காதல் தந்த கண்ணீர் துளிகள்

483 5 0
                                    

நாம இந்த உலகத்துல உதிர்த்த அடுத்த நொடியே போராட ஆரம்பிச்சிட்றோம்,பிறக்கும் போதே ,பிறக்கிறதாலதான் என்னவோ தெரியல,இந்த நாள் வரைக்கும் சில கண்ணீர்துளிகள் தண்ணீர் இல்லாத போதும் என் வாழ்க்கையை கடந்து சென்று கொண்டிருக்கின்றன,ஒரு வழியா ஸ்கூல்,காலேஜ் லா முடிச்சிட்டு இப்போ ஒரு நல்ல கம்பெனின்னு சொல்ல முடியாது தரமான கம்பெனியில வேலை பார்த்துட்டு இருக்கேன்,முதல்ல போர் அடிச்ச அந்த வேலை போக போக பழகிடுச்சு,வாரத்தில ஆறு நாளும் வொர்க்கிங் டே,ஒரே ஒரு டே தான் லீவு,அதுதான் சன்டே,அந்த ஒருநாள் எனக்குன்னு ஒதுக்கி ரொம்ப சந்தோஷமா இருப்பேன்,எனக்காக மட்டும் அந்த ஒருநாள் ஒதுக்கிய அந்த காலம் தொடரல..

கீர்த்தி ,என்னடா திடீர்னு கீர்த்தினு ஆரம்பிக்கிறேனு பார்க்கிறிங்களா,ஆமாங்க கீர்த்தி என்னோட ஒரு நாளை திருடி என் எல்லா கனாக்களையும் திருடிய அழகிய திருடி,...

நாளைக்கு தீபாவளி,இன்றைக்கு ட்ரஸ் எடுக்க வொர்க் முடிச்சிட்டு ,கடைசி பஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்,என் நேரம் எந்த பஸ்சும் நிறுத்தல,என் நேரம்னு சொன்னேன்ல அன்றைக்கு எனக்கு ரொம்ப நல்ல நேரம்ங்க,நிறுத்தாம போன பஸ்க்கு மத்தியில ஒரே ஒரு பஸ் மட்டும் நிறுத்தினாங்க,பஸ்ல ஏறிட்டேன்,மணி இரவு 11.30 ங்க அங்க இருந்த காலேஜ் பொண்ணுங்க எல்லாமே போனை யூஸ் பண்ணிட்டு இருந்தாங்க,என்னடா வாழ்க்கை இதுன்னு விரக்தியில இறங்க போனேன்,ஷால் வேகமா போற அந்த பஸ்ஸோட காற்றால என் முகத்தை மூடிடுச்சுங்க,இடியட் னு ஒரு வாய்ஸ்,எவ அவன்னு நிமிர்ந்து பார்த்தா,அந்த கலைந்த கூந்தல்லயும் அழகா இருக்கிற ஒரு பொண்ணோட வாய்ஸ்ங்க அது,ஹே கீர்த்தி ன்னு அந்த பொண்ணோட ப்ரண்ட் வாய்ஸ், எதுக்குங்க ஓட்ற பஸ்ல இருந்து இறங்கிறிங்கன்னு கீர்த்தி திட்ட ஆரம்பிச்சிட்டா, கீர்த்தி அவதாங்க ,கீச் கீச் னு ஒரு வாய்ஸ்,கேக்கவே ரொம்ப நல்லாருந்துச்சு,ஆனால் அவ பேசுனத உங்களால கேக்கவே முடியாது அவ்ளோ அசிங்கமா திட்டினா,சத்தியமா சொல்றேங்க அவ திட்டும்போது எனக்கு கோபமே வரல்ல,இத படிக்கும் போது உங்களுக்கு கோபம் வரலாம்,அதுக்காக என்னால பொய் சொல்ல முடியாது,ஆமாங்க அப்படியே என்ன திட்டிட்டு அமைதியா தூங்க ஆரம்பிச்சிட்டா,அந்த ஒரு மணி நேரம் பஸ்ல எப்படி போச்சினே தெரியலங்க,உடனே நான் இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு,அதுகூட கண்டக்டர் அசிங்கமா திட்டி இறங்க சொன்னதால தெரிஞ்சிது,இல்லனா கீர்த்திய பார்த்துக்கிட்டே போய்ருப்பேன்,நான் இறங்கிற வரை அவ எழவே இல்லை,மற்ற பொண்ணுங்கள விட அவ வித்தியாசமா தெரிஞ்சா எனக்கு அழகு,பேச்சு,அப்படினு எல்லாத்துலயம் ,கீர்த்திய நினைச்சிட்டே தீபாவளியை மறந்துவிட்டு வீட்டுக்கு போய்ட்டேன்,மறுநாள் தீபாவளி,எனக்கு மட்டும் கீர்த்தியோட தலைவலி, ஆமாங்க காதல்தான்,திரும்ப கீர்த்திய பார்க்கனும் பேசனும் அப்படின்ற எண்ணம் உடல் முழுக்க பரவிடுச்சு,ஆனா அதுக்கு அப்றம் நா கீர்த்திய பார்க்கவே இல்ல,நாட்கள் போச்சு,அதன்பின் வேலைல இருந்த கவனத்தால கீர்த்தி நியாபகம் குறைய ஆரம்பிச்சிது,கம்பெனில புதுசா ஸ்டார்ட் பண்ணின ப்ரான்ச்க்கு என்னை மேனேஜரா செலக்ட் பண்ணாங்க,அப்படியே திரும்பவும் கம்பெனி வேலை அப்டினு தொடர்ந்தது..

கனவே கலையாதேHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin