கனவெல்லாம் நீதானே

432 27 5
                                    

  கனவு என்பது என்ன என்று பதினாறு வயது வரும் வரை பலருக்கு புரிவதில்லை,கனவு உறக்கத்தில் மட்டும் வருவது என பலர் எண்ணிக்கொண்டு உள்ளனர்,கனவு புரட்சியாளர்களுக்கும் காதலர்களுக்கும் நீங்காத ஒன்று,,
இளம் வயதினருக்கு உள்ள ஒரே புரட்சி காதல்...

காதல்...

தினேஷ்,பட வாய்ப்பிற்காக காத்திருக்கும் ஒரு இளைஞனின் காதல்தான் இது ...சிறு வயது முதலே தன்னை சினிமாவிற்கு என அற்பணித்தவன்,சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதையே முழு மூச்சாய் எண்ணி வாழ்ந்து வருபவன்,25 வயது நடக்கும் இவனது இன்றைய நாள் வரை பெண்ணின் பாசம் அறியாதவன்,இவனை இந்த உலகில் பிறப்பித்து விட்டு ,மறைந்தாள் இவனது தாய்,,தந்தையின் அரவணைப்பில் முற்றிலும் வளர்ந்தவன்,தந்தையை திட்டி பேசும் இந்த வயது இளைஞர்களின் மத்தியில் தந்தையை உண்மை கலந்து நேசிப்பவன்,இவனது கனவு நிறைவேறியதா பார்ப்போம்....

சினிமா என்றாலே ஏவிஎம் ஸ்டுடியோதான்,மறுப்பதற்கு  இதில் ஒன்றும் இல்லை,17 வயது முதல் ஏவிஎம் செல்ல ஆரம்பித்தவனுக்கு இன்று வரை எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை ,காலம் சென்றது,27 வயதில் நீ கண்ட கனவு நிறைவேறும் என்ற ஜோசியர் எண்ணம் நிறைவேறி விடும் போல,அன்று காலை தினேஷ்ற்கு கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் இருந்து ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது,அவரைக் காண செல்லும் வழியில் ஒரு விபத்து,இரு சக்கர வாகனத்தில் தினேஷின் முன் சென்று கொண்டிருந்த ஒரு பெண் தடுமாறி கீழே விழுந்தாள்,தலைக்கவசம் அணியாமல் சென்றதால்,தலையில் பலத்த அடி பட்டது,யாரும் இல்லாத அந்த இடத்தில் ,இரத்தத்தைக் கண்டு கண்ணீர் நிறைய நின்றான்,அவளை மருத்துவமனையில் அனுமதித்த தினேஷ் இரக்கத்தை ஏற்று இலட்சியத்தை மறந்தான்,மருத்துவர் காவியா நலமாக உள்ளார் என தினேஷ்குமாரிடம் கூறிய பின்னரே நிதானம் அடைந்தான்,அந்த நாள் முடிந்தது,இயக்குநரின் மேலாளரிடம் நடந்ததை கூறுவதற்கு முன் அவர் திட்ட ஆரம்பித்தார், வாய்ப்பு வேறு ஒருவருக்கு கிடைத்துவிட்டது என மேலாளர் கூறியதைக் கேட்டு இடிந்து அமர்ந்தவன் ,எழவே இல்லை,தந்தையின் ஆறுதல் அவனுக்கு புரியவில்லை,இரண்டு நாட்கள் கழிந்தது,வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தான் தினேஷ்,வாசலில் சிரித்த முகத்துடன் காவியா,உள்ளே அழைத்து உபசரித்தான்,தந்தையிடம் அறிமுகப்படுத்தினான்,நடந்ததை காவியாவிடம் கூறினான் தினேஷ்,தன்னால் தினேஷின் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டதை எண்ணி வருந்தினாள்,அலைபேசி எண் பகிர்ந்து கொண்டு சென்றாள்,மறுநாள் காலை தினேஷ்ற்கு இயக்குநரின் மேலாளரிடம் இருந்து அழைப்பு வந்தது,உடனே சென்ற தினேஷ் தனது திறமையை நிரூபித்த பின்னர் இயக்குநரால் பாரட்டப்படுகிறான்,அடுத்த படத்தில் கதாநாயகன் நீதான் என்று கூறினார்,மகிழ்ச்சியின் உச்சம் சென்ற தினேஷ் நன்றி கூறினான் ,அந்த நன்றியை உன் காதலி காவியாவிற்கு சொல் அவள்தான் உனக்கு வாய்ப்பு கேட்டு என் வீட்டிற்கு இரவு என கூட நினைக்காமல் உனக்காக வாய்ப்பு கேட்டு நின்றாள் என கூறினார்,அதனைக் கேட்டதும் ஆனந்தக்கண்ணீரில் மூழ்கிய அவன், தான் நடிக்க தேர்வானதை அவளிடம் கூறவில்லை,,நடந்ததை தந்தையிடம் கூறினான்,தான் அவளை காதலிப்பதாக கூறினான்,மகிழ்ச்சியுடன் கேட்டார் தினேஷ் தந்தை,,
மறுநாள்,
காவியா இவனது அழைப்பினை,எதிர்பார்த்தவளாய்,தொலைபேசியை பார்த்தவளாய் இருந்தாள்,தினேஷ் அவனது தந்தை மற்றும் உறவினர்கள் அனைவரும் காவியா வீட்டிற்கு சென்றனர்,கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனாள்,காவியா,இரு வீட்டாரும் நடந்த அனைத்தையும் அறிந்த பின்னர் திருமணத்திற்கு சம்மதித்தனர்,வேண்டாம் என்று ஒரு குரல்,அது காவியா,அதிர்ச்சியில் உறவினர்கள்,உடனே சிரித்துக் கொண்டே காவியா ,இப்போது திருமணம் வேண்டாம் ,என் மருத்துவ படிப்பு முடிந்ததும் திருமணம் இருக்கட்டும்,இப்போது நிச்சயம் செய்து கொள்ளலாம் என்றால்,அனைவரும் சிரித்த நிலையில் அவர்களது விருப்பம் போல நிச்சயம் செய்து கொண்டனர், மறுநாள் இருவரும் சந்தித்தனர்,தினேஷ் ஏன் திருமணம் இப்போது வேண்டாம் என்றாய் என கேட்டான்,மக்கு என அவனது தலையில் அடித்தாள் காவியா,,
ஒரு வருடத்திற்கு பிறகு நீ பெரிய நடிகன் ,நான் டாக்டர்,அதற்கு பிறகு காதலிக்க நேரமிருக்காது,பீட்ச் சினிமா என்று சுத்த முடியாது ,அதற்குத்தான் இந்த ஒரு வருடம் காதலா .....என முத்தமிட்டவளாய் கூறினாள்,,,,,

காதலால் இலட்சியம் அழிந்துவிடும் என சிலர் நினைக்கின்றனர்,காதல் கடவுளை விட சக்தி படைத்தது,,,

உண்மையாக நாம் நேசிக்கும் அனைத்தும் நமக்கே உரியது..

அன்புடன்,
  டேவிட்

கனவே கலையாதேWhere stories live. Discover now