கண்டேன் என் காதலியை

544 26 3
                                    

இந்த உலகில் அனைத்து இளைஞனும் காதலை விரும்புவதில்லை,ஒரு சிலர் பெண்ணை நேசிக்காமலும் அல்லது தனக்கு பிடித்தமான பெண்ணை காண முடியாமலும் வாழ்கின்றனர்....
நம் நாயகன் ஹரிஷ் தனக்கு பிடித்தமான பெண் வருவாள் அவளை காண்பேன் ,என் காதல் இந்த உலகிலேயே சிறந்ததாக அமையும் என அவனது நண்பர்களிடம் கூறி கொண்டு இருப்பான்,.. ஆயிரம் பெண்கள் அவனை பார்த்தாலும்,அவனுக்கு ஏற்றவள் எங்கு இருக்கிறாள் என்று தேடியே காலம் கடத்தியிருந்தான்,.ஹரிஷ் ஐடிஐ கம்பெனியில் பணிபுரிகிறான்,அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணிடம் கூட பேச மாட்டான், அவனது நண்பர்கள் அவனுக்கு நேர்மாறாக இருப்பார்கள்,...
வருடம் சென்றது ,ஹரிஷ் உடன் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் திருமணம் நடந்தது விட்டது,ஆனால் ஹரிஷ் மட்டும் காதலித்து தான் திருமணம் செய்து கொள்வேன் என்று லட்சியம் கொண்டு உள்ளான்...
அவனது பெற்றோர் நிறைய சம்பந்தங்கள் பார்த்தாலும் வேண்டாம் என மறுத்துகொண்டே இருந்தான்,,,
காலங்கள் சென்றது,ஒருநாள் ஹரிஷ் தாய்க்கு இதயவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,இரவு பகல் என தூங்காமல் தாயின் அருகிலேயே அமர்ந்த நிலையில் வருத்தத்தில் இருந்தான்,திடீரென ஒரு குரல் கவலைப்படாமல் இருங்க,உங்க அம்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்று,நிமிர்ந்து யார் என பார்த்த ஹரிஷ் ,அவர்கள் டாக்டர் கீர்த்தனா...
கீர்த்தனாவை கண்டதும் உலகம் மறந்து தன்னை இழந்து அவளை பார்த்து நின்றான்,கீர்த்தனாவிடம் ஹரிஷ் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்டான்,,இல்லை என்று அவள் சொன்னதை கேட்டு ,அவன் தாயிடம் அம்மா கண்டேன் என் காதலை என்றான்,அதனைக் கேட்ட கீர்த்தனா பயுத்தியும் என திட்டி விட்டு சென்றாள்..இரண்டு நாட்களுக்கு பிறகு ஹரிஷ் அவன் தாய் மற்றும் உறவினர்கள் அனைவரும் கீர்த்தனா வீட்டிற்கு சென்றனர்,,,
ஹரிஷ்க்கு பெண் கேட்க சென்ற அவர்கள் கீர்த்தனாவிற்கு புற்றுநோய் உள்ளது என கேட்டு தெரிந்த பின்னர் ஹரிஷ்ன் தாய் இந்த பெண் வேண்டாம் என கூறி விட்டு வந்துவிட்டனர்....
ஹரிஷால் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை,கீர்த்தனாவை மருத்துவமனைக்கு சென்று சந்தித்து என்னை திருமணம் செய்து கொற்கிறாயா என கேட்டான்,அவனைக் கண்டதும் அழுதவாறு சென்றுவிட்டாள்,தான் விரும்பிய பெண்ணிற்கு ஏன் இப்படி ஆக வேண்டும் என அழுது புலம்பியவாறு அலைந்தான்..

தன் தாயிடம் அந்த பெண்தான் தனது மனைவி என ஆணித்தனமாக கூறினான்..ஆறு மாதங்கள் கீர்த்தனா வின் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் அலைந்து காதலை சொல்லி திரிந்தான் ,ஏற்றுக்கொள்ள முடியாது என்று கீர்த்தனா கூறினாள்,ஒருநாள் இரவு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த கீர்த்தனாவை வழிமறித்து தன் காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கெஞ்சினான்,மறுத்தால் உன் முன் உயிர் விடுவதை தவிர வேறு வழியில்லை என்று அழுதான்...
அவனது அருகில் சென்று அவனை கட்டி அணைத்து அழுதாள் கீர்த்தனா,நான் உன் வாழ்வில் வர எனக்கு சம்மதம்,உன்னை பார்த்த முதல் சந்திப்பிலே நான் உன்னிடத்தில் என்னைக் கொடுத்து விட்டேன் என்று அழுதாள் கீர்த்தனா,அதன் பின் நீ வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று கெஞ்சினாள்,மறுத்த ஹரிஷ் உன்னை சுமந்த இதயத்தில் வேறு ஒருத்தி்க்கு இடமில்லை,என்றான்,வீட்டிற்கு சென்ற இருவரும் அவர்களது விருப்பத்தை கூற இரு வீட்டாரின் சம்மதம் பெற்று காதலிக்கத் தொடங்கினர்,விரைவில் திருமணம்......

காதல் குறையை பார்ப்பதில்லை,நிறையை எதிர்பார்ப்பதில்லை....

அன்புடன்,
டேவிட்

கனவே கலையாதேOnde histórias criam vida. Descubra agora