கடல் தாண்டிப் போகும் காதலன்

160 13 2
                                    

  காதல் ,காவியத்தில் இடம்பெற்ற ஒரு கலையின் உருவம் காதல் ...
கடற்கரையின் ஓரம் வாழ்ந்த இரு காதலர்களின் பற்றிய கதை...
காதலை உண்மையில் ஆணை விட பெண்ணே அதிகம் நேசிக்கிறாள்,அப்பெண்ணின் பக்குவம் அதனை வெளிப்படுத்தப்பட்டாள்,..
அனிச்சமலர் கதையின் நாயகி,
கடற்கரையில் உப்பு எடுத்து,வயதான அவளது பெற்றோரை
தாங்குபவள்,அலாவுதீன் கடலில் மீன் பிடிக்கச் சென்று அதனை விற்று தொழில் செய்பவன்,இரண்டு வருடங்களுக்கு முன்பு கடலின் அலை பாய்ச்சலால் கடல் ஓரம் இருந்த அனிச்சமலரின் வீட்டில் நீர் நிரம்பியது,அனிச்சமலர் அந்த சமயத்தில் வீட்டில் இல்லாததால் ஊனமுற்ற அவளது பெற்றோர் நீரில் மூழ்கியிருந்தனர்,அவர்கள் கத்தியதால் பலத்த சத்தம் கேட்டு அங்கு சென்ற அலாவுதீன் அவர்கள் இருவரையும் காப்பாற்றினான்,ஊரிலிருந்து வீடு திரும்பிய அனிச்சமலர் சுற்றிலும் இருந்த நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தாள்,அவளுடைய வீட்டிற்கு சென்று பெற்றோரை தேடினாள்,அங்கு பெற்றோர் இல்லாததால் அக்கம் பக்கத்தினரிடம் கேட்க அவர்கள் தெரியவில்லை என கூறினார்கள்,அன்று முழுவதும் அவர்களை தேடி அலைந்தவள் மயக்கமடைந்து கீழே விழுந்தாள்,அவளது பெற்றோர் தண்ணீர் ஊற்றி அவளை எழுப்பினர்,அவர்களை கண்டதும் அம்மா அப்பா வந்திட்டீர்களா எங்கே சென்றீர்கள் என அழுது கொண்டே பதற்றத்துடன் கேட்டாள்,அதன்பின் அவளது பெற்றோர் அவர்களது அருகில் இருந்த அலாவுதீனை காண்பித்து இந்த தம்பிதான் எங்களை காப்பாற்றினார் என்று கூறினர்,அலாவுதீனைக் கண்டு நன்றி தெரிவித்தாள்,பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் இனி என அலாவுதீன் சொல்லி சென்றான்..
அவனது அன்பு ,பெண்களை கண்டிராத தன்மை அவன் மீது அனிச்சமலருக்கு அன்பை ஏற்படுத்தியது,வீட்டிற்கு அவளது பெற்றோரை அழைத்து சென்றாள்,இனி உங்களை விட்டு எங்கும் போக மாட்டேன் என கூறி அழுதாள் அனிச்சமலர்...
அதன்பின் இயல்பான நிலையை கடல் அடைந்தவுடன் அவரவர் வேலையை தொடர்ந்தனர், அனிச்சமலர் உப்பு எடுக்கச் செல்கையில் அலாவுதீனை கண்டாள்,அவளை அறியாமல் காதல் வயப்பட்டால்,அவளை அலாவுதீன் கவனித்தான்,எந்த பெண்ணையும் கண்டிராத அலாவுதீன் ,அனிச்சமலரை நிமிர்ந்து பார்த்தான்,நாட்கள் செல்ல செல்ல இருவருள்ளும் காதல் மலர்ந்தது கடல் அலையின் முன்னே,...கடலின் சாட்சியாக அவர்களது காதல் வளர்ந்தது,தங்களது விருப்பத்தை அனிச்சமலரின் பெற்றோரிடம் இருவரும் கூறினர்,யார் என்று தெரியாத போதே உயிரை காப்பாற்றியவன் தங்களது மகளை நன்கு பார்த்து கொள்வான் என அவர்களது பெற்றோர் எண்ணினர்,திருமணத்திற்கு சம்மதித்தனர்,,அனைவரும் மகிழ்ச்சியில் திகைத்தனர்,திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது,இரண்டு நாட்கள் திருமணத்திற்கு உள்ள நிலையில் கடலுக்கு செல்ல வேண்டும் என அலாவுதீன் நண்பர்கள் கூறினர்,அனிச்சமலரிடம் கடலுக்குச் சென்று வருகிறேன் என கூறி சென்றான்,முதலில் மறுத்த அனிச்சமலர் விரைவில் வந்துவிடு என்று அழுதபடியே கூறினாள்,ஒரு நாள் கழிந்தது ,கடல் தாண்டி போன காதலனை நினைத்து அழுதநிலையில் பாடினாள்...கடலுக்கு சென்றவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்,அலாவுதீன் மட்டும் அவர்களிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்தான்,திருமண நாள் அன்று அலாவுதீன் உடல் கடற்கரை ஓரம் வந்தது,அனைவரும் கூச்சலிட்டனர்,அழுது கொண்டே ஓடினாள் அனிச்சமலர்,அவனைக் கட்டி அணைத்து அழுதாள்,உயிர் இருப்பதை அறிந்து மருத்துவரை வரவழைத்து உடலில் உள்ள நீர் முழுவதும் வெளியேற்றிய பின் அலாவுதீன் குணமடைந்தான்,
துன்பத்திற்கு பிறகு இன்பம் கண்டிப்பாக வரும்....
உறவினர்கள் மற்றும் கடல்தாயின் முன்னிலையில் அவர்களது திருமணம் நடைபெற்றது...
இலங்கை கடற்படையினரிடம் சிக்கியவர்களை குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தான் அலாவுதீன்,அரசின் நடவடிக்கையால் அவர்கள் மீட்கப்பட்டனர்,அனைவரின் ஆசியுடன் அலாவுதீன் அனிச்சமலர் காதல் திருமண வாழ்க்கை தொடரும்....

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட எத்தனையோ தமிழ் இளைஞர்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர்,முடிந்தால் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.....

அன்புடன்,
  டேவிட்

கனவே கலையாதேDove le storie prendono vita. Scoprilo ora