உன்னை விட எதுவும் பெரிசில்ல

144 11 4
                                    

  மனநல காப்பகத்துல குணப்படுத்தவே முடியாதுன்னு மருத்துவரால கைவிடப்பட்ட ஒருத்தன் தான் ராஜ் ,இவனோட உலகத்துல வெறும் ஆறு மாதம் மட்டும்தான் ,அந்த உலகத்துக்கு உள்ள உன்னை விட இந்த உலகத்துல எதுவும் பெரிசில்ல பிரேமான்னு மட்டும் சொல்லிட்டு இருக்கான் ராஜ் ,..

ஏன் இப்படி ஆனான் ராஜ் ?
யார் இந்த ராஜ்?

சில மாதங்களுக்கு முன்பு,

ராஜ் ஒரு அகதி,அவனோட சின்ன வயசுலயே ராஜ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு வந்துட்டாங்க,எப்படி இருந்தாலும் அவங்கள ஒரு அகதிகளா மட்டுமே இப்பவும் வச்சிற்கு அரசாங்கம்,காதல் அகதிக்கும் வரும் அனாதைக்கும் வரும்,,
ராஜ் அவனோட கல்லூரி படிப்ப முடிச்சிட்டு ஒரு பெரிய கம்பெனியில வேலை பார்க்கிறான்,..பிராமண் பெண் பிரேமா பூக்களை விட அழகுன்னுதான் சொல்லனும்
அப்படி இருப்பா பிரேமா,
ராஜ் பிரேமாவை அவனோட கல்லூரி நாட்கள்ள பார்த்தான்,ஒரே வகுப்பில் இருந்ததால பிரேமா ராஜ் கூட நட்பு முறையில் பழக ஆரம்பிச்சா,ஆனால் ராஜ் பிரேமாவை பார்த்த அந்த செகண்ட்லயே பிரேமாவை அவனோட காதலியா நினைச்சி வாழ ஆரம்பிச்சான்,இவர்களோட இந்ந காதல் நட்பு கலந்த அன்பு கல்லூரியின் கடைசி நாள் வரை அழகா தொடர்ந்தது,கடைசி நாள்ள ராஜ் தன்னோட காதல  பிரேமாட்ட தெரிவித்தான்,நட்பை அசிங்கப் படுத்திட்டியே ராஜ்னு பிரேமா அவன் காதலை கழுவி ஊத்திட்டு,இனி என் மூஞ்சுலயே முழிக்காதன்னு சொல்லிட்டு போய்ட்டா,பிரேமா போனதுக்கு அப்றம் காதலை சொல்லாமலே காதலிச்சிற்கலாம்னு ராஜ் அவனோட ப்ரெண்ட்ஸ்ட்ட சொல்லி பிரேமா அவனை பிரிஞ்சு போன வலியை தாங்க முடியாம ஒரு மாதம் முழுவதும் பிரேமாவோட நினைப்பிலிருந்து வெளியே வர முடியாம தவித்தான்,நாட்கள் போக போக காதலை தள்ளி வச்சிட்டு வேலைக்கு போக ஆரம்பித்தான் ராஜ்,உண்மைக் காதல் எங்க போனாலும் விடாதுன்ற மாதிரி இவன் வேலைக்கு போற கம்பெனியில இவனுக்கு முன்னாடி வேலைக்கு சேர்ந்துற்கா பிரேமா,மனம் மாறி வேலை செய்யலாம் என முடிவு எடுத்த ராஜ் ஆபிஸ்ல பிரேமாவை பார்த்ததுக்கு அப்றம் அவனோட காதலை புரிய வைக்கிறதுதான் முழு வேலைன்னு முடிவு பண்ணி காதலை புரிய வைக்க முயற்சி செய்றான்,மறுபடியும் ராஜ பார்த்த பிரேமா ஜர்க் ஆகுறா,ஆனா பிரேமா எல்லாத்தையும் மறந்துட்டு மறுபடியும் நல்ல ப்ரெண்ட் போல பழக ஆரம்பிச்சா,ராஜ் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான்,எப்படியாவது தன் காதலை புரிய வைத்திட வேண்டும் என்று எண்ணினான்,மாதங்கள் சென்றது ,அந்த கம்பெனியில் சிறந்த புது பணியாளர்கள்னு ராஜ் மற்றும் பிரேமாவை தேர்வு செய்து அவர்களுக்கு   தனி விழா ஒன்றை ஏற்பாடு செய்தது கம்பெனி,அதில் அனைவரும் பேசிய பின் ராஜ் பேச ஆரம்பித்தான்,பிரேமா அவனுடன் பழகுவதை வைத்து தான் பிரேமாவை காதலிப்பதாகவும், உன்ன விட எதுவும் பெரிசில்லன்னு நான் ஆறு மாதம் அவள் பின்னே சுற்றி தன் காதலை புரிய வைக்க, தான் கஷ்டப்பட்டதாகவும் ,விரைவில் அவளை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அனைவரின் முன்னும் கூறினான்,அந்த விழாவில் இருந்த பிரேமா வின் பெற்றோர் மற்றும் பிரேமா ஆகியோர் அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்,பிரேமா ராஜ்யை எதுவும் கூறாமல்
அமைதியாக சென்று விட்டாள்,அதன்பின் பிரேமா மறுநாள் கம்பெனிக்கு வரவில்லை,ராஜ் பிரேமாவின் வீட்டிற்கு சென்று பார்த்தான், அங்கு சென்ற பார்த்த போது பிரேமா மற்றும் அவளது பெற்றோர் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்தனர்  ,பிரேமாவை திருமணம் செய்து கொள்ள போவதாக ராஜ் கூறிய தவறான பேச்சினால்,அன்று இரவு அவளது பெற்றோர்கள் தன் பிராமண் குடும்ப கௌரவத்தை கெடுத்து விட்டாயே என்று பிரேமாவிடம் அவளது பெற்றோர் கூறி அழுதுள்ளனர்,அதன்பின் பிரேமா மற்றும் அவளது பெற்றோர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர் என்பதை அக்கம் பக்கத்தினர் பேச அதனைக் கேட்ட ராஜ்,தப்பு பண்ணிட்டேன் பிரேமா தப்பு பண்ணிட்டேன் என்று பிரேமாவைப் பார்த்துக் கொண்டே இரும்புக் கம்பியில் தலையை வேகமாக இடித்துக் கொண்டு மயங்கி இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தான் ...

இன்று,

மனநல காப்பகத்தில் ராஜ் பேசும் ஒரே வாி,..

உன்னை விட எதுவும் பெரிசில்ல பிரேமா...

பசங்க பண்ற பெரிய தப்பே இதாங்க ,ஏதாவது ஒரு பொண்ணு சிரிச்சி பேசிட்டா உடனே லவ் அப்டி இப்டினு நினைச்சிக்றது,அத நினைக்றது மட்டும் இல்லாம ஊர் முழுக்க இவள்தான் மச்சி என் ஆளு அப்டினு சொல்லிக்றது,ஆனா அது அந்த பெண்ணோட குடும்பத்தை எவ்ளோ பாதிக்கும்னு யோசிக்கிறதில்ல!!! 

அன்புடன்,
   டேவிட்

கனவே கலையாதேDove le storie prendono vita. Scoprilo ora