காதல் காதல் காதல் எங்கு பார்த்தாலும் காதல்,காதல் இல்லாம வாழ முடியாது,அதுதான் உண்மை,உயிருள்ள அனைத்திலும் கண்டிப்பாக காதல் இருக்கும்,...
ஜில்லுனு ஒரு காதல் ,ஷாஜகான் ஜம்முவில் பெரிய வணிகன் மகன் ,மும்தாஜ் இவளும் ஜம்முவில் பெரிய வணிகன் மகள்,அரசியல் தலைவர்களை விட இவர்களின் தந்தையர்கள் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள்,இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தினர் ,இவர்களிடம் தொழிலில் உள்ள கருத்து வேறுபட்டால் இரு குடும்பத்திற்கும் இடையே பிளவு ஏற்பட்டு விட்டது,சிறு வயதிலேயே மும்தாஜ் ஷாஜகானுக்கு என இருவீட்டாரும் முடிவு செய்து கொண்டனர்,காலப்போக்கில் அது ஷாஜகான் மும்தாஜ் இடையே காதலாக மலர்ந்தது ,தற்போது இவர்களது தந்தையினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவர்களின் காதலுக்கு இடைவெளி ஏற்படுத்தியது,ஷாஜகான் மும்தாஜ் பற்றியும் மும்தாஜ் ஷாஜகான் பற்றியும் நினைத்து கண்ணீரிலே காதல் செய்தனர்,இதற்கிடையில் பாகிஸ்தான் இராணுவம் ஜம்முவை கைப்பற்ற அங்குள்ள
வணிகர்களிடன் வாரிசுகளை கடத்தி இந்திய இராணுவத்தை மிரட்டுவோம் என திட்டமிட்டது,,
ஷைலஜா ,மும்தாஜின் சகோதரி ஆவாள்,அவளது 18 வது பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடு நடைபெற்றது,நீண்ட நாட்களுக்கு பின் மும்தாஜை சந்திக்கப் போவதை எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்ந்து போனான் ஷாஜகான்..அவளது அழகிற்கு இணையான பரிசு தர வேண்டும் என எண்ணினான்,ஷைலஜா வின் பிறந்த நாள் சிறப்பாக நடைபெற்று வந்தது.,ஷைலஜாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டு,மும்தாஜிடம் சென்றான்,அறையில் ஷாஜகானை நினைத்து அழுத நிலையில் அமர்ந்திருந்தாள்,அவளருகே சென்ற ஷாஜகான்,அவள் கன்னத்தில் முத்தமிட்டு வெள்ளி தாஜ்மஹாலை பரிசாக வழங்கினான்,அவனது அன்பைப் பெற்ற அவள்,அவன் மீது சாய்ந்தவளாய் என்னை விட்டு எங்கும் செல்லாதே என்னுடனேயே இரு என்றாள்...திடீரென உள்ளே நுழைந்த இருவர் ஷாஜகான் மும்தாஜை கடத்தி சென்றனர்,..
இரண்டு நாட்களுக்கு பின்,அனைத்து செய்தி பத்திரிக்கையிலும் ஜம்முவை ஒப்படைக்கும் வரை இது போன்ற கடத்தல் தொடரும் என பாகிஸ்தான் இராணுவம் கூறியது நீர் போல் பரவியது, ஷாஜகான் மும்தாஜ் இருவரையும் காப்பாற்றுங்கள் என்று அவர்களது தந்தையினர் அரசிற்கு நெருக்கடி தந்தனர்,இதனால் பரபரப்பு அதிகமானது,இந்நிலையில் ஷாஜகான் மும்தாஜ் மயக்க நிலையில் பாகிஸ்தானில் இருந்தனர்,இந்திய இராணுவம் அவர்களை காப்பாற்ற பல முயற்சியில் இறங்கியது,அனைத்தும் தோல்வி தந்தது, ஷாஜகான் மும்தாஜ் மயக்கத்தில் இருந்து எழுந்தனர், ஷாஜகான் மும்தாஜை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினான்,மும்தாஜ் ஷாஜகானை விட்டுவிடுங்கள் என கெஞ்சினாள்,ஒரு மாதம் ஆனது,இந்திய இராணுவம் இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை,இதனால் ஷாஜகான் மும்தாஜை கொலை செய்து இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் அப்போதுதான் நம்மீது பயம் இருக்குமென்று எண்ணினர், ஷாஜகான் மற்றும் மும்தாஜை கொலை செய்ய வெளியே அழைத்து செல்லும் வழியில் மும்தாஜ் ,அங்கு இருந்த இளைஞர்களிடம் என் காதலனை காப்பாற்றுங்கள் என கத்தினாள், ஷாஜகான் என் காதலியை காப்பாற்றுங்கள் என கத்தினான்,அவரவர் உயிர் மீது ஆசை கொள்ளாமல் காதலை காப்பாற்றுங்கள் என்ற இருவரின்
தூய்மையான காதலை வாழவைக்க வேண்டும் என்று எண்ணி அந்த நாட்டில் உள்ள அனைத்து காதலர்களும் ,மும்தாஜ் ஷாஜகானை விடுவித்து அவர்கள் நாட்டிற்கு அனுப்பவேண்டும் என்று போராடினர்,மறுத்தால் நம் நாட்டில் கோடிகணக்கில் உயிர் போகும் என பாகிஸ்தான் மக்கள் ,பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக போராடினர்,வேறு வழியின்றி பாகிஸ்தான் இராணுவம் ஷாஜகான் மும்தாஜை விடுவித்தது,பாகிஸ்தானில் இருந்த காதலர்களின் முன்னிலையிலே ஷாஜகான் மும்தாஜ் திருமணம் நடத்தி அவர்கள் இருவரையும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்.... மகிழ்ச்சியோடு ஷாஜகான் மும்தாஜ் இருவரும் இந்தியா வந்தனர்....இராணுவத்தால் முடியாததை கூட காதலர்கள் சாதிப்பார்கள்....
அன்புடன்,
டேவிட்
YOU ARE READING
கனவே கலையாதே
Romanceகாதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவ...