வெர்ஜின் பையன்

294 8 3
                                    

கதையின் நாயகன் அவனுடைய காதலை பற்றி சொல்வதைப் போல் கதை அமைந்திருக்கும்..

நான் அரவிந்த்,என் வாழ்க்கையில இரண்டு பொண்ணுங்க என்னை கலங்க வச்சிட்டு போய்ட்டாங்க,அவங்க இரண்டு பேரும் வெவ்வேறான கேரக்டர்,ஆனா என்னை வேணான்னு சொல்லிட்டு போகும் போது அவங்க சொன்ன ஒரே பதில்,உனக்கு லவ் செட் ஆகவே ஆகாதுனு,என்னோட பஸ்ட் லவ் ,எனக்கு 17 வயசு அப்போ கீதா கீதான்னு ஒருத்திய லவ் பண்ணேன்,என் பக்கத்து வீட்டு பொண்ணு ,பார்க்க தேவதை மாதிரி இருப்பா,அவள பார்த்தவுடனே பத்திக்குச்சுங்க,ஒரு வருஷமா ஒன் ஸைடா லவ் பண்ணேன்,அவ ஸகூல் போகும் போது அவ ஸ்கூல் வரையும் பின்னாடியே போவேன்,என்ன மாதிரி பசங்கள்ட்ட இருக்க ஒரு பெரிய மைனஸ் ,லவ் பண்ற பொண்ணுட்ட பேசாம இருக்குறதுதான்ங்க,அவ பின்னாடி போகும் போதெல்லாம் என்னை பார்த்து கம்முன்னு போனவ அதற்கு அப்புறம் சிரிக்க ஆரம்பிச்சா,அடடடா ஒரு வருஷ உழைப்புக்கு பலன் கிடைச்சிடுச்சி போலன்னு சந்தோஷமா இருந்தேன்,அடுத்த நாள் அவகிட்ட லவ் சொல்ல போலான்னு நினைச்சேன்,ஆனா என் கெட்ட நேரம் அன்ணைக்கு ஞாயிற்றுக்கிழமை,சரி ஒரு நாள் போகட்டும் அப்படின்னு படுத்தேன்,திடீர்னு என் வீட்டுக்கு கீதா ஒரு பையனோட வந்தா,சரி அவளோட சித்தி பையனா இருப்பானு நினைச்சேன்,பொதுவா எல்லா பொண்ணுங்களும் அவங்க கூட தம்பிய கூட்டிட்டுதானே வெளியே வர்வாங்க,நானும் அப்படி நினைச்சிதான் வாங்க அப்படின்னு சிரிச்சிட்டே சொன்னேன்,உள்ளே வந்தவுடனே அண்ணா நல்லா இருக்கிங்களான்னு கேட்டா,அப்பவே ஒரு இடி என் மேல விழுந்துட்ச்சி,அண்ணா இவன் தினேஷ் என்னோட லவ்வர்னா ன்னு சொன்னா இரண்டாவது இடி விழுந்துட்ச்சி,எங்க லவ்க்கு வீட்ல ஓகே சொல்லிட்டாங்கன்னா ,நான் இப்போ ஏன் இங்க வந்தேன்னா நீங்க இவ்ளோ நாளா எனக்கு செக்யூரிட்டி போல பின்னாடியே வந்தீங்க ,நானும் பத்திரமா இருந்தேன்,ஆனா அது இனிமே வேணா,தினேஷ் என்னை பாத்துப்பான் அண்ணா அப்படின்னு சொல்லிட்டு,போனவ திரும்ப வந்து அண்ணானு கூப்பிட்டா,என்னமானு கேட்டேன்,உனக்குல்லா லவ் செட் ஆகவே ஆகாதுடா லூசுன்னு சொல்லிட்டு போய்ட்டா,மொத்த இடியும் ஒன்னா என் மேல விழுந்தது போல இருந்துச்சு,அதுக்கப்றம்இனி லவ் பண்ணவே கூடாதுன்னு முடிவு பண்ணேன்,எங்க அம்மாட்ட நடந்ததை சொல்லி அழுதேன், விடுடா கண்ணா அழாதடான்னு ஆறுதல் சொன்னாங்க,..

கனவே கலையாதேTempat cerita menjadi hidup. Temukan sekarang