திவின் ,அவனுடைய 20 வயது வரை அவனது நண்பர்களோடு வாழ்க்கையை கடந்ததால் பெண் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவனாய் இருந்தான் திவின்,பெண் என்ற வாரத்தைக்கே அர்த்தம் அறியாதவன் அந்த பெண்ணினால் ஏற்படும் காதலைப் பற்றி கண்டிப்பாக அறிந்திருக்க மாட்டான்,ஆனால் கடவுள் மனிதனை படைக்கும் போதே அந்த மனிதன் எந்த உணர்வை உணராவிட்டாலும் காதல் உணர்வை கண்டிப்பாக உணர வேண்டும் என்றே மனிதனை படைக்கிறான் இறைவன்,...ஆண் நண்பர்களோடு மட்டுமே பழகி திரிந்த திவினுக்கு,அவனுடைய நண்பர்கள் அவரவர்க்கென ஒரு வேலை தேடி சென்ற பின் ,திவின் தனி ஒருவனாய் தவிக்கிறான், அவனின் நிலையை புரிந்துகொண்டு திவின்,தானும் ஒரு வேலைக்கு சென்றால் நண்பர்களை தேட வேண்டிய அவசியமில்லை என எண்ணி அவனுக்கென ஒரு வேலையை தேட ஆரம்பிக்கிறான்,வீட்டை விட்டு ஓடி போனவங்கள கூட தேடினா சீக்கிரம் கிடைச்சிடுவாங்க,ஆனால் வேலை தேடி அலையறவங்கள்க்கு மட்டும் அவ்ளோ சீக்கிரம் வேலை கிடைக்காது,அதே நிலைமைதான் திவினுக்கு,அவன் ஏறி இறங்காத கம்பெனியே இல்ல,ஆனா எல்லா இடத்துலயும் இவனுக்கு கிடைச்ச ஒரே பதில் நாங்க உங்க மொபைல் நம்பர்க்கு கூப்புட்றோம் அப்படின்ற பதில்தான்,வேலை தேடி தேடியே இரண்டு மாதம் கடந்தது,திடீரென ஒரு நாள் ,திவின் போன ஜென்மத்தில செய்த நல்லது என்னவோ தெரியல ,ஒரு கம்பெனியில் இருந்து திவினுக்கு அழைப்பு வந்தது,மகிழ்ச்சியோடு கம்பெனியின் உள்ளே சென்ற திவினுக்கு போட்டியாக இன்னொருவர் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்,இவங்க இரண்டு பேர்ல யாராவது ஒருவர்க்கு மட்டுமே அந்த வேலை வாய்ப்பு,அந்த இருவர்களுள் ஒருத்தன் திவின் ,மற்றொருத்தங்க ஜெஸ்ஸி என்ற பெண்,இவங்க இரண்டு பேர்ட்டயும் ஒரே கேள்விதான் கேட்டாங்க ,அந்த கேள்விக்கு சரியான பதிலை ஜெஸ்ஸி சொல்லி செலக்ட் ஆயிட்டா,திவின் திணறிட்டே கம்பெனி விட்டு வெளியே வந்தான்,அந்த கேள்வி என்னான்னா ரொம்ப சிம்பிள் ,காதல் தோல்வி அதிகம் ஆணுக்கா பெண்ணுக்கானு , திவின் ஆணுக்கு அப்டினு சொன்னான் அவன் செலக்ட் ஆகல,ஜெஸ்ஸி பெண்ணுக்கு அப்டினு சொன்னா அவ செலக்ட் ஆயிட்டா,..
YOU ARE READING
கனவே கலையாதே
Romanceகாதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவ...