பிருந்தா என் கண்ணழகி

400 4 1
                                    

ஜெயிலில்,,,

விலகிச் செல்ல தெரிந்திருந்தால் நான் உன்னை பார்த்த அன்றே சென்றிருப்பேன்,உன் பார்வை போதையில் தொலைத்த என் மனது நீ என்னை வேண்டாம் என்று கூறிய பிறகும் கூட என் மனம் என்னிடம் வரவில்லை ,என் ஏக்கங்கள் குறையவில்லை,....

என்னடா எதுவுமே புரியலன்னு பார்க்கிறிங்களா, பிருந்தா என் ஆளு,பிருந்தாவ நான் முதல்முறையா ஹோட்டல்ல பார்த்தங்க,அவங்க சாப்பிட வரல்ல,அன்றைக்கு பிருந்தாவுக்கு பிறந்தநாள் அதனால அந்த ஹோட்டல் பக்கத்துல இருக்க இயலாதவர்களுக்கு இலவசமா சாப்பாடு வாங்கி தர வரலங்க,அவ அங்க அவளுக்கு மட்டும் சாப்பாடு வாங்கிட்டு போனா,ஓ நான் அங்க என்ன பண்றேனு கேக்கிறீங்களா,நாதாங்க சமையல் மாஸ்டர்,சரி இதுல எங்க லவ் இருக்குனு யோசிக்காதிங்க, அடுத்த நாள் காலைல வேகமா வந்தாங்க பிருந்தா,வந்து ஒரு அடி விட்டா பாருங்க ,என்னை இல்ல என்னோட ஹோட்டல் ஓனர,என்னடா ஹோட்டல் நடத்துறீங்க ரசத்துல சர்க்கரை போட்டு தறீங்க அப்டினு செமயா திட்டிட்டு ,கடைசியில எங்க ஹோட்டல் உரிமைய ரத்து பண்ணிட்டு போயிட்டா,அதற்கு அப்றம்தா தெரிஞ்சுது இவ சாப்பிட வரல்ல,சோதனை பண்ண வந்துற்கானு,ஆனா பாருங்க என்னை எதுவும் திட்டாம போயிட்டா,ஏன்னு அப்றம் சொல்றேன்,ஹோட்டல் மூடினதுக்கு அப்றம் எனக்கு வேலையே இல்லாம சுத்திட்டு இருந்தேன்,நாட்கள் கடந்துச்சு....,

ஒரு நாள் எதர்ச்சியா பிருந்தாவ ரோட்ல பார்த்தேன்,ஹோட்டல திருட்டுத்தனமா நடத்துறீங்களான்னு சிரிச்சிட்டே கேட்டா,நா கோபமே படாம, நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லிட்டு அவ கலாய்ச்சதுக்கு சமமா கலாய்ச்சிட்டு ஓடிட்டேன்,ஓடி ஒரு இடத்துல திரும்பி பார்க்கிறேன்,நான் ஓடவே இல்லன்னு அப்போதா தெரிஞ்சுது,ஓடினது என் மனசுங்க, பிருந்தா பின்னாடி,நான் சொன்னத கேட்டதும் எதுவுமே பேசாம கம்னு போயிட்டா பிருந்தா,உங்ககிட்ட ஒன்னு சொல்லாம மறச்சிட்டங்க,பிருந்தா சாப்பாடு வாங்கும்போது யார் தெரியுமா ரசத்துல சர்க்கரை போட்டது,நான்தான்!அப்றம் என்னங்க ஒரு மரகதச்சிலை பிருந்தான்னு பேர்ல என் முன்னாடி வந்து நின்னா எனக்கு என்னங்க புரியும்,அப்பவே அந்த கண்ணழகிட்ட என் உசிர தொலைச்சிட்டங்க,ஆனா என் உசிரோட என் ஓனரோட ஹோட்டல்லும் போயிடுச்சு,அதற்கு அப்றம் பிருந்தா வேலை செய்ற ஆபிஸ்க்கு ஆப்போஸிட்லயே ஒரு ஹோட்டல்ல வேலைக்கு சேந்தேன்,பிருந்தாவ தினமும் பார்க்க முடிஞ்சுது,பிருந்தாக்கு டிபன் லஞ்ச் எல்லாம் பார்சல்தா,நான் காதலிக்கிறேன்னு சொன்னதால என்னை ஆபிஸ் உள்ளேயே விடல,சரி தூரத்துல இருந்தே பார்த்துக்கலாம்னு என் மனச பிருந்தாக்காட்ட தேடிட்டிருந்தேன்,காலங்கள் கடந்தது,பிருந்தா சிரிச்சா மழைச்சாரல் படும்போது நமக்குள்ள ஒரு சில்லுன்னு ஒரு உணர்வு வரும்ல அப்படி இருந்துச்சு,அதே உணர்வோடதான் ஒரு வேகத்துல பிருந்தா அவ ஆபிஸ்க்கு போறான்னு தெரியாம அவ பின்னாடியே போயிட்டேன்,ஆபிஸர்லா நல்லா அடி வெளுத்து வாங்கிட்டானுங்க,ஒரு பத்து நாள் ஜெயில்,.....

இந்த பத்து நாள்ல அங்க எதுவும் மாறியிருக்காதுன்னு போனேன்,ஆனா இரண்டு விஷயம் மாறிருந்துச்சு ,ஒன்னு நான் வேலை செஞ்ச இடத்துல இன்னொருத்தன் இருந்தான்,இரண்டு என் ஆளு பிருந்தாவுக்கு டிரான்ஸ்பர்,எந்த ஊர் போலீஸ்ட்ட அடி வாங்கினாலும் என் பிருந்தாட்ட இருக்க என் மனச தேடி கண்டுபிடிக்காம விடமாட்டேன்,கொஞ்சம் குழப்பமா இருக்கா,எனக்கும் குழப்பமாதா இருக்கு,என் பிருந்தா எந்த ஊருக்கு போயிருப்பா ??????

தொடரும்......

அன்புடன்,
டேவிட்

கனவே கலையாதேOù les histoires vivent. Découvrez maintenant