என்ன சொல்லப்போகிறாய்

164 11 3
                                    

  எல்லா பசங்களுக்கும் தன்னோட காதலிதான் இந்த உலகத்தின் காதல் தேவதை அப்படின்ற ஒரு எண்ணம் இயல்பாகவே இருக்கும்,அதேபோல பெண்களுக்கும் தன்னோட காதலன்தான் காதல் மன்னன் அப்படின்ற எண்ணம் இருக்கும்,காதல் வரும் போது நம்ப யாருக்கும் அதற்கு அப்புறம் வரப்போகும் பிரச்சனை கஷ்டம் அதெல்லாம் தெரியறதுல்ல,காதல் கடவுளுக்கு அடுத்தபடியா நாமெல்லாம் பார்க்கிற கேக்கிற சொல்ற ஒரு வார்த்தை தான் காதல்....

ஆதிக் ,இவன்தான்ங்க இந்த கதையின் கதாநாயகன், வாழ்க்கையில எப்படியாவது சாதிச்சிடணும் அப்படின்ற ஒரு தன்னம்பிக்கையில வாழ்ந்துட்டு இருக்க ஒருத்தன்,இவனோட அப்பா இவனோட சின்ன வயசுலயே இறந்துட்டாரு ,அவனோட அப்பா இறந்த அப்புறம் ரொம்ப ஏழ்மையில ஆதிக் குடும்பம் இருந்தது,சொந்தக்காரங்க பத்தி உங்களுக்கு தெரியாதா,பணம் இருந்தா மதிப்பாங்க இல்லனா பழி சூட்டுவாங்க இவ்ளதாங்க சொந்தக்காரங்க,இப்படி பட்ட சொந்தக்காரங்க மத்தியில எப்படியாவது தன்னோட பையன படிக்க வச்சி பெரிய ஆளா ஆக்கிடணும்னு ,ஆதிக்கை பி.எஸ்.ஸி வர படிக்க வச்சி,இப்போ ஒரு நல்ல நிலைமையில் இருக்காங்க ஆதிக் அம்மா,விட்டுப்போன சொந்தங்கள் எல்லாம் இப்போ இவங்கள தேடி வர ஆரம்பிச்சிட்டாங்க,பி.எஸ்.ஸி முடிச்ச ஆதிக் இனி அம்மாவுக்கு கஷ்டம் தரக்கூடாதுன்னு ,டிரைவிங் பண்ணிக்கிட்டு அதுல வர வருமானத்துல எம்.எஸ்.ஸி படிக்க ஆரம்பிச்சான்,சின்ன வயசுல இருந்து அம்மாவோட கஷ்டத்தை பார்த்து வளர்ந்த ஆதிக் பொறுப்பான பையனா இருந்தான்,அவனோட அம்மாவ ராணி போல ஒரு பெரிய அரண்மனையில     வாழவைக்கனும் அப்படினு அவனோட ப்ரெண்ட்ஸ்ட்ட சொல்லிட்டே இருப்பான்,ஒரு வருடத்திற்கு பிறகு விதி ஆதிக்கின் வாழ்க்கையில் விளையாடியது,திடீரென ஒரு நாள் ஆதிக்கின் தாய் இதய வலியால் இறந்துவிட்டார்,அம்மா வின் இறப்பினை ஏற்றுக் கொள்ள
முடியாமல் தடுமாறினான் ஆதிக்,அதன்பின் நண்பர்களோடு உதவியில் அந்த ஊரே திரும்பி பார்க்கும்படி இறுதிச்சடங்கை முடித்தான்,அதுவரை அவன் உணராத ஒரு தனிமை அவனை வாட்டியது எங்கு பார்த்தாலும் அவனுடைய அம்மாவின் உருவம் தோன்றுவது போல் உணர்ந்தான்,அந்த இழப்பிலிருந்து வெளிவர முடியாமல் கஷ்டப்பட்டான்,இரவு நேரங்களில் அம்மா அம்மா என கத்தி அழுதான்,திடீரென அவனுக்கு ஒரு பெண்ணின் குரல் கேட்டது,ஆதிக் அழாதடா என்று ,அவனுடைய தாயின் குரலை கேட்பது போல் மகிழ்ச்சியடைந்தான்,அந்தக் குரல் அவன் பக்கத்து வீட்டின் பெண்ணின் குரல்,சோனியா இங்க ஏன் வந்த ,என் அம்மா இல்ல சோனியா காணும் சோனியா என்று கதறினான்,சோனியா ஆதிக்கின் தாய்க்கு பிடித்த பெண்,சிறு வயதிலிருந்தே ஆதிக் சோனியா இருவரும் சிறந்த நண்பர்கள்,ஆனால் இவர்கள் பேசுவதை விரும்பாதவன் சோனியாவின் தம்பி...இரண்டு வாரத்திற்கு பின்,

கனவே கலையாதேTahanan ng mga kuwento. Tumuklas ngayon