பார்வை ஒன்றே போதுமே

317 19 2
                                    

பருவம் அடைந்தவுடன் நம் கண்ணிற்கு பார்ப்பவை அனைத்தும் அழகாக தெரியும்,ஆனால் அவை அனைத்தும் உண்மை அல்ல,பருவ வயதின் மாயையே ஆகும்..அனைத்தும் மாயை அது உண்மை,..
சிவா  ,கல்லூரியில் கேன்டீன் வைத்திருக்கும் ஒரு இளைஞன்,முதுகலை பட்டம் பெற்றவன்,தனது படிப்பு செலவினை    தன்னுடைய வகுப்பு நேரம் முடிந்த பின்பு மீதமுள்ள நேரங்களில் பாஸ்ட்புட் இல் பணிபுரிந்து கல்வி செலவினை தன் முயற்சியின் மூலம் கவனித்து ,தற்போது தான் படிக்கும் கல்லூரியிலே கேன்டீன் வைத்து மேல்படிப்பை தொடர்ந்து படித்து வருகிறான்,அனைத்து பெண்களையும் சகோதரிகளாக எண்ணி பழகுபவன்,ஒரு பெண்ணைத் தவிர....
கவிதா, பெயருக்கு ஏற்றவள் போல் கவிதையாக இருப்பாள் அவள் சிரிக்கும் போது,கவிதா அதே கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாள்,..சில வருடங்களுக்கு முன்பு சிவா ஒரு பள்ளியில் கவிதாவை முதன் முதலில் கண்டான்,பார்த்த அந்த நொடியிலே கவிதாவின் பார்வைக்கு தன்னை இரையாக்கினான்,பார்வை ஒன்றே போதுமே என பயுத்தியம் போல சொல்லி விட்டான் அவள் முன்,என்ன என்று புரியாதவளாய் கேட்டாள் கவிதா,நிதானம் அடைந்த சிவா ,உன் பார்வை அழகாக உள்ளது என்றான்,புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாதவளாய் இருந்தாள் கவிதா,அப்போது கவிதா பத்தாம் வகுப்பு படித்து வந்தாள்,அதனைப் புரிந்து கொண்ட சிவா தன் காதலை தனக்குள்ளே வைத்து கவிதாவின் பார்வையை ரசித்தவனாய் ,அவள் பள்ளிக்கு செல்லும் போதும் மாலை வீட்டிற்கு செல்லும் போதும் அவள் பார்வையில் சிவா படாதவாறு தினமும் கவிதாவின் பார்வையை கண்டவனாய் வாழ்ந்தான்,சிவாவின் நண்பன்,காதலை சொல்லி விடு மச்சி என கூறி கொண்டே இருப்பான்,படிக்கிற பொண்ணுடா படிக்கட்டும் ,அவள் என் பார்வையில் தான் இருப்பாள் என்று சொல்வான் சிவா...
கவிதா பள்ளி படிப்பை  முடித்தாள், மாவட்டத்தில் இரண்டாம் மதிப்பெண் பெற்றாள்,தன் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் விருந்து அளித்து மகிழ்ந்தான்,கவிதாவின் தந்தையை விட பெரிய அளவில் கொண்டாடினான்,இது எதுவும் கவிதாவிற்கு தெரியாது,,,அதன் பின் கல்லூரி சேர்ந்தாள்,அவளைக் காண வேண்டும் என்றே அதே கல்லூரியில் முதுகலை படிப்பை தொடர்ந்தான்,
அவளை தினமும் கண்டவனாய் ,அவள் பார்வையை ரசித்தவனாய் நாட்கள் கழித்தான்,அவளிடம் பேச வேண்டும் என்றே அந்தக் கல்லூரியின் கேன்டீன் பொறுப்பை பெற்றுக் கொண்டான்,காலப்போக்கில் கவிதா சிவாவுடன் பேச ஆரம்பித்தாள்,அனைத்து பெண்களுக்கும் சிவா மீது அன்பு இருப்பதாலும் ,தன் சொந்த முயற்சியில் செலவினை செய்து படிக்கின்றான் என்ற எண்ணம் கவிதாவின் மனதில் பதிந்தது,சிவாவின் மீது தனி மரியாதையை ஏற்படுத்தியது,அதன் பின் கவிதா சிவாவை தன் குடும்பத்தில் ஒருவனாய் எண்ணினாள்,அவளது வீட்டிற்கு அழைத்து சென்று அவளது பெற்றோரிடம் அறிமுகப்படுத்தினாள் ,கவிதாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் சிவா மீது தனி மரியாதை ஏற்பட்டது,,அனைத்தும் சரியாக செல்கிறது என்று ஆனந்த காதலில் மிதந்தான்,கவிதாவிற்கு கல்லூரி படிப்பு முடிந்தது அன்று கடைசி நாள்,அனைவரும் பிரிந்து செல்லும் துயரத்தில் இருந்தனர்,கவிதா சிவாவை சந்திக்க வந்தாள்,இதுதான் சரியான நேரம் காதலை சொல்ல என்று நினைத்தான்,வந்த கவிதா ,நான் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும் என்று ஆரம்பித்தாள்,நானும் என்றான் சிவா,சரி நீங்கள் முதலில் சொல்லுங்கள் என்றான் சிவா,தயக்கத்துடன் நான் ரமேஷ் என்பவரை காதலிக்கிறேன் ,அவரும் என்னை விரும்புகிறார்,என்னுடன் பள்ளியில் படித்தவர்,பள்ளியின் கடைசி நாளன்று அவரது காதலை சொன்னார்,நான் அப்போது மறுத்து விட்டேன்,அதன் பின் தொடர்ந்து கொண்டே இருந்தான் ,ஒரு கட்டத்தில் நானும் கொஞ்சம் கொஞ்சமாக என் மனதை தந்து விட்டேன்,நீங்கள்தான் இதை எங்கள் வீட்டில் சொல்ல வேண்டும் என்றாள்...
அதைக் கேட்ட சிவா பார்வை இழந்தவனாய்,பார்வை தெரியாத அளவிற்கு அழுது கொண்டே இருந்தான்....
ஒரு மாதத்திற்கு பிறகு கவிதாவின் வீட்டுற்கு சென்றான் சிவா,சிரித்துக் கொண்டே வரவேற்றனர் கவிதா உறவினர்கள்,கவிதா சிவாவிடம்,தனது பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்து விட்டனர் என்றும் ,நாளை நிச்சயதார்த்தம் உங்களுக்கு சொல்லலாம் என்று நினைத்தேன் மறந்துவிட்டதாக கூறினாள்,திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்றாள்,சரி என்று அவள் பார்வையை கண்டவாறே சென்றான்,,, நாட்கள் கடந்தது,
கவிதாவின் திருமணத்திற்கு சிவா செல்லவில்லை,திருமணம் முடிந்தது.....

சில நாட்களுக்குப் பின்,ரமேஷ் கவிதா தங்கியிருக்கும் வீட்டின்   முன் பெரிய உணவகம் தயாரானது,அதன் மேலாளர் சிவா.. அவனால் அவனது காதலியின் பார்வையை பார்க்காமல் இருக்க முடியாது,,அவளது பார்வையில் படாமல்,அவளது பார்வையைக் கண்டவனாய் காலம் முழுவதும் இவன் காதல் வாழும் பார்வையிலே......
அனைத்தும் மாயைதான் காதலியின் பார்வையைத் தவிர,...

அன்புடன்,
  டேவிட்   

கனவே கலையாதேWhere stories live. Discover now