் உன் பேரு என்னன்னு பெண் குரல் கேட்டது,ஏதாவது பிரம்மையா இருக்கும்னு  குனிஞ்சிட்டே இருந்தேன்,டேய் மேடம் கேட்குறாங்க குனிஞ்சிட்டே இருக்கியான்னு தலையிலேயே படார்னு ஒரு அடி விட்டாரு ஜெயிலர்,நிமிர்ந்து ஜெயிலர் மூஞ்ச பார்த்துட்டே அந்த மேடம பார்த்தேன் பாருங்க மூச்சே வரலங்க அப்படியே திண்டாடி திக்கி திணறி போய் பார்த்தேன் , அந்த ஆபிஸர் பிருந்தாங்க, என்னயா கேட்டிங்கன்னு எழுந்தேன் ,என் செவுள்ளயே ஒரு அடி விட்டான் அந்த ஜெயிலர் ,அதெல்லாம் வலிக்கவே இல்லை,நீ இன்னும் உள்ளதா இருக்கியா ,இப்போ யார் பின்னாடி அலைஞ்சி இங்க வந்துற்கன்னு கேட்டா பிருந்தா,கொஞ்சம் கூட யோசிக்காம உன்னை தேடிதான் பிருந்தா ஊர் ஊரா அலைஞ்சேன் கைல பணம் இல்லை பசி ரோட்லயே மயங்கிட்டேன் என் மேல ஒரு பொய்யான வழக்கு போட்டு உள்ள தள்ளிட்டாங்க,இது கூட நல்லதுதான் இங்க வர்ல்லன்னா திரும்ப உன்னை பார்த்துற்க முடியாதுன்னு முழுசா சொல்லி முடிக்கிறதுக்குள்ள ஜெயிலர் வாய்லயே அடிச்சான்,நீங்க போங்க மேடம் இவன் ஒரு  லவ் பெய்லியர் அதான் எந்த பொண்ண பார்த்தாலும் இப்படி உளறுறானு என் கூட இருந்து பார்த்தவன் மாதிரி அள்ளிபோட்டான்,பிருந்தா எதுவுமே பேசாம திரும்பி பார்க்காம கூட கம்னு போயிட்டா,ஜெயிலர் அடிச்சி வாய உடச்சிட்டான்,எதுவுமே பண்ண முடியல,நான் அவ்ளோ சொல்லியும் பிருந்தா என்னை புரிஞ்சிக்கலன்னு நொந்து கிடந்தேன், எங்க இருப்பா இந்த ஊர்லதான் இருப்பாளா இல்லை வேற ஊர்ல இருப்பாளான்னுன்ற நினைப்புதான் உள்ள போட்டு தாக்குச்சு,நான் சமையல் அவ அரசாங்க அதிகாரி செட்ஆகாதுன்னு எனக்குள்ளேயே பிருந்தா எதுவும் பேசாம போனதிலிருந்து இந்த எண்ணமே ஓடிட்றுந்துச்சு,நாங்கள் கடந்தது....

மூன்று மாதம் சிறை தண்டனைக்குப்பின்,

எங்கே போய்ட்டு பிருந்தாவ தேட்றதுன்னு யோசிச்சிக்கிட்டே வெளியே வந்தேன்,ஒரு சேலை சிலை என் முன்னாடி நின்னுச்சு நகரும்மான்னு சொல்லியும் நகரல,யாருடான்னு நிமிர்ந்து பார்த்தா என் பள்ளிக்காதலி மகிழினி,திடீர்னு எப்படிடா இருக்கா ,ஏன்டா என்னை விட்டுட்டு வந்து இப்படி கஷ்டப்பட்றான்னு பேச ஆரம்பிச்சிட்டா...,

யார் இந்த மகிழினின்னு உங்களுக்கு தெரியும் ஆனா எங்க பள்ளிக்காதல பற்றி உங்களுக்கு தெரியாதுல ???

மகிழினிக்கு எப்படி நான் ஜெயில்ல இருந்தேன்னு தெரியும் ,கரெக்ட்டா வந்துற்கான்னு எனக்கு ஒன்னுமே புரியல,எங்களை நோக்கி வேகமா ஒரு கார் வந்துச்சு அதுல இருந்து பிருந்தா இறங்கினா,கனவு காதலிய நேர்ல பார்த்துட்டோமேன்னு சந்தோஷப்பட்றதா இல்ல ,கனவா இருந்தா மகிழினி வந்துட்டான்னு சந்தோஷப்பட்றதா எனக்கே தெரியல!!!!         

தொடரும்...

                                       அன்புடன்,
                                          டேவிட்
  

  

You've reached the end of published parts.

⏰ Last updated: May 28, 2018 ⏰

Add this story to your Library to get notified about new parts!

கனவே கலையாதேWhere stories live. Discover now